மாவீரர் மருதுபாண்டியர்/மருதுசகோதரர்கள்
2
மருது சகோதரர்கள்
தமிழகத்தில் உள்ள சமூக கல்வி நிலைகளில் பிற்பட்ட வகுப்பினர்களில் “அகம்படிய” குலத்தினரும் ஆவர். இந்த சமூகத்தினர், தமிழகத்தில் பரவலாக இருப்பதாகவும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எனவும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைச் சீமை மக்கள் கணக்கெடுப்பு (1901) அறிக்கை[1]யில், வேளாளப் பெருமக்களை யொத்த வாழ்க்கை நிலையில் உள்ள இவர்கள், கோவை, செங்கை, சேலம், வடஆற்காடு மாவட்டங்களில், மற்றப் பகுதிகளைவிட குறைவாக இருப்பாகவும், மதுரை மாவட்டத்தில் (இன்றைய இராமநாதபுரம், பசும்பொன் மாவட்டங்களின் மறவர் சமூக ஜமீந்தார்களின் பணியாளர்களாக இருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் வாழ்க்கைநிலை சமுதாய உறவுகள், மரபுகளைப் பின்பற்றுதல் ஆகியவைகளில் கள்ளர், மறவர் ஆகிய குலத்தவரை ஒத்து இருக்கின்றனர் என்றும் வசதிபடைத்த இந்த சமூகத்தினர் பிறப்பு, பூப்பு, மணவினை, இறப்பு ஆகிய சடங்குகளில் வெள்ளாளரையும் வசதிக்குறைவானவர்கள். மறவர்களையும், முன்னவர்களால் கொண்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் கணக்கு அறிக்கைகளில் இந்த மங்கள். கள்ளரி, மறவர் குலத்தின் மற்றொரு பிரிவினராகவே குறிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் இவர்கள், தாங்கள் செம்பி நாட்டு மறவர் வழியினர் என்று கூறிக் கொள்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இவர்கள் “தெற்கத்தியார்” என வழங்கப் படுகின்றனர். காரணம் தெற்கே மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து குடியேறியவர்கள் என்ற பொருளில் இதனைப்போன்றே நெல்லை மாவட்டத்தில் இவர்கள் "கோட்டைப் பிள்ளைமார்" என்று அழைக்கப்படுகின்றனர்.2 "கள்ளர், மறவர், கனத்ததோர் அகம்படியார் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளரானாரே" என்ற வழக்கும் இதனை உறுதி செய்கின்றது. இராமநாதபுரம். சிவகங்கைச்சீமை மன்னர்களது சேவையில் இருந்து வந்த காரணங்களினால் இராமநாதபுரம் மாவட்டத்தில் இவர்கள் "சேர்வைக்காரர்" எனவும் குறிக்கப்படுகின்றனர்.
ஆனால், சோழர் காலத்தில் இந்த சமூகத்தினர் "அகமுடையார்" (தஞ்சை மாவட்டம்) "அகம்படியார்" (தஞ்சை, திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும்) "அகம்படி முதலி" (திருச்சிராப்பள்ளி, செங்கை, தென்னாற்காடு மாவட்டங்களிலும்) என வழங்கப்பட்டனர் என்பதை கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.3 இந்த சமூகத்தைச் சேர்ந்த மொக்கைப் பழனி சேர்வைக்காரரது வீரமக்கள்தான் மருது சகோதரர்கள். சிவகங்கைச் சீமை அரசியலில் சூன்யம் ஏற்பட்டு, குழப்பமும் கொடுங்கோன்மையும் நிலவிய பொழுது, மக்கள் தலைவர்களாக மாறி துணிச்சலுடனும், தீரத்துடனும் போராடி, சீமையின் மானத்தைக் காத்தவர்கள். அவர்கள். இருவரும் பேராற்றலும் போர்த்திறனும் மிகுந்தவர்களாக விளங்கினர். இராமநாதபுரம் சீமையின் தென்மேற்கே உள்ள முக்குளம் என்ற சிற்றூரில் பிறந்த இந்த சகோதரர்களும் அவரது தந்தையார் மொக்கைப் பழனி சேர்வைக்காரரும் இராமநாதபுரத்தில் குடியேறினர்.4 பழனி சேர்வைக்காரர் இராமநாதபுரம் மன்னரது அரசுப் பணியில் இருந்த காரணத்தினால் தம்மக்களும் போர்மறவர்களைப் போன்று படைப்பயிற்சி பெற எற்பாடு செய்தார். காரணம் இராமநாதபுரம் மன்னரது பிரதானியாக சிறந்து விளங்கிய, வயிரவன் சேர்வைக்காரர், வெள்ளையன் சேர்வைக்காரரைப் போன்று தம்மக்களும், அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக, அவையத்து முந்தி இருக்க வேண்டும் என ஆசைப்படடார்.
