விவேகசிந்தாமணி 21-40
- [[]] :[[]] :[[]] :[[]] :[[]] :[[]]
விவேகசிந்தாமணி - பாடல்கள் 21-40
தொகுபாடல்: 21 (பொன்னொடுமணி)
தொகு- பொன்னொடு மணியுண்டானால் புலையனுங் கிளைஞனென்பான்
- தன்னையும் புகழ்ந்து கொள்வான் தகுதியில் மணமுஞ் செய்வான்
- மன்னரா யிருந்த பேர்தான் மாறுறக் கெட்டா ராயின்
- பின்னையும் யாரோ வென்றே பேசுவார் ஏசு வாரே.
பாடல்: 22 (வேதமோதிடும்)
தொகு- வேத மோதிடும் வேதியர்க் கோர்மழை
- நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
- மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
- மாத மூன்று மழையெனப் பெய்யுமே
பாடல்: 23 (அரிசிவிற்றிடும்)
தொகு- அரிசி விற்றிடும் அந்தணர் வெறுத்து
- வரிசை தப்பிய மன்னரை விடுத்து
- புருடனைக் கொன்ற பூவையைக் கடுத்து
- வருகின்ற முகில்களும் வானில் விரையுமே. ???
பாடல்: 24 (திருப்பதிமிதியா)
தொகு- திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
- இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொல் கேளாக் காது
- புரப்பவர் விழிகள் கண்ணீர் பொழிதரப் போகாத் தேகம்
- இருப்பினும் பயன்தான் என்னே எரிப்பினு மில்லை தானே
பாடல்: 25 (தன்னுடலுக்)
தொகு- தன்னுட லுக்கொன் றீந்தால் தக்கதோர் பலம தாகும்
- மின்னியல் வேசிக் கீந்தால் மெய்யினில் வியாதி யாகும்
- மன்னிய உறவுக் கீந்தால் மற்றது மயக்கமாகும்
- அன்னிய ரற்றோர்க் கீந்தா லாருயிர்க் குதவி யாமே.
பாடல்: 26 (படியும்பொழுதே)
தொகு- படியும் பொழுதே வதைத்திடும் பச்சைநா வியைநம்பலாம்
-
- பழியறிந்தும் வழிமறித்திடும் பழைய கள்ளரை நம்பலாம்
- கொடிய மதத்துடன் வளர்த்திடும் குஞ்சரத்தையும் நம்பலாம்
-
- குறும்புபேசி நகைத்திடும் குமரர் தம்மையும் நம்பலாம்
- கடையில்கணக் கெழுதிடும் கணக்கர் தம்மையும் நம்பலாம்
-
- காக்கைபோல் விழிபார்த்திடும் காணி யாளரை நம்பலாம்
- நடைகுலுக் கிமுக மினுக்கி நகைநகைத்திடு மாதரை
-
- நம்பொணாதுமெய் நம்பொணாது நம்பொணாத மெய்யாகுமே.
பாடல்: 27 (வண்டுகள்)
தொகு- வண்டுக ளிருந்திடின் மெல்லிசை யொலித்திடும்
- தண்டமி ழிருந்திடின் சங்கமாய்ச் சிலிர்ப்புறும்
- குண்டுணி யிருந்திடின் கோள்களே உதிர்ந்திடும்
- பெண்டுக ளிருந்திடின் பேரிடிச் சண்டையே.
பாடல்: 28 (கற்புடைமாத)
தொகு- கற்புடை மாதராடை கவரிமான் மயிரின் கற்றை
- வெற்புறு வேங்கையின் றோல் வீரன்கை விளங்கு கூர்வேல்
- அற்பர்தம் பொருள்கள் தாமு மவரவ ரிறந்த பின்னே
- பற்பலர் கொள்வர் தானே பாரினி லுண்மை யாமே.
பாடல்: 29 (வீணர்தான்)
தொகு- வீணர் தாந்தங்கம் பூண்டால் வெறும் மேற்பூச் சென்பார்
- பூணுவார் மேற்பூச்சிட்டால் பொருந்திய தங்க மென்பார்
- காணவே பனையின் கீழ்பால் பருகினுங் கள்ளே யென்பார்
- மாண்புறின் புல்லர் பேச்சும் மானிடர் மெச்சி டாரே.
