விக்கிமூலம் பேச்சு:கணியம் திட்டம்

திட்டப்பக்கத்தில் உள்ள வழிகாட்டுதல்கள் பொதுவாக இருக்கின்றன. அத்தோடு பின்வரும் வினாக்கள் யாவர் மனதிலும் எழக்கூடியவையே. அதில் தெளிவு இருப்பின், இத்திட்டத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கில் கீழ்கண்ட வினாக்களை எழுப்புகிறேன். முதல்நிலை(மஞ்சள்) மெய்ப்புப்பார்ப்பவர்களுக்கும், இரண்டாம்நிலை மெய்ப்புப்(பச்சை) பார்ப்பவர்களுக்கும் இடையே அதற்குரிய கட்டண வேறுபாடு உள்ளது. ஏனெனில், இரண்டு பேருக்குமுள்ள மெய்ப்புப்பணிகள் மிகவும் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, முதல்நிலைக்கு பக்கமொன்றுக்கு ஐந்து இந்திய உரூபாய் என்றால், இரண்டாம் நிலை மெய்ப்புப்பார்ப்பவருக்கு மூன்று உரூபாய் என்று வேறுபடுவதால் கீழ்கண்ட வினாக்களை எழுப்புகிறேன்.

1) ஒரு சொல்லின் எழுத்துக்களுக்கு இடையே ஏற்படும் எழுத்துணரி-இடைவெளி

தொகு

இப்பக்கத்தில் உள்ளது போன்ற சொல்லிடை இடைவெளி மிக அதிகமாக பலரும் தொகுக்கும் பக்கங்களில் சீர்செய்யாமல் உள்ளன. இதனை முதல்நிலை மெய்ப்பு பார்ப்பவர் செய்ய வேண்டுமா? அல்லது இரண்டாம் நிலை மெய்ப்பு பார்ப்பவர் செய்ய வேண்டுமா?-- உழவன் (உரை) 04:17, 27 ஜனவரி 2019 (UTC)

இவற்றை முதல்நிலை மெய்ப்பு பார்ப்பவர் திருத்துவதே நல்லது. Tshrinivasan (பேச்சு) 05:14, 3 சூலை 2019 (UTC)Reply

முதல்நிலை மெய்ப்பு பார்ப்பவர் திருத்துவது எளிமையாகவும் அமையும் என கருதுகிறேன்.--Arun kaniyam 05:20, 3 சூலை 2019 (UTC)

2) சொற்களின் தொடர்ச்சிக்காக இடப்படும் வார்ப்புரு

தொகு

இந்த பக்கத்தில் உள்ளது போன்று முடியும் சொல்லிடைஇடைவெளிக்குறியீட்டிற்கான வார்ப்புருக்களை {{hws}}, {{hwe}} எடுத்துக்காட்டுஎன்ற பயன்பாடும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை முதல்நிலை, இரண்டாம் நிலை மெய்ப்பு பார்க்கும் பங்களிப்பாளர்களில் யார் கவனிக்க வேண்டும்? -- உழவன் (உரை) 04:23, 27 ஜனவரி 2019 (UTC)

கணியம் திட்ட இலக்குகள் சிறப்புற தேவையானவைகள்

தொகு

@Tshrinivasan, Guruleninn:

வேண்டுகோள்

தொகு
  • 'கட்டணம்' என்ற சொல்லை 'ஊக்கத்தொகை' என்று மாற்றியமைக்கு என் உளமார்ந்த நன்றி. அதைப்போலவே 'பணி விதிகள்' என்பதனை 'பங்களிப்பு வழிகாட்டுதல்கள்' என மாற்றக் கோருகிறேன். ஏனெனில், எனது பங்களிப்பானது, 95% சரியாகவே இருக்கும். இந்த 5% விடுபட்டவைகள் எதனால் வருகிறது எனில் 1 எனது முழுமையடையாப் பயிற்சி, 2. உங்கள் வழிகாட்டுதல்களில் தெளிவின்மை. தற்போதுள்ள இச்சூழ்நிலையால், நான் செயற்பட்டு கொண்டு இருக்கும் போது, நீங்கள் 'விதிமீறல்' என்று கூறும் போது, மனம் ... என்னவோ போல் ஆகி விடுகிறது. எனது பங்களிப்பில் தேக்கம் ஏற்படுகிறது.

