மாவீரர் மருதுபாண்டியர்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

மாவீரர்
மருதுபாண்டியர்


ஆசிரியர் :
டாக்டர் எஸ். எம். கமால்


வெளியீடு :
ஷர்மிளா,
21, ஈசா பள்ளிவாசல் தெரு,
இராமநாதபுரம் - 623 501.

BIBLIOGRAPHICAL DATA


1. Title : Maaveerar Marudhupandiar
2. Author : Dr. S.M. Kamal, Ramanathapuram-623 501
3. Language : Tamil
4. Edition : First (October 1989)
5. Copy right : Author
6. Size of the Book : 21.5 X 14 Cms.
7. Type used for text : 10pt Tamil Roman
8. Pages : 248 + 16 = 264
9. No. of Copies : 1000
10. Printers : Parani Achchaham, 78-A, Dhanappa Mudali St., Madurai - 625 001
11. Publishers : Sharmilah Publishers, 21, Esapallivasal Sr., Ramanathapuram-623 501
12. Price : Rs. 30.00
13. Subject : Modern History of Tamil Nadu (18th Century) relating to the National Freedom Struggle


⚫ மாவீரர் மருதுபாண்டியர்
முதற்பதிப்பு : அக்டோபர் 1989
© டாக்டர் எஸ். எம். கமால்
அச்சிட்டோர்: பரணி அச்சகம் 78ஏ தானப்பமுதலிதெரு
மதுரை - 625 001 ⚫ விலை ரூ 30-00



தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற்றிருக்க எவன்கொலோ விரும்புவன்?

- மகாகவி பாரதியார்.

அறிமுகம்

பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதிப்பகுதி தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான திருப்பமாக விளங்குகிறது. மதுரை மண்ணில், குறிப்பாக மறவர் சீமையில் அரசியல் மாற்றங்கள் மிகவும் விரைவாக உருப்பெற்றன. அத்துடன் வரலாறு காணாத வறட்சியும் மக்களை வாட்டி வதைத்தது. இந்தக் கொடுமைக்கு இடையில், பரங்கியரது ஆதிக்க வெறி, அருகம்புல்லைப்போல தாவிப்பாவியது.

பழமையும் பெருமையும் மிக்க இராமநாதபுரம், தஞ்சாவூர் தன்னரசுகளை நிரந்தரமாக நீக்கி விடுவதற்கு கும்பெனியார் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அத்துடன் முன்னூறு ஆண்டு கால நாய்க்க அரசின் ஆணிவேராக அமைந்து இருந்த பாளைகளைக் கண்டு குமைந்து எழுந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வாழ்நாளெல்லாம் வாடி மடியுமாறு வெஞ்சிறையில் தள்ளப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி, சாப்டுர் பாளையக்காரர்கள் துாக்கிலே தொங்கவிடப்பட்டனர். இந்தக் கொடுமைகளைக் கண்ட இராமநாதபுரம் சீமை மக்களுடன் மதுரை, திண்டுக்கல் சீமை பாளையக்காரர்கள் கொதித்து எழுந்தனர். அவர்களில் காடல்குடி, குளத்துார், கோல்வார்பட்டி, சிவகிரி, பழனி, விருபாட்சி, கன்னிவாடி. கோம்பை, தேவதானப்பட்டி, வாராப்பூர், நத்தம் பாளையக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இத்தகைய கொந்தளிப்பான நிலையில், சிவகங்கை அரசின் பிரதானிகளாகச் செயல்பட்ட மருது சேர்வைக்காரர்கள், தமிழக மக்களின் தன்மான உணர்வை அறுதியிட்டுக்காட்டும் துணிச்சலான முடிவை மேற்கொண்டனர். அதுவரை அவர்களது அருமை நண்பர்களாக இருந்து வந்த அவர்கள், ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரையும் அவர்களது ஆதிக்க கொள்ளையையும் எதிர்த்துப் போராடுவது என்பது அவர்களது முடிவு 'நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை, தீயினத்தின் அல்லல் படுப்ப தூஊம் இல்லை" யல்லவா? ஆனால் இந்த முடிவைச்செயல்படுத்த வல்லோரின் துணை வேண்டும். நெல்கட்டும் செவ்வல் பூலித்தேவர், நவாப்பையும் அவரது கூலிப்படையான கும்பெனியாரையும் பொருதுவதற்கு மைசூர் மன்னர் ஐதர்அலியின் பேராதரவு அவருக்கு இருந்தது. மதுரையை முற்றுகையிட்ட நவாப்பின் படைகளை முறியடிக்க கம்மந்தான் கான்சாகிபுவிற்கு பிரஞ்சு ராணுவம் கை கொடுத்து உதவியது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தாக்குதலை தொடுப்பதற்கு கட்டபொம்மு நாயக்கருக்கு டச்சுக்காரர்களது ஆயுதங்களும் பணமும் உதவின. ஆனால், சிவகங்கை சேர்வைக்காரர்கள், கும்பெனியாருடன் மோதுவதற்கு வெளியில் இருந்து உதவி பெறும் வாய்ப்பு இல்லை. எனினும், சிவகங்கைச் சீமை மக்களது மகத்தான துணிச்சலிலும், திறமையிலும் நம்பிக்கை கொண்டவர்களாக பரங்கிகளுடன் பொருதினர். முழுமூச்சுடன் போராடினர்.

