மழலை அமுதம்/வெற்றி வடிவேலன்


வெற்றி வடிவேலன்

          வெற்றி வடி வேலன்
          வீரர் தொழும் சீலன்
          பற்றி இரு தாளைப்
          பக்தி செயும் வேளை
          அற்று விடும் துன்பம்
          சுற்றி யெழும் இன்பம்
          பற்று விடுத் தெல்லாம்
          பார்த்துரை செய் சொல்லாம்.