தமிழகத்தில் உள்ள அகம்படியர் சமூகத்தில், வெள்ளையன் சேர்வைக்காரர் போன்ற சிறந்த ராஜதந்திரியும் தளகர்த்தரும் இதுவரை தோன்றவே இல்லை. கி. பி. 1746.62 வரை சேதுபதி மன்னரது பிரதானியாக இருந்தவர். திருநெல்வேலிப் பாளையக் காரர்கள் அனைவரும், மறவர்களும் நாயக்கர்களும் பயந்து நடுங்கும் வகையில், வெள்ளையன் சேர்வைக்காரர் போர்த்திறன்பெற்று இருந்தார். கி. பி. 1752ல் மைசூர் அரசரது எடுபிடியாக மதுரைக் கோட்டையைப் பிடிக்க வந்த வெள்ளைத்தளபதி கோப்புடன் வாள் போரிட்டு அவரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதுடன், மதுரை அரியணைக்கு உரிய வாரிசும், மறைந்த மதுரை நாயக்க மன்னர் மரபினருமான விஜயகுமார பங்காரு திருமலை நாயக்கருக்கு சேதுபதி மன்னர் விருப்பப்படி மதுரை மன்னராக முடி சூட்டி வைத்து மகிழ்ந்தவர். அவரது மாமனார் வயிரவன் சேர்வைக்காரர் மறவர்சீமையின் சிறந்த தளபதியாக விளங்கிய துடன், வாதாபி போருக்குப் பின்னர், தம்மை ஆன்மீக வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட பல்லவ மன்னரது படைத்தளபதி பரஞ் சோதியாாைப் போன்ற அறவாழ்வை மேற்கொண்டவர். கோவில் திருப்பணி பல செய்தவர்.*
இந்த இருபெரும் தலைவர்களைப் போன்று தமது மக்களும் சிறந்த குடிமக்களாக வளர்ந்து வாழ வேண்டும் என மொக்கை பழனி சேர்வைக்காரர் விரும்பியது இயல்பானதுதான். மருது சாகாதர்களும், துரோணருக்கு வாய்ந்த அச்சுனன், ஏகலைவன் போன்று வாள்வீசிப் போரிடுவதிலும், வளரித்தண்டை எறிந்து விரும்பிய இலக்கைக் காக்குவதிலும், அவர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகில் இல்லை என்னும் அளவில் சிறந்த வீரர்களாக வளர்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர் 5 இவர்களுடன் நெருக்கமாகப்பழகி மகிழும் வாய்ப்பைப் பெற்ற வெள்ளைத்தளபதி வெல்ஷு, அவர்களது வீரவாழ்வை தமது நாட்குறிப்புகளில் இவ்விதம் சித்தரித்து வரைந்துள்ளார். "...... . மருதுசேர்வைக்காரர்கள் என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர்களில் மூத்தவர் வெள்ளை மருது. இவருக்கு நிர்வாகத்தைப் பற்றி எவ்வித சிந்தனையும் கிடையாது. வேட்டைப்பிரியர். தமது பெரும்பாலான பொழுதை வேட்டையாடுவதிலும், துப்பாக்கி சுடுவதிலும் கழித்து வருகிறார். காடுகளில் உள்ள வேங்கை, சிறுத்தை போன்ற மிருகங்களுடன் போராடுவதில் அவருக்கு பெருவிருப்பு இருந்தது. அசாதாரண மனிதனாக விளங்கிய அவர், தமது கை விரல்களுக் கிடையில் ஆற்காட்டு நவாப்பின் வெள்ளி ரூபாய் நாணயத்தை வைத்து வளைத்து ஒடித்து விடுவார். தஞ்சை, திருச்சி, மதுரையில் தங்கி இருந்த பரங்கியருடன் தொடர்பு கொண்டு அவர்களைப்போய் பார்த்து பழகிவந்தார். அவர்களும் இவரிடம் பெருமதிப்பு வைத்து இருந்தனர். அவர்களில் யாராவது காட்டில் வேட்டையாடுவதற்கு விரும்பினால் உடனே அவர்கள் வெள்ளை மருதுவிற்குத்தான் தகவல் அனுப்புவார்கள். அவரும் அதற்கான ஆயத்தங்களை செய்து, காட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்களுக்குத் தகுந்த தற்காப்பும் அளிப்பார். அவரைச் சுற்றிப்பல ஈட்டிக்காரர்கள் இருந்தாலும், புலி, சிறுத்தை போன்ற கொடிய மிருகம் வந்தால் அதனை முதலில் சந்தித்துப் பொருதி, விழ்த்துவது அவர்தான். ... ... ... ...
