வைகையும் வால்காவும்/பொதுமை நலன்
இருவேறு உலகத்து இயற்கை, திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு;-மருளாம்
பொருளைப் பொதுமை செயின் வேறுபாடு உண்டோ ?
கருதென்று வென்றான் லெனின்.
37
தூங்காமை கல்வி துணிவுடைமை, இம்மூன்றும்
நீங்கா ‘நிலன்’ஆள் பவர்க்கு, நல்-பாங்கென்று
தீங்கரசை நீக்கித் திகழ் பொதுமைக் கூட்டமைக்கத்
தூங்காது உழைத்தான் லெனின்.
38
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக; எனும்- சொற்குறுதி
காட்டவே மார்க்கு; ஏங்கேல், கற்றுக் கனவுலகைக்
காட்டினான் நாட்டில் லெனின்.
39
எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு; எனும்- செவ்வி
உலகே! உணர்க'என உண்மைப் பொதுமை
நலமே நயந்தான் லெனின்.
40