வைகையும் வால்காவும்/தாய்மை அறம்

தாய்மை அறம்


வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்; எனலால் - தாண்டுக
நாடென்ற போதும், சிறையில் நலிவுற்றும்
பீடன்றோ பெற்றான் லெனின். 25

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்றால்- கொலைஞர்
முடியரசின் பாழும் முதலாளி மாரின்
வடிவுகண்டு மாய்த்தான் லெனின். 26

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்,
கள்ளத்தால் கள்வேம் எனல்; என்னும்-வள்ளுவன் சொல்
எண்ணாத நெஞ்சினர், ஏழையரை வஞ்சித்தோர்
மண்ணாகச் செய்தான் லெனின். 27

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற, என்னும் - தூய்மையால்
பேய்மையாம் கோனாட்சிப் பீடழித்து மெய்மாக்கின்
தாய்மையறம் தந்தான் லெனின். 28