மழலை அமுதம்/நிழல்
என்ன அதிசயம் என்ன அதிசயம்
இவனைப் பாரடா
என்னைப் போலவே இருந்திடுவான்
இவனும் யாரடா
காலையிலே நீண்டிருப்பான்
பனைமரம் போலே
கடும் பகலில் குள்ளளனாய் விடுவான்
என்ன அதிசயமே
குதித்தால் குதிப்பான்
கூடவே வருவான்
என்ன அதிசயமே
இருட்டைக் கண்டதும்
எங்கோ மறைவான்
என்ன அதிசயமே
மறுநாள் காலை மீண்டும் வருவான்
என்ன அதிசயமே
என்றன் நிழலை எட்டி உதைத்தாலும்
எங்கோ போக மாட்டான்
என்றும் நண்பனாக இருந்திடுவான்
என்றன் நிழல்தானே