வைகையும் வால்காவும்/நல்லரண்

நல்லரண்


உணர்வது உடையார்முன் சொல்லல், வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந் தற்று; என்-றுணர்ந்து
தொழிலாளர் தூய உழைப்பாளர் தம்பால்
மொழிந்தான் கருத்தை லெனின். 69

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார் எனலால்-கற்றறிந்த
வேல்சு ஒருநாள், “மின்கமழ் நாடா? கனவென்றான்
கால்வாங்கச் செய்தான் லெனின். 70

பிணிஇன்மை, செல்வம், வினையின்பம், ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கு இவ்வைந்து-மணிநாடு
இதுவென்று சோவியத்து ஒன்றியம் சான்றாய்ப்
பொதுவுடைமை கண்டான் லெனின். 71

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்; அஃதே-எல்லார்க்கும்
செல்வங்கள் எனனும் பொதுவுடைமை சேர்ந்துள
நல்லரண் என்றான் லெனின். 71