வைகையும் வால்காவும்/பேதை முடியார்
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர் ஆம்-விழித்த
புரட்சியின் பின் பண்டை அலுவலரைப் போற்றிப்
புரட்சியரசு ஏற்றான் லெனின்.
77
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு என்று-உணர்ந்தே
இடையரசு ஆட்களைச் செல்வர்கை யாளைப்
புடைபெயரப் பேர்த்தான் லெனின்.
78
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு என-ஓர்ந்து
பொதுமை அறம்பேணாப் போலி இனத்தைக்
கதுமென்று ஒழித்தான் லெனின்.
79
ஏவவும் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர்
போலும் அளவும்ஓர் நோய் அதனால்-தேவர்
அடியாரும் அன்புஇல் மதத்தினரும் பேதை
முடியாரும் சாய்த்தான் லெனின்.
80