முன்மொழிவுகள்

தொகு

ஒருவரே அனைத்து மேம்பாட்டுப் பங்களிப்புகளையும், விடுபடாமல் சிறப்பாக செய்தல் என்பது கடினமான செயல். பலர் ஒன்றிணைந்து ஒரு நூலை மேம்படுத்துவது என்பது, தனியொருவர் செய்வதை விட எளிமையானதே. ஏனெனில், ஒருவருக்கு பல நல்ல தொகுத்தல் அனுபவங்கள், தொடர்ந்து பயிற்சி செய்வதால் மட்டுமே கிடைக்கும். எனினும், ஒருவர் ஒரு நிறத்தில் இருந்து, மற்றொரு நிறத்திற்கு மாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள், இன்னும் தெளிவாக இருப்பின், கால அனுபவங்கள் இல்லாமலே, யாவருக்கும் எளிதில் கிடைக்கும். ஆதலால், 'ஊக்கத்தொகைப் பெறுவதற்கான எல்லைகளை' மேலும், கணியம் அறக்கட்டளையார் மூத்த பங்களிப்பாளர்களின் எண்ணங்களை உள்வாங்கி, வரையறுக்க வேண்டும். இல்லையெனில், இக்கணியம் திட்டம் பின்னடைவைச் சந்திக்கும். இது குறித்த எனது எண்ணங்கள் பின்வருமாறு;-

  1. உங்களின் வழிகாட்டுதல்களை உங்களின் பங்களிப்பாளர் தவிர்த்து இருந்தால், அதனை உங்களுக்குரிய தொடர்பு பக்கத்திலோ அல்லது இப்பக்கத்திலோத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், தனிநபர் உரையாடல் அதிகமாகி, இத்திட்டத்திற்கு பின்னடைவு ஏற்படும்.
  2. ஒரு நூலின் பக்கம் நிறமாற்றம் அடைந்த பிறகு, அப்பக்கத்தில் குறை இருப்பின், அதனை முன்னிலை படுத்தும் உரிமையை அடுத்து வருபவர் பெற வேண்டும் அல்லது தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஒருவர் மஞ்சளாக விரைவாக மாற்றி ஊக்கத்தொகையை தொடர்ந்து பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து இங்ஙனம் செயற்பட்டால், அறியாமையால் இருக்கும் இருவர் ஒன்று கூடி பல நூல்களை முடித்து விடுவர். அதனால் கணியம் அறக்கட்டளைக்கு மட்டுமே அவப்பெயர் ஆகும். அறக்கட்டளைக்கு வரும் நல்கையும் குறைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, கவனக்குறைவாக ஒருவர் முழுமையாகச் செய்யாமல் நிறத்தை மாற்றி, ஊக்கத்தொகையைப் பெற்று விடுவதை எப்படி தடுப்பது?
    எளிமையாகக் கூறுவது என்றால், இக்கணியத்திட்டத்தில் செயற்படாதவர்கள் இதனுள் புகுந்து எந்நிற மாற்றாமும் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால், பங்களிப்பாளருக்கு உதவலாம்.
  3. மாணவர்களுக்கு தேவையான பல நூல்கள் உள்ளன. அதனைத் தவிர்த்து, வெறும் கதைப்புத்தகங்களை உருவாக்குதல் சிறப்பல்ல.
    இறுதி நிலையான பச்சையாக மாற்றுவதை, இதுவரை 1200 பக்கங்களுக்கும் மேலாகச் செய்துள்ளேன். இவ்வாறாக செயற்படும் போது, இடையிடையே பல பக்கங்களில், பிழைகள் இருக்கும் போதே, மஞ்சளாகவும், பச்சையாகவும் மாற்றியுள்ளனர். பல நூறு பக்கங்களில் மஞ்சள் நிலையில் இருந்தாலும், பிழைகளைத் திருந்தி புதியவர் ஊக்கத்தொகைப் பெற திருத்தம் செய்துள்ளேன். ஆனால், முழுமையற்ற பச்சை நிறங்களை ஒருவர் மாற்றினால் எனக்கு ஊக்கத்தொகை இழப்பு ஏற்படும் என்பதை பிறர் அறிய வாய்ப்பு மிக மிகக்குறைவு. ஊக்கத்தொகை ஒரு இலக்கு அல்ல. கணியம் அறக்கட்டளையாரின் இலக்கை மற்றவர் குறை கூறலாகாது. தனிப்பட்ட முறையில் அவற்றை நேரில் காட்ட விரும்புகிறேன். ஏனெனில், 'வாச மிகு இச்சமூகம் வாட விரும்பவில்லை'. இச்சமுக வளர்ச்சியை அது தடுக்கும்.-- உழவன் (உரை) 10:10, 25 மே 2019 (UTC)Reply

