மழலை அமுதம்/கும்மாயம்

கும்மாயம்
(பாயாசம்)


              கும்மா கும்மா கும்மாயம்
              கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்
              அம்மா தெய்வம் கும்பிடு
              அப்பா தெய்வம் கும்பிடு
              அவரே தெய்வம் கும்பிடு
              அன்பாய் என்றும் நடந்திடு
              கும்மா கும்மா கும்மாயம்
              கொஞ்சிக் கொடுப்பாள் கும்மாயம்

   
குறிப்பு : கும்மாயம் என்பதற்கு பாயாசம் என்பது பொருள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மழலை_அமுதம்/கும்மாயம்&oldid=1070116" இலிருந்து மீள்விக்கப்பட்டது