வைகையும் வால்காவும்/உழைப்பு நலன்

உழைப்பு நலன்


நாச்செற்று விக்குள் மேல வாராமுன் நலவினை
மேற்சென்று செய்யப் படும், என்னும் - பாச்சொற்கு
இலக்கியம் தான் ஆனான் இமைசோரான இன்ப
இலக்கணம் ஈந்தான் லெனின். 33

வேண்டின்உண் டாகத் துறக்க, துறந்த பின்
ஈண்டு இயற் பால பல, எனும்-தூண்டலால்
அல்லவோ, அல்லல்பட்டு ஆற்றாதார்க் காட்சியைச்
செல்வம்விட்டு ஏற்றார் லெனின். 34

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு, எனத் துய்ப்பறிவால்
வையம் பொதுவுடைமை வந்தால் துயர் அறுமென்று
எய்தினான் ஈடில லெனின். 35

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின், சான்று- தன்னலம்
தன்பொருள் இன்றி உழைப்பு நலன் தாமுழைப்பார்க்கு
என்றின்பம் ஈந்த லெனின். 36