விலங்குக் கதைகள்/வீரமுள்ள சேவல்

வீரமுள்ள சேவல்

வித்ஸமே என்னும் கிராமத்தில் ஒரு ஏழை இருந்தான்். அவனுக்குச் சொந்த சொந்தமாக எதுவும் கிடையாது. வசிப்பதற்கு இடம். கிடையாது. ஒரு பணக்காரனின் குளியல் அறையை வாடகைக்கு எடுத்திருந்






தான். அதில் தான். அவன் வசித்து வந்தான். பணக்காரன் குளிக்கும் போது ஏழையை வெளியே துரத்தி விடுவான். பனியானாலும், வெய்யிலானாலும் சரி, பணக்காரன் குளிக்கும் போது ஏழை தெருவில் தான் நிற்க வேண்டி வரும்.






ஏழையிடம் ஒரு சேவல் இருந்தது. அது தான் ஏழைக்கு உற்றார், உறவினர், நண்பர், எல்லாமே. தன் மனதில் இருப்பதை யெல்லாம் சேவலிடம் தான். ஏழை சொல்வான். பணக்காரன் ஏழையிடம் குளியல் அறைக்கு அதிக வாடகையைக் கேட்டான். 

ஏழையிடம் பணம் இல்லை. எனவே வாடகைக்குப் பதில் ஏழையிடம் அதிக வேலை வாங்கினான். இரவும், பகலும்,ஓயாது உழைக்கச் செய்தான்.

அப்படி உழைத்தும் பயன் இல்லை. இறுதியில் பணக்காரன், ஏழையை அவனுடைய சேவலோடு குளியல் அறையை விட்டுத் துரத்தி விட்டான். பாவம் அங்த ஏழை!

இருக்க இடமின்றி நடுத் தெருவில் சேவலுடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். அவனது கண்களில் நீர் வழிந்தது.

பணக்காரனின் இரக்க மற்ற செயலைக் கண்ட சேவலுக்குக் கோபம் வந்து விட்டது.

கவலைப் பட வேண்டாம். இதோ நான் போகிறேன். அந்தப் பணக்காரனிடம் நானே நேரில் போய்ப் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு சேவல் பணக்காரனின் வீட்டை நோக்கிப் புறப்பட்டது. போகும் வழியில் சேவல் ஒரு கரடியை சந்தித்தது.ஹலோ கரடியாரே! என்றது சேவல்.

ஹலோ, சேவல்! இப்படி எங்கே போய். கொண்டிருக்கிறாய்? என்றது கரடி.






பணக்காரனைப் பார்த்து, என் எஐமானனை மோசமாக நடத்தியதற்காகப் பரிசு கொடுக்கப் போகிறேன் என்றது சேவல்.

சரி, நானும் உன்னுடன் வருகிறேன். என்று சொல்லி கரடியும் சேவலுடன் பட்டது. அவை இரண்டும் போய்க் கொண்டிருந்தன. அப்போது வழியிலே ஒரு ஒநாயைக் கண்டன.





ஹலோ, ஓநாயாரே! என்றது சேவல்.

ஹலோ, சேவல்! நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?

பணக்காரனைப் பார்த்து, எனது எஜமானனை மோசமாக நடத்தியதற்காகப் பரிசு கொடுக்கப் போகிறேன் என்றது சேவல்.

ஓ, அப்படியா! நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி ஓநாயும் புறப்பட்டது. 

சேவல், கரடி, ஓநாய் போய்க்கொண்டிருக்கும் போது இடையிலே ஒரு வேட்டைப் பருந்தைச் சங்தித்து அதனையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு போயின.


அவை எல்லாம் பணக்காரன் வீட்டை அடைந்தன. கரடி, ஓநாய், வேட்டைப் பருந்து ஆகியவை புதர்களுக்கிடையே ஒளிந்து கொண்டன. சேவல் மட்டும் பணக்காரனின் வாயிற் கதவின் மேலே உட்கார்ந்து கொண்டு உரக்கப் பாடத் தொடங்கியது.