"அந்தப்பரந்த வளமான சீமையின் அரசராக இருந்தவர் சின்ன மருது. பெரும்பாலும் அவர் சிறுவயலில் வசித்து வந்தார். அவர் கறுப்பாக இருந்தாலும் அவரது எண்ணத்தில், இதயத்தில், மாசு இல்லாதவராக இருந்தார். அழகாகவும், அன்புடனும் பழகும் பண்பாளராகவும் இருந்தார். அவரது தலையசைவைக் கட்டளையாகக் கொள்ளும் அந்த சீமை மக்கள் அவரை எளிதில் கண்டு பேசி தங்களது தேவைகளைத் தெரிவிக்கக் கூடிய வகையில் காவல் இல்லாத மாளிகை யொன்றில் வாழ்ந்து இருந்தார். நான் கி.பி 1795 பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரைப்போய்ச் சந்திக்கச் சென்ற பொழுது, அங்கு வந்திருந்த மக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியுற்றதை நோட்டமிட்டேன். அதன்பின்னர் நானும் அவரும் நண்பர்களானோம். நான் மதுரையில் இருக்கும் வரை அவர் எனக்கு அன்பளிப்புக்களாக உயர்ந்த ரக அரிசி, பழங்கள் ஆகிய வைகளை அனுப்புவதற்குத் தவறுவதில்லை. குறிப்பாக தடித்த தோலும் மிகவும் இனிப்பும் உள்ள பெரிய ஆரஞ்சுப்பழங்களை அனுப்பி வைப்பார். அந்த ரகப்பழங்களை இந்தியாவில் வேறு எந்தப்பகுதியிலும் நான் பார்த்ததே இல்லை. ஈட்டி எறிவதற்கும், வாள்போர் செய்யவும், குறிப்பிட்ட தொலைவில் வளரித்தண்டு வீசித் தாக்குவதையும் எனக்கு கற்றுக் கொடுத் தவரே அவர்தான்" என கர்னல் வெல்ஷின் குறிப்புகள் கூறுகின்றன.6 இந்தப் பொதுப் பண்புகளைத் தவிர பெரிய மருது என்ற வெள்ளை மருதுவை விட, சின்னமருதுவிடம் சில சிறப்பான பண்புகளும் இருந்தன. எதிரியின் இயல்புகளை - குறிப்பாக பலவீனங்கனை விரைவாகப் புரிந்து கொள்ளுதல் - அவைகளைத் தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளுதல் ஆகியவைகளில் அவர் திறமை பெற்று இருந்தார். அத்துடன் தமக்கு நல்லது என்று நம்புவதை அதன் விளைவு கருதாது துணிந்து மேற் கொள்ளும் துணிச்சலும் அவருக்கு இருந்தது. அவரது நடவடிக் கைகளைக் கண்டு அவரது எதிரிகள் அச்சமும் பீதியும் அடைந் தனர். இந்த நாட்டு மக்களை மிகவும் இழிவாக எண்ணி இருந்த பரங்கியர்களுக்குக்கூட "சின்ன மருது" என்றால் சற்று நிதானமாக நடக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்படுவது உண்டு. இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பாளரான கர்னல் மார்ட் டின்ஸ் என்ற பரங்கி, சின்ன மருதுவின் வீர சாகசங்களில் மனத்தைப் பறிகொடுத்து அவரது நெருங்கிய நண்பராக இருந்தான். காால் வெல்ஷ் சின்னமருதுவிடம் வளரி, வாள். வேல், ஆகிய தமிழர்களது ஆயுதங்களை திறமையாகப் பயன்படுத்தும் நுணுக்கங்களை சின்னமருதுவிடம் கற்று அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டான். அவர் பாங்கிர் கொண்ட மதிப்பும் பற்றும், வீர விளையாட்டுகளுக்கு - முரட்டுத்தனத்திற்கு - சில நேரங்களில் மூடு திரையாகவும் உதவியதைச் சில நிகழ்ச்சிகள் காட்டுகினுறன.
