முடியரசன் தமிழ் வழிபாடு/003-049
அகம்மலர்த்தும் செந்தமிழே! உயிரே! மெய்யே!
அகிலத்து மொழிமுதலே! அன்பே! பண்பே!
புகல்[1]கொடுத்துச் சிறியேனை ஆட்கொள் செல்வீ!
பொழுதெல்லாம் களிப்பருளும் தெய்வத் தாயே!
பகைதவிர்த்துத் தமிழ்பாடும் என்றன் நாவால்
பாரறிய தாயுன்றன் புகழு ரைக்க
வகைவகுத்த சொற்பொருளால் அணியால் ஆன்ற[2]
வளமிக்க கவிவெறிஎன் நெஞ்சில் ஏற்று!
[கவியரங்கில் முடியரசன்]
உயிரே மெய்யே : உயிரும் மெய்யும் போன்ற தமிழே,
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் ஆகிய தமிழே,