quarry நிரல் வழுநீக்கம்

தொகு

ஒரு புத்தகத்தில் ஒரு பயனரின் செய்த மொத்த தொகுப்பைக் காட்டும் குவாரி நிரலில் இருந்த வழுவை நீக்கியுள்ளேன். https://quarry.wmflabs.org/query/17590 இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். -Neechalkaran (பேச்சு) 14:41, 13 சூன் 2019 (UTC)Reply

கண்டேன். மஞ்சள் நிறத்திற்கு உள்ளது. பச்சை நிறத்திற்கு அறிய என்ன செய்ய வேண்டும்? //page_content_model like "%validated%"// என கொடுத்து பார்த்தேன். வரவில்லை.அதனால் வினவுகிறேன்.-- உழவன் (உரை) 16:00, 13 சூன் 2019 (UTC)Reply
இல்லை இது நிறத்திற்கேற்ற குறியீடு அல்ல. மெய்ப்புப் பார்த்தாலும், சரிபார்த்தாலும் page_content_model என்பது proofread-page தான். இரண்டையும் பிரித்துக் காட்டும்வகையில் நாமிடும் விக்கிமூலக் குறிப்புகள் சீராகவில்லை. இருப்பினும் //மெய்ப்புப் பார்க்கப்பட்டவை// என்றும் //Proofread// என்றும் //சரிபார்க்கப்பட்டது// என்றும் //Validated// என்றும் மட்டும் எடுத்துக் கொண்டு நிரலைத் தற்போது மாற்றியுள்ளேன். எதுவேண்டுமோ அதற்கேற்ற comment_text மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும். -Neechalkaran (பேச்சு) 09:11, 14 சூன் 2019 (UTC)Reply

கணியம் திட்டத்தின் விதிமுறைகள்

தொகு

இத்திட்டத்தின் விதிமுறைகள் எங்கிருந்து பெறப்பட்டன. வேறு மொழியில் இதுபோல திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதா? விக்கித்தரவுடன் இணைக்கப்படாமல் உள்ளதால் வினவுகிறேன்.-- உழவன் (உரை) 05:02, 15 சூலை 2019 (UTC)Reply

புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தல்

தொகு

@Tshrinivasan, Info-farmer: புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அப்புத்தகம் வேறு ஒரு தளத்தில் (எ.கா. மதுரை திட்டம், தமிழ் இணைய கல்விக் கழகம்) யுனிகோட் வடிவில் இல்லாமல் இருத்தல் நலம். தற்போது 'இராணி மங்கம்மாள்' புத்தகத்தை மெய்ப்பு முடித்து சரிபார்ப்பு செய்து வருகின்றனர். அப்புத்தகம் மதுரை திட்டத்தில் உள்ளது. இந்த விதிமுறையை கணியம் திட்ட நெறிமுறைகளில் தெரியப்படுத்தினால் கணியம் திட்ட பங்காளிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

Return to the project page "கணியம் திட்டம்".