நவாப்பின் பொறுப்பில் உள்ள மறவர் சீமையின் முக்கியமான ஆறு காட்டைகளில் இரண்டு சிவகங்கைச் சீமையில் பிருந்தன. ஒன்று திருப்பத்துார். மற்றொன்று திருப்பூவனம்.7 திருப்பூவனம் கோட்டையை மதுரையை ஆட்சிபுரிந்த கூன் பாண்டியன் அமைத்ததாக சில ஆவணங்களில் காணப்படுகின்றது8 பதினாறு கொத்தளங்களும் முப்பத்து மூன்று அடி உயரமும் இருபத்து நான்கு அடி அகலமும் கொண்ட நான்கு மேடைகளுடன் அந்தக்கோட்டை காணப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது.9 மதுரையின் எல்லைக் காவல் அரணாக அமைந்துள்ள இந்த கோட்டையின் மீது சின்னமருது சேர்வைக்காரரது கவனம் திரும்பியது. மெதுவாக அதனை அழிக்கத் திட்டமிட்டார். அவரது ஆட்கள் அந்தக்கோட்டையை இரவுபகலாக மெதுவாக அழித்துவந்தனர்.10 அந்தக்கோட்டைப் பொறுப்பில் இருந்த நவாப்பின் பணியாளர் (கிலேதார்) மீர் அகமது என்பவரைத் தாக்கி அவமானப்படுத்தினர். அவரது பணியில் இருந்து துரத்தினர். இந்த நிகழ்ச்சியைக் கேள்விபட்ட நவாப் தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கவர்னரைக் கோரினார். இராமநாதபுரம் கோட்டைப் பொறுப்பில் இருந்த கோட்டைப் பொறுப்பாளரும் சின்னமருதுவின் நண்பருமான கர்னல் மார்டின்ஸ் அனுப்பிய பொய்யான அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூவனத்தில் அத்தகைய நிகழ்ச்சி நடக்கவில்லையென்றும், அச்சமயம் சின்னமருது சேர்வைக்காரர் சுகவீனமாக இருப்பதாகவும் மார்டின்ஸ் அறிக்கையில் கண்டிருந்தது.11 இதனை மறுத்து நவாப் மீண்டும் திருப்பூவன நிகழ்ச்சி பற்றிய ஆதாரங்களை அளித்தவுடன், சிக்கந்தர் மலையில் நிலை கொண்டு இருந்த கர்னல் பிரவுன் திருப்பூவனம்சென்று கோட்டை யின் பொறுப்பை மேற்கொண்டான். 12இருபத்து இரண்டு ஆண்டுகள் அந்தக் கோட்டைப் பொறுப்பாளராக இருந்த மீர் அகமது மூளலாகான் மதுரைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்னொரு நிகழ்ச்சி: சிவகங்கைச் சீமை கழனிவாசல் கிராமத்திற்கு வந்த தொண்டமான் சீமையைச் சேர்ந்த இருவர், மருது சேர்வைக்காரர் பணியாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கோரச் செயலுக்கு சரியான காரணம் எது எனத் தெரிய வில்லை. இதனை வன்மையாகக் கண்டித்து, அனுப்பிய தொண்ட மானது குற்றச்சாட்டுக்களின் மீது சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கு கும்பெனியார் அறிவுரையைக் கூட வழங்காமல் மழுப்பி விட்டனர்.13
