முல்லைக்காடு/தலைவன், தலைவி தந்த சுகம் நினைந்துருகல்
தலைவன், தலைவி தந்த சுகம்
நினைந்துருகல்
(ஸ்ருங்காரலகரி என்ற மெட்டு)
பல்லவி
செந்தேனோ தமிழோ அவளுதவிய சகம்
(செந்)
அநுபல்லவி
முந்தோர் நாள் தானே வந்தெதிர்
குளிர் சோலையில் முழு நிலவினில்
கொண்ட காதல் மிகவாகிச் சிலீரெனக்
[சிட்டா ஸ்வரத்திற்கு]
கோ—கனகவி தழ்குவிய முகமே என
தொருமுக மிசையுற, மலருடல் எனதொரு
புளகமெய் தனிலுற இருவரொருவ ராகஆவலொடு
கொஞ்சித்தந்த வஞ்சி முத்தம்
கொஞ்சத்தினில் நெஞ்சைவிட்டு
நிமிஷமும் அரை நிமிஷமும்
விலகுதல் அருமை விரைவினில் அவள்பிரி
வினைமனது பொறுத்திடுவது சகம் வெறுப்பது வாகும்
மலர்ச் (செந்)
சரணம்
சுந்தராங்கி அமுதங் குழல்போல் மொழியாள்
சுகுணாலயம் அன்னவள்!
எந்த வனிதை அவளோ டிணைபெற வருவாள்?
கந்தக் களப உடலாள்! அதிசோபித
கண்ய மான அதி புண்யவதி சுநிதி!
(செந்)