மழலை அமுதம்/எங்கள் காந்தித் தாத்தா

எங்கள் காந்தித் தாத்தா

1. எங்கள் காந்தித் தாத்தா
     எல்லோருக்கும் நல்லவர்
     பொங்கும் சிரிப்புத் தாத்தா
     பொய் சொல்லவே மாட்டார்.

2. தங்கம் போல நல்லவர்
     சத்தியம் கடவுள் என்பவர்
     எங்கள் காந்தி தாத்தா
     இந்தியாவின் தந்தையாம்.
 
3. எங்கள் நாட்டின் விடுதலை
     எமக்கு வாங்கித் தந்தவர்
     அன்பு வழியில் சென்றவர்
     அஹிம்சை போற்றி நின்றவர்.

4. இந்திய நாட்டின் தந்தையாய்
     என்றும் போற்றும் காந்தியாம்
     எங்கள் காந்தி தாத்தா
     எல்லோருக்கும் நல்லவர்.