மற்றொரு நிகழ்ச்சியில், இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த திருவாடானை சுங்கச்சாவடி வழியாகக் கடத்தப்பட்ட சிவகங்கைச் சீமைப் பொருட்களுக்குரிய சுங்கத்தீர்வைத் தொகையான ரூ. 15,000/-யை, இராமநாதபுரம் அரசுக்கு செலுத்தாமல் சிவகங்கைப் பிரதானி அலைக்கழிவு செய்து காலங்கடத்தி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத முத்துராமலிங்க சேதுபதி, கும்பெனிக் கலெக்டரது கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்று பரிகாரம் கோரிய பொழுது, தமது இயலாத் தன்மையைத் தெரிவித்ததுடன் மேலிடத்திற்கு முறையீடு செய்யுமாறு மன்னருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அந்த முறையீட்டின் மீது கும்பெனியார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.14 பொறுமை இழந்த சேதுபதி மன்னர், தமது நாட்டின் வழியே சிவகங்கைச் சிமைக்குச் செல்லும் வாணிபப் போக்குவரத்து வழியை மாற்றி முழுவதுமாக தமது சீமை வழியே வாணிபச் சாத்துக்கள் செல்லுமாறு நிர்ப்பந்தித்த பொழுது, வாணிபச் சாத்து வருமானத்தை இழந்த சிவகங்கைப் பிரதானிகள் இராமநாதபுரம் சீமைக்கு வருகிற ஆற்றுக்கால்களை அடைத்து,ஆற்றைநீர் கிடைக்காமல் செய்ய முயன்றனர்.15 இன்னும் இதனைப் போன்று பல எல்லை சிக்கல்கள் எழுந்தமைக்கும் இராமநாதபுரம் சேதுபதி ளன்னர்தான் காரணம் என சின்னமருதுவுடன் சேர்தது.கும்பெனியாரும் ஓலமிட்டனர்.16
இங்ஙனம் சின்னமருது சோவைக்காரரது அத்துமீறல்களுக்கு அணையிடாது மறைமுகமாக அவருக்கு ஆதரவு வழங்கி வந்ததற்குக் காரணம் அன்றைய சூழ்நிலையில் சின்னமருதுவின் மூலமாக மைசூர் மன்னர் திப்புசுல்தானது பகைமையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற கும்பெனியரது பயம். அத்துடன், சின்னமருதுவும் பரங்கிகளைப் பெரிதும் மதித்துப் போற்றி வந்தார். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் அவ்வப்பொழுது செய்து வந்தார். இவைகளுக்குகெல்லாம் மேலாக, சூழ்நிலைக்குத் தக்கவாறு வளைந்து பணிந்து நடக்கும் மனப்பாங்கும் அவரிடம் இருந்ததை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.
கி.பி. 1194ல் மறவர் சீமையில் ஏற்பட்ட வறட்சி நிலையைப் பயன்படுத்தி, தஞ்சை தரணியில் இருந்து ஏராளமான தானியங்களை அங்கு இறக்குமதி செய்து அபரிதமாக கொள்ளை லாபம் அடிக்க பரங்கிகள் துடித்தனர். அந்தக் கொள்கைக்கு உதவ, அவர்கள் மறவர் சீமையில் கொண்டு வந்து விற்கும் தானியங்களுக்கு சுங்கவரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரினர்.17 சுயநலம் மிகுந்த பரங்கிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னர் முற்றும் மறுத்து விட்டார்.18 ஆனால் சிவகங்கைப் பிரதானிகள் தயக்கம் எதுவும் இல்லாமல் சிவகங்கை சீமையில் பரங்கிகளுக்கு உடனடியாக இந்த சலுகையை வழங்கினர்.19 தொடர்ந்து இராமநாதபுரம் மன்னருக்கும் சிவகங்கை பிரதானிகளுக்கும் எழுந்துள்ள பிரச்சனைகளையும் புகார்களையும் விசாரிக்க இருதரப் பினரையும் கும்பெனிக்கலெக்டர் பவுனி என்பவர் முத்துராமலிங்க பட்டணத்தில் ஆஜர் ஆகுமாறு "சம்மன்” கட்டளை அனுப்பினர். அதனை எற்று கலெக்டரைச் சந்திப்பது இராமநாதபுரம் சீமை மன்னரது மரபுகளுக்கு பொருத்தமானது அல்ல