விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by TI Buhari in topic வை. மு. கோதைநாயகி அம்மாளின் மேலும் சில நூல்கள்
பதிவேற்றிய நூல்கள் குறித்த பின்னூட்டங்கள்
தொகு- 2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, ஏறத்தாழ 3000 மின்னூல்களை (PDFs) கட்டற்ற தமிழ்நாடு அரசு ஆவணங்களோடு, பொதுவகத்தில் ஏற்றியுள்ளேன். பிறகு விக்கிமூலத்தில் அவற்றிற்குரிய அட்டவணைகளை உருவாக்கியுள்ளேன். பின்பு, ஏறத்தாழ மூன்று இலட்சங்கள் பக்கங்களுக்கு தமிழ், வங்க மொழிகளுக்கு எழுத்துணரியாக்கம் (OCR) செய்து முடித்துள்ளேன். மெய்ப்புக் காணும் பணியில் பிறரோடு இணைந்து ஏறத்தாழ 50 ஆயிரம் பங்கங்களை முடித்துள்ளேன்/முடித்துள்ளோம். இவையனைத்தும் கட்டற்ற மென்பொருள்களின் உறுதுணையோடு தான் செய்துள்ளேன். அதற்கு உதவிய தமிழ் இலினக்சு சமூகத்தாருக்கும், (Tamil Linux Community), தமிழ் விக்கிமீடிய நண்பர்களுக்கும், சில தெலுங்கு, வங்கமொழி, மலையாள மொழி நண்பர்களுக்கும், இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மேற்கூறிய அனுபங்களைக் கொண்டு தற்போது பதிவேற்றியுள்ள 50ஆயிரம் பக்கங்களும் முன்புள்ள பக்கங்களின் எழுத்துணிரியாக்கத்தினை விட சிறப்பாக வர என்னால் இயன்ற அளவு நுட்பங்களைக் கையாண்டுள்ளேன். இதனை கண்டு, சோதித்து, பின்னூட்டம் தருக. உங்கள் பின்னூட்டங்கள் நம் மொழியின் கணிய வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன். --Info-farmer (பேச்சு) 01:48, 2 ஆகத்து 2024 (UTC)
-
- .
-
- .
வை. மு. கோதைநாயகி அம்மாளின் மேலும் சில நூல்கள்
தொகுவை. மு. கோதைநாயகி அம்மாளின் கீழ்க் கண்ட நூல்களையும் பட்டியலில் இணைத்துக் கொள்ளவும். இவை wikisourceல் காணக் கிடைக்கின்றன.
கீழ்க் கண்ட நூல்கள் இணையத்தில் உள்ளன.
- அபராதி
- அருணோதயம் : சமூக நாடகம்
- ஓவியப்பரிசு : வை. மு. கோ. 80 வது நாவல்
- பரிமள கேசவன் : துப்பறியும் நாவல்
- வீரவஸந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம்
- ஜெயஸஞ்ஜீவி : துப்பறியும் நாவல்
அவர் வெளியிட்டு வந்த ஜெகன் மோகினி மாத இதழின் பெரும்பாலான பதிப்புகள், இணையத்தில் உள்ளன. @Info-farmer: தாங்கள் விருப்பம் தெரிவித்தால், அவற்றை இங்கு வெளியிடுவேன்.
TI Buhari (பேச்சு) 03:50, 1 செப்டெம்பர் 2024 (UTC)
- நீங்கள் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏறத்தாழ 150 ஆவணங்களைப் பதிவிறக்கி அவற்றை மேம்படுத்தி பொதுவகத்தில் ஏற்ற திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆவணமாக முதலில் பதிவிறக்க மேலதிக நுட்பங்கள் தேவைப்படுகின்றன. தமிழ்எண்ணிமநூலகத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேலான நூல்களில் நமக்கு என்ன தேவையோ, அவற்றைத் தேடி பதிவிறக்க நிரலாக்கம் எழுதப்பட்டு வருகிறது. அது முடிந்தவுடன் விக்கிமீடிய நிதி வாங்குவோம். பிறகு நீங்களும் உடன் இருந்தால் சிறப்பாக செய்ய இயலும். ஓரிரு மாதங்கள் பொறுத்தருள்க. இத்திட்டத்தின் அறிக்கையைக் கொடுத்துள்ளேன். அவர்கள் ஏற்ற பின்பு நம்மில் ஒரு பெண் வாங்குதல் மிகவும் நன்று. தவறாமல் உங்களுக்குத் தெரியப்படுத்துவேன். இம்மாதம் சென்னை வர திட்டமிட்டுள்ளேன். ஒருசிலரோடு நாம் இது குறித்து கலந்துரையாட விரும்புகிறேன். அதுவரை 1919 ஆம் வெளிவந்த அட்டவணை:முதுமொழிக்காஞ்சி, 1919.pdf இந்த நூலினை மேம்படுத்தத் தரக் கோருகிறேன். ஆவலுடன்.. Info-farmer (பேச்சு) 01:57, 4 செப்டெம்பர் 2024 (UTC)
- மதிப்பு மிகு ஐயா,
- இறையருளால், தங்கள் எண்ணப்படி முதுமொழிக் காஞ்சி முடிந்தது. நன்றி.
TI Buhari (பேச்சு) 16:25, 7 செப்டெம்பர் 2024 (UTC)