கொக் - கரக் - கோ...ஏ. பணக்காரா. நான் சொல்வதைக் கேள்!

என் எஜமானனை நீ குளியல் அறையிலிருந்து துரத்தினாய். இப்போது நான் உன்னை இங்த வீட்டை விட்டே துரத்தப் போகிறேன் என்று பாடியது சேவல்.

மாடியில் அமர்ந்திருந்த பணக்காரன், சேவலின் பாட்டைக் கேட்டு சினமுற்று வேலையாட்களை அழைத்து. சேவலைப் பிடித்து வாத்துக் கூண்டினுள் போடச் சொன்னான். அப்போதுதான். வாத்துக்கள் இதனைக் கடித்துக் கொன்று விடும் என்றான்.





அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வேட்டைப் பருந்து வாத்துக் கூண்டிற்குள் பறந்து சென்று எல்லா வாத்துக்களையும் கொன்று விட்டது.

மறுநாள் காலையில் சேவல் மறுபடியும் வாயிற்படியில் நின்றுகொண்டு பழைய பாடலைப் பாடிற்று.

அப்போதுதான் மாடிக்கு வந்த பணக்காரன் சேவலின் பாட்டைக்கேட்டு ஆத்திரமடைந்தான். சேவலைப் பிடித்து மாட்டுக் கொட்டகையில் போடச் சொன்னான். அப்போது பசுவால் மீதிபட்டு சேவல்

இறந்து போகும் என நினைத்தான். ஆனால் ஓநாய் இது தான் எனக்கு நல்ல சந்தர்ப்பம் என்று சொல்லி, மாட்டுக் கொட்டகைக்குள் சென்று மாடுகளைக் கொன்று விட்டது.

அடுத்த நாள் காலையிலும் சேவல் பழையபடி கதவின் மேலே உட்கார்ந்து பாடியது.

இம்முறை மிகவும் கோபமடைந்த பணக்காரன் சேவலைப் பிடித்துக் குதிரைத் தொழுவத்தில் போடச் சொன்னான். ஆனால் இப்போது என் பங்கு என்று சொல்லியபடி கரடி குதிரை தொழுவத்திற்குள் சென்று குதிரைகளைக் கடித்துக் கொன்று விட்டது.

அடுத்த நாளும் சேவல் பழையபடி கதவின் மீதிருந்து பாடியது.

இம்முறை அதிகம் ஆத்திரம் அடைந்த பணக்காரன், சேவலைப் பிடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான். ஆனால் சேவலோ, கரடி, ஓநாய், வேட்டைப் பருந்து ஆகியவற்றை உதவிக்கு அழைத்தது. அவை அனைத்தும் ஓடி வந்தன.

கூடத்தில் ஒரே சண்டை. இவைகளைக் கொல்ல வந்த வேலையாட்கள் ஓட ஓட விரட்டப் பட்டார்கள். இங்கும் அங்குமாகச் சிதறடிக்கப் பட்டார்கள். திரும்பிச் செல்ல வழி தெரியாது திணறினார்கள். சேவல் பறந்து சென்று பணக்காரனை இழுத்து வந்தது.

"இங்கே பார்; விரைவாக முடிவெடு! ஒன்று நீ இறங்கத் தயாராக வேண்டும். இல்லையானால் எனது பன்றிகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்? என்று அதட்டிக் கேட்டது சேவல்.

ஐயோ, சாவதைவிட பன்றிகளைப் பார்த்துக் கொள்வதே மேல்” என்று அழுதான் பணக்காரன். அவ்வளவுதான்; பருந்து தனது கூண்டிற்குப் பறந்தது; ஓநாய் தன் இஷ்டம் போல் ஓடியது. கரடி காட்டிற்கு நடை போட்டது. சேவல் தனது எஜமானனை அழைத்து வந்தது. சேவலும் ஏழையும் அந்த வீட்டில் சங்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். பணக்காரனோ பன்றிகளையும், ய்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.