வைகையும் வால்காவும்/படியரசு செய்தான்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்; அதனால்-வன் தீய
புல்லரசை மண் புதைத்துப் பொற்பொழுகு சோவியத்தில்
நல்லரசை வைத்தான் லெனின்.
13
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு- திறம்சார்
பொதுவுடைமை ஏற்றான்பின்; பொய்க்கொள்கை வேண்டான்
புதுவுடைமை கண்டான் லெனின்.
14
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல், ஆல்-மிகுபுகழ்
மார்க்கின் கனவுலகை மண்நிறுவித் தீங்குமுதல்
சேர்த்தாரை வென்றான் லெனின்.
15
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்; சான்று-மண்ணில்
முடியரசின் வீழ்வாம்! முதல் அழிவாம்; இந்தப்
படியரசு செய்தான் லெனின்.
16