எனக் கருதி "சம்மனை” இராமநாதபுரம் மன்னர் உதாசீனம் செய்தபொழுது மருது சேர்வைக்காரர்கள் அதனைப் பெற்றுக் கொண்டதுடன் கலெக்டர் கட்டளைப்படி அவரை தொண்டி சென்று பேட்டி கண்டனர். இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளினால் பரங்கியரது பகைமையை வளர்த்துக் கொண்ட இராமநாதபுரம் மன்னரது, இராமநாதபுரம் கோட்டையை எதிர்பாராத நிலையில் கும்பெனிப் படைகள் திடீரென சூழ்ந்தது. 8-2-1795ம் தேதி காலையில் இராமநாதபுரம் மன்னரைக் கைது செய்து திருச்சிக்கோட்டைச் சிறையில் இட்டு, மறவர் சீமையைத் தங்கள் நிர்வாகத்தில் வைத்துக் கொண்டதை எதிர்த்து, கி.பி. 1797 மேமாதக் கடைசியில் முதுகுளத்தூர் பகுதி மக்கள் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்த பொழுது கும்பெனியாரது ஆயுதப்படைகளினால் சமாளிக்க முடியாத நிலைதோன்றியது. ஏறத்தாழ இரண்டு மாதம் நீடித்த அந்தக் கிளர்ச்சியில் குறிப்பாக அபிராமம் அருகே கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த இறுதிப்போரில் நூற்றுக்கணக்கான மறவர்கள் நாட்டுப்பற்றும், ராஜ விசுவாசமும் மிகுந்தவர்களாக போராடி மடிவதற்கு, எட்டையாபுரம் வீரர்களைவிட, சின்ன மருது சேர்வைக்காரரது சிவகங்கைப் படைதான் காரணமாக இகுந்தது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளித்து மறவர் சீமையில் கும்பெனியாரது கொடி தொடர்ந்து பறப்பதற்கு துணை நின்ற சிவகங்கை சேர்வைக்காரர்களது உதவியை பாராட்டி கும்பெனியார் பரிசுகள் வழங்கினர். இதற்கென சின்னமருது சேர்வைக்காரரது மகனை கும்பெனி கவர்னர் செனனைக்கு வரவழைத்து பேட்டி அளித்து பெருமைப்படுத்தினார்.[2]
அன்றைய அரசியல் சூழ்நிலையில் சிவகங்கைப் பிரதானிகள் ஏனைய பாளையக்காரர்களைப் போன்று கும்பெனியாரது ஆதரவாளர்களாக விசுவாசத்துடன் நடந்து வந்ததை அவர்களது கடிதங்களில் இருந்து தெரிய வருகிறது. இராமநாதபுரம் முத்து ராமலிங்க சேதுபதி மன்னரைப்பற்றிய முறையீடு ஒன்றில், அவர்கள் எப்பொழுதும் கும்பெனிக் கலெக்டரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியக் காத்து இருப்பதாகவும், கும்பெனியாருக்காகவே வாழ்ந்து வருவதாகவும், அதனால் மயிரிழையில் கூட வேறுபட்டு நடக்க மாட்டோம் என அவர்கள் உறுதியளித்து எழுதியுள்ளனர்.[3] 4.2.1801, 30.3.1801 ஆகிய நாட்களில் எழுதிய அவர்களது மடல்களிலும், இந்த “விசுவாசம்” தெளிவாகக் காணப்படுகிறது.23 இன்னொரு கடிதத்தில் அவர்கள் தங்களைக் கும்பெனியாரது குழந்தைகள் என்று கூட குறிப்பிட்டு இருக்கின்றனர்.24
இங்ஙனம் கும்பெனியாரது நேசத்தையும் விசுவாசத்தையும் பத்தாண்டுகளுக்கு மேலாக மதித்து வந்த சிவகங்கை சேர்வைக்காரர்களது மனநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. காரணம் அடுத்து அடுத்து ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள்.