விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்

விக்கிமூலம், இங்குள்ள உரையாவணங்களைப் வாசித்து, அதனைப் பதிவு செய்து, விக்கி வடிவம் செய்து, ஒலி நூல்களாக உருவாக்கும் திறனை ஊக்குவிக்கிறது. இது குறித்த உங்களது ஐயங்களை மேலுள்ள உரையாடல் பக்கத்தில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.

வழிமுறைகள்

தொகு
  1. உரையாவணத்தின் பெயர், உருவாக்கப்பட்ட காலம் முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.
  2. உருவாக்கப்படும் ஒலிப்புக்கோப்பு, கட்டற்ற நீட்சியில் மட்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, .ogg
  3. பொதுவகத்தின் விதிகளுக்கு ஒப்ப அங்கு பதிவேற்றி, இங்குத் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லது இணைப்புத் தந்திட வேண்டும்.
  4. இதற்குரிய அனைத்துப்பதிவுகளையும் நீங்கள் ஒருவரே செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறர் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர் என்பதை மறவாதீர்.

நுட்பங்கள்

தொகு
  1. உங்கள் அலைப்பேசியிலுள்ள ஒலிப்பதிவு கருவி. இது பெரும்பாலும் எம்பி3(.mp3) வடிவத்தைத் தருகிறது. அதனை பொதுவக வடிவத்திற்கு மாற்றணும்.
  2. டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்) சமூக ஊடகத்தில் பதிவு செய்தால், அது இயல்பாகவே பொதுவக வடிவத்தில் (.ogg) தரும்.
  3. அடாசிட்டி கட்டற்ற மென்பொருள்
    • இரைச்சல்களையும், நமக்கு வேண்டிய வடிவத்தினையும், பல துண்டுகளாகப் பதிவு செய்யும் கோப்புகளை இணைக்கவும் பயனாகிறது.
  4. FFmpeg கட்டற்ற மென்பொருள்
    • எம்பி3(.mp3)ல் இருந்து (.ogg) வடிவத்திற்கு மாற்றுதல், பின்புல இசையை இணைக்க
  5. கிம்ப், இன்சுகேப் கட்டற்ற மென்பொருட்கள்
    • Cover art எனப்படும் முகப்புப் பக்கத்தை உருவாக்க

தேவைகள்

தொகு
  1. ஆன்ட்ராயிடு அலைப்பேசி கருவியில், (.ogg) சரியில்லை. உருவாக்க வேண்டும். இருப்பின் நிறுத்தி பதிவு செய்து, சரிபார்த்து, பொதுவகத்தில் நேரடியாக ஏற்றலாம்.
  2. எம்பி3 (.mp3)வடிவத்தில் பல பொதுமக்களின் அலைப்பேசி எடுப்பதால், அதனைக் குறித்தும் நாம் எண்ண வேண்டும்.

பங்கேற்பாளர்

தொகு
  1. --தகவலுழவன் (பேச்சு). 06:34, 1 செப்டம்பர் 2020 (UTC)
  2. --Fathima rinosa (பேச்சு) 03:20, 3 செப்டம்பர் 2020 (UTC)
  3. Guruleninn (பேச்சு) 05:11, 9 சூன் 2021 (UTC)[பதிலளி]
  4. -Sriveenkat (பேச்சு) 18:55, 2 ஏப்ரல் 2023 (UTC)
  5. --R. Ariharasuthan (பேச்சு) 14:55, 16 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

ஒலிவடிவ விக்கிமூல நூல்கள்

தொகு

சிறுகதைகள்

தொகு
  1. அப்பம் தின்ற முயல்/ஒலிநூல் விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • c:Tamil_Audiobooks#அப்பம்_தின்ற_முயல் - பத்து ஒலிநூல்களும், அதற்குரிய பத்து அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாக்கத்திற்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.
  2. நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள் - 1. கருணை

கட்டுரைகள்

தொகு
  1. நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/ஒலிநூல் விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. (210 நிமிடங்கள்/ 3.5 மணி நேரங்கள் ஓடக்கூடிய பதிவு)
  2. இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒலிநூல்
    ஓரு தலைப்புகான ஒலிகோப்பு மற்றும் அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டு உள்ளது, குடிய விரைவில் அனைத்தும் உருவாக்கப்பட்டும் .

நடைபெறும் நூல்கள்

தொகு

*

 

படிமம்:நான் நாத்திகன் ஏன்.ogg - user:R. Ariharasuthan - ஆங்கில ஒலிநூலும் வெளிவர உள்ளது.

வெளியிணைப்புகள்

தொகு