பாடல்: 30 (மூப்பிலாக்)
தொகு- மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனிவிலா அரசன் வீரம்
- காப்பிலா விளைச்சல் பூமி கரையிலா திருக்கு மேரி
- கோப்பிலாக் கொண்ட கோலம் குருவிலா துற்ற கல்வி
- ஆப்பிலாச் சகடு போல அழியுமென் றுரைக்க லாமே.
பாடல்: 31 (அரவினை)
தொகு- அரவினை யாட்டுவாரும் அருங்களி றோட்டு வாரும்
- இரவினில் தனிப்போ வாரு மிரையுநீர் நீந்து வாரும்
- விரைசெறி குழலி யான வேசையை விரும்பு வாரும்
- அரசனைப் பகைத்திட் டாரு மாருயி ரிழப்பர் தாமே.
பாடல்: 32 (வாழ்வதுவந்த)
தொகு- வாழ்வது வந்த போது மனந்தனில் மகிழவேண்டா
- தாழ்வது வந்த தானால் தளர்வரோ தக்கோர் மிக்க
- ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
- ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ.
பாடல்: 33 (பருப்பதம்போல்)
தொகு- பருப்ப தம்போல் நிறைந்திடு நவமணிப் பரிசுகள் கொடுத்தாலும்
- விருப்ப நீங்கிய கணவரைத் தழுவுதல் வீணதாம் விரிமணத்து
- குருக்கொள் சந்தனக் குழம்பினை யன்போடு குளிர்தர அளித்தாலுஞ்
- செருக்கு மிஞ்சிய வற்பர்தந் தோழமை செய்வ தாகாதே.
பாடல்: 34 (பெருத்திடு)
தொகு- பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில்
- உருத்தெரி யாமலே ஒளிம ழுங்கிடும்
- மருந்துள தோவெனில் வாகடத் தில்லை
- தரித்திர மென்னுமோர் மருந்தின் தீருமே.
பாடல்: 35 (அத்தியின்மலரும்)
தொகு- அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கை தானும் ??
- பித்தர்தம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதந் தானும்
- அததன்மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்
- சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவ ரில்லை கண்டீர்.
பாடல்: 36 (கதலி வீரர்
தொகு- கதலி வீரர் களத்திடை வையினும்
- குதலை வாயில் குழவிகள் வையினும்
- மதன லீலை மங்கையர் வையினும்
- இதமுறச் செவிக்கின் பம்வி ளையுமே.
பாடல்: 37 (மானமுள்ளோர்கள்)
தொகு- மானமுள் ளோர்க ளென்றும் மயிரறின் உயிர்வா ழாத
- கானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பர்
- மானமொன் றில்லார் தானே மழுங்கலாய்ச சவங்க ளாகி
- யீனமாங் கழுதைக் கொப்பா யிருபபரென் றுரைக்க லாமே.
பாடல்: 38 (ஆசாரம்செய்)
தொகு- ஆசாரம் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
- ஆசாரம் நன்மை யாகு மவனியில் தேவ ராக்கும்
- ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்று
- பேசார்போ லூமை யாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.
பாடல்: 39 (செல்வம்வந்துற்)
தொகு- செல்வம் வந்துற்ற போது தெய்வமே நினைவு கொள்ளார்
- சொல்வதை யறிந்து சொல்லார் சுற்றமுந் துணையும் பேணார்
- வெல்வதே கரும மல்லால் வெம்பகை வலிதென் றெண்ணார்
- வல்வினை விளைவும் பாரார் வாழுமிம் மண்ணில் மாந்தர்.
பாடல்: 40 (யானையைச்)
தொகு- யானையைச் சலந்தனி லிழுத்த அக்கரா
- பூனையை நிலந்தனிற் பிடிக்கப் போகுமோ
- தானையுடன் மன்னன் தலம்விட் டேகினால்
- சேனையென் செல்வமென் தியங்கு வார்களே.
- பார்க்க