அதுவரை, நேருக்கு நேர் நின்று போரிடும் இயல்பான முறையுடன், கட்டுப்பாடும் ராணுவப்பயிற்சியும் மிக்க எதிரியை, மறைந்து இருந்து தாக்கும் கொரில்லாப் போரினையும் மேற்கொண்டனர். பலபோர்களில் நூற்றுக்கணக்கான மறவர் மடிந்தனர். பிறந்த மண்ணைக் காப்பதற்காகப் போராடினோம் என்ற மன நிறைவுடன், வெள்ளைப் பரங்கியரின் வெடிமருந்துச் சாதனங்கள் - அவைகளைத் திறமையாகப் பயன்படுத்தும் பயிற்சிமறவர் சீமை மக்களது வீரத்தை வெற்றி, கொண்டன. அவர்களது சூழ்ச்சியும் துரோகமும் போராளிகளது எதிர்ப்பு அணியைப் பிளந்து, எளிதில் வெற்றி கொள்ள உதவின. என்றாலும் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக, மகத்தான நாட்டுப்பணியாக இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளில் ஆறுமாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த மருது சகோதரர்களும் அவர்களது வழியினரும், உற்றமும் சுற்றமும் - அனைத்து ஆண்மக்களும் - விடுதலைப்போரின் வெகுமதியாக தாக்குமரங்களில் தொங்கவிடப்பட்டனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றி சிந்தித்து செயல்பட்டவர்களுக்கு, வெஞ்சினத்துடனும் வீர சாகசங்களுடன் போரிட்ட நல்லவர்களுக்கு, ஏகாதிபத்தியத்தின் அன்றைய வாரிசான ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியார் வழங்கிய அரிய பரிசு-துக்குத்தண்டனை.  அவர்களது வீரமிக்க போராட்டமும். தன்னலமற்ற தியாகமும், இந்திய தேசிய வரலாற்றில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில், சிறப்பு மிக்க புனித ஏடுகளாக இருந்து வருகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னால் மறவர் சீமையின் முன்னோடியாக விடுதலை வேள்வியில் களபலியாகிய இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி (கி. பி. 1762-95) மன்னரை மறந்தது போல, சிவகங்கைச் சேர்வைக்காரர்களது இணையற்ற போராற்றலையும் தியாகத்தையும் இந்திய தேசிய இயக்க வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்பையும், தமிழகமக்களும், வரலாற்று ஆசிரியர்களும், அரசினரும் இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மறந்து விட்டனர். இங்கிய தேசிய இயக்கம், கி. பி. 1857-ல் தான் “சிப்பாய் கழகத்தின்” வாயிலாக துவங்கியதாகக் கணிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் உண்மையான வரலாற்றையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டுப்பாடும் பொறுப்பும் வரலாற்று ஆசிரியர்களுக்கு இருப்பதால் நமது நாட்டு விடுதலைப் போராட்டங்களின் சரியான வடிவத்தை, ஆதாய பூர்வமான சித்தியத்தை வரைவதற்கு முலைந்துள்ளேன்.

தமிழகத்தின் சுயேச்சைத்தன்மை, சிந்தனைகள் - இவைகளின் அடிப்படையில் எழுந்த பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவைகளை அழிக்க முனைந்த கும்பெனியார் என்ற ஏகாதிபத்திய வெறியர்களை அழிக்க 1792-95ல் முனைந்தார் முத்துராமலிங்க சேதுபதி மன்னர். அவருடைய நிறைவு பெறாத சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து மறவர் அணிகளை ஆங்காங்கு திரட்டி, வெள்ளைப்பரங்கிகளையும் அவர்களது கூலிப்படைகளையும் வீழ்த்தி அழிப்பதற்கு கி.பி. 1801ல் விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் சிவகங்கை சேர்வைக்காரர்கள். அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், பிறந்த பொன்னாட்டின் பெருமையைக் காக்கப்போராடிய பாங்கும் தியாக உணர்வும், வேறுநாட்டுப் போராட்ட எடுகளிலும் காண இயலாத தாக உள்ளன. “மா ஆயிரம் பட மடிந்த களப்போர் உரைப்போ ருக்கு நாவு ஆயிரமும் நாள் ஆயிரமும் வேண்டும்” என்ற ஜயங்கொண்டாவது பாடல்தான், அவர்களது விடுதலைப் போராட்டத்தைப் புலப்படுத்தப் பொருத்தமாக உள்ளது.

என்றாலும், இதுவரை சிவகங்கை சேர்வைக்காரர்கள் பற்றி புனையப்பட்டுள்ள நாடோடி இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், அவைகளில் கண்டுள்ள செய்திகள் அனைத்தும் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டனவாகவே உள்ளன. ஆதலால், அவைகளை விடுத்து விடுதலைக்குப் போராடிய இந்த வீரர்கள் பற்றிய உண்மையான தியாகவடிவை. பல்வேறு ஆவணங்களின் துணைக் கொண்டு இந்த நூலில் சித்திரிக்க முயன்றுள்ளேன். சிவகங்கை சீமை சேர்வைக்காரர்கள் பற்றிய முழுமையான நூலாக இந்த நுால் அமையாவிட்டாலும், அவர்களது பொன்றாப் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய விவரமான தகவல்களைத் தருகின்ற முதல்நூலாகக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் இந்த நூலில் பொதிந்துள்ள உண்மை விவரங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஆவணங்களில் இருந்து படித்து குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்கு மேலான அனுமதி வழங்கிய சென்னை, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நிலைய ஆணையர் அவர்கட்கும், ஆவணங்களை கோரிய அப்பொழுதைக் கப்பொழுது வழங்கி உதவிய சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகப் பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை இங்கு புலப்படுத்தி அமைகிறேன்.


இராமநாதபுரம் எஸ். எம். கமால்

நாள் : 21. 10. 89

பொருள் அடக்கம்

எண்

பக்கம்

1
14
24
44
60
83
90
97
113
129
140
149
165
177
193
196
231
236
241

"https://ta.wikisource.org/w/index.php?title=மாவீரர்_மருதுபாண்டியர்&oldid=1646947" இலிருந்து மீள்விக்கப்பட்டது