விலங்குக் கதைகள்/கழுதையின் சிந்தனை
முன்னொரு காலத்தில் காட்டு ராஜாவான சிங்கம், தன் ராஜ்யத்தைச் சுற்றி வந்தது. அப்பொழுது ஒரு நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையைத் தாண்ட சிங்கம் விரும்பியது; ஆனால் ஒடை மிக அகலமாக இருந்தது. சிங்கத்திற்குக் கோபம் தாங்க முடியவில்லை. அது கர்ஜனை செய்தது, அதைக் கேட்டு கரடி,கழுதை,எருமை,நரி,முயல்,ஆடு,மான் முதலிய மிருகங்கள் எல்லாம் ஓடி வந்தன.' இங்கு ஒரு பாலம் கட்டுங்கள் என்று சிங்கம் உத்தரவிட்டது.
உடனே வேலையைத் தொடங்குங்கள். நரி தான் மேஸ்திரி. கரடி, கழுதை முதலிய நீங்கள் எல்லோரும் செங்கல்களையும், இரும்புத் தூண்களையும், பலகைகளையும் இழுத்து வர வேண்டும்.........
இவ்வாறு சிங்கம் உத்தரவிட்ட போதிலும், கழுதை அசையாமல் நின்று கொண்டிருந்தது.அது சிந்தனையில் மூழ்கி இருந்தது. ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய் என்று சிங்கம் சீறியது.
மகாராஜா! நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
என்ன சிந்தனை?
இந்த ஒடைக்குக் குறுக்கே நாம் ஏன் பாலம் கட்ட வேண்டும்? அதை ஒரு பக்கத்தில் கட்டினால், வேலை மிக சுலபமாக முடியும் அல்லவா!