முல்லைக்காடு/பறக்கும் மிளகு!
4. நகைச்சுவைப் பகுதி
பறக்கும் மிளகு!
பூமியில் மிளகு புள்போல் பறக்குமா?
புதுவை மிளகோ புள்ளாய்ப் பறக்கும்!
சீர்புதுச் சேரியில் தெரிந்த வீடு
சென்றேன் சென்றமாதக் கடைசியில்!
கூடம் நிறையக் கொட்டியிருந்த
கொட்டை மிளகைக் கூட்டிவார
எண்ணினேன், வீட்டார் இல்லை யாதலால்!
எழுந்து துடைப்பம் எடுத்து நாட்டினேன். பூ
மியில் மிளகு புள்போற் பறக்குமா?
புதுவை மிளகு புள்ளாய்ப் பறந்ததே!
எனக்கும் ஆயுள் எண்பது முடிந்ததாம்;
இந்த அதிசயம் எங்கும் கண்டிலேன்!
பூமியில் துடைப்பம் போட்டு நின்றேன்;
போன மிளகு பூமியில் வந்தது!
கூட்டப் போனேன் கூட்டமாய்ப்பறந்தது!
கூட்டாப் போது பூமியில் குந்தும்!
வீட்டுக்காரி வந்து
பாட்டாய்ப் பாடினான் "ஈ"ப்படுத்துவதையே!