மழலை அமுதம்/மலை மேலே மஞ்சு
மலை மேலே மஞ்சு
மலை மேலே மஞ்சு
மல்லிகைப் பூப் பஞ்சு
மாலை வெய்யில் கொஞ்சும்
வந்து விளையாடும்
தங்கத் தீவைப் போலே
பொங்கும் தீயைப் பாராய்
ஐந்து குழந்தை பாவம்
ஆண்டி ஆகிப் போனாள்
கஞ்சிக் கென்ன செய்வாள்
பஞ்சம் பஞ்சம் பாவம்
கொட்டிக் கொடம்மா கொட்டிக் கொடு
கொட்டிக் கொடம்மா கொட்டிக் கொடு