மழலை அமுதம்/கட்டுமரம்

கட்டுமரம்

      கட்டுமரம் ஏலேலோ
      போகுது பார் ஐலசா
      பட்டுப் பூச்சி ஏலேலோ
      பறக்குது பார் ஐலசா
      மலையைப் போல ஏலேலோ
      அலை வந்தாலும் ஜலசா
      மதியாமல் ஏலேலோ
      நீஞ்சுது பார் ஐலசா
      தொலைவினிலே ஏலேலோ
      செல்லுது பார் ஐலசா
      வெள்ளைக் குதிரை ஏலேலோ
      துள்ளிக் குதிக்கும் ஐலசா
      கொள்ளை மீன்கள் ஏலேலோ
      கூடை வரும் ஜலசா

"https://ta.wikisource.org/w/index.php?title=மழலை_அமுதம்/கட்டுமரம்&oldid=1070125" இலிருந்து மீள்விக்கப்பட்டது