பெருங்கதை/1 38 விழாவாத்திரை
- பாடல் மூலம்
விரிநீர் ஆத்திரை
தொகுவிரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை
புரந்துட னயரும் பொலிவின தாகி
மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும்
பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி
இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி 5
யாழுங் குழலு மிமம்பிய மறுகின்
மாலை யணிந்த மணிக்காழ்ப் படாகையொடு
கால்புடைத் தெடுத்த கதலிகை நெடுங்கொடி
ஆர்வ மகளிரு மாய்கழன் மைந்தரும்
வீர குமரரும் விரும்புவன ரேறிய 10
மாவுங் களிறு மருப்பிய லூர்தியும்
காலிரும் பிடியுங் கடுங்காற் பிடிகையும்
தேரு மாக்களுந் தெருவகத் தெடுத்த
எழுதுகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கிப்
பகலோன் கெடுமெனப் பாற்றுவன போல 15
அகலிருவானத் துகடுடைத் தாட
விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து
வெண்சுடர் வீதி விலக்குவனர் போல
எண்ணரும் பல்படை யியக்கிடம் பெறாஅ
நகர நம்பிய ராச குமரர் 20
நிறைகளி றிவைகா ணீங்குமி னெனவும்
இறைவ னாணை யீங்கெவன் செய்யும்
புதல்வ ராணை புதுநீ ராட்டெனச்
சிறாஅர் மொய்த்த வறாஅ விருப்பிற்
கம்பலைத் தெருவி னெம்பரு மெடுத்த 25
குடையுங் கொடியுங் கூந்தற் பிச்சமும்
அடல்வே லியானை யடக்குங் காழும்
களிறெறி கவரியொடு காண்டக மயங்கிப்
பெருநீர்க் கருங்கட றுளுப்பிட் டதுபோல்
ஒண்ணுதன் மகளி ருண்க ணிரைத்த 30
கஞ்சிகை துளங்க்கஃ கயிற்றுவரை நில்லாச்
செஞ்சுவற் பாண்டியஞ் செல்கதி பெறாஅ
குரைத்தெழுந் துகளுங் குரம்புவி நிரைத்துடன்
சங்கிசை வெரீஇச் சால்பில பொங்கலின்
அவிழ்ந்த கூந்த லங்கையி னடைச்சி 35
அரிந்துகால் பரிந்த கோதைய ராகத்துப்
பரிந்துகா ழுகுத்த முத்தினர் பாகர்க்குக்
காப்பு நேரிய கூப்பிய கையினர்
இடுக்க ணிரப்போர் நடுக்க நோக்கி
அரறுவ போல வார்க்குந் தாரொ 40
டுரறுபு தெளித்துக் கழறும் பாகர்
வைய நிரையும் வயப்பிடி யொழுக்கும்
கைபுனை சிவிகையுங் கச்சணி மாடமும்
செற்றுபு செறிந்தவை மொக்கு ளாக
மக்கட் பெருங்கடன் மடைதிறந் ததுபோல் 45
எத்திசை மருங்கினு மிவர்ந்துமே லோங்கிய
கட்டளை வாயி லிவர்வனர் கழிந்து
நகரமாந்தர் தங்கல்
தொகுவரம்பில் பல்சனம் பரந்த பழனத்
தாற்றிரு கரையி னசோகம் பொழிலினும்
காய்த்தொசி யெருத்தின் கமுகிளந் தோட்டமும் 50
மயிலுங் குயிலு மந்தியுங் கிளியும்
பயில்பூம் பொதும்பினும் பன்மலர்க் காவுதொறும்
உயரத் தொடுத்த வூசல தாகி
மரந்தொறு மொய்த்த மாந்தர்த் தாகிப்
புறங்கவின் கொண்ட நிறங்கிளர் செல்வத் 55
நீரங்காடியின் வருணனை
தொகுதூரங் காடி யுய்த்துவைத் த்துபோல்
நீரங் காடி நெறிப்பட நாட்டிக்
கூல வாழ்நர் கோன்முறை குத்திய
நீலக் கண்ட நிரைத்த மருங்கின்
உண்ண மதுவு முரைக்கு நானமும் 60
சுண்ணமுஞ் சாந்துஞ் சுரும்பிமிர் கோதையும்
அணியுங் கலனு மாடையு நிறைந்த
கண்ணகன் கடைக ளொண்ணுத லாயத்துக்
கன்னி மாண்டுழித் துன்னுபு நசைஇய
தூதுவர் போல மூசின குழீஇ 65
ஆணைத் தடைஇய நூனெறி யவையத்துக்
கல்வி யாளார் சொல்லிசை போல
வேட்போ ரின்றி வெறிய வாக
தங்கு மிடங்கள்
தொகுமாக்க ளூழிதரு மணனெடுந் தெருவின்
மடலிவர் போந்தை மதர்வைவெண் டோட்டினும் 70
படலைவெண் சாந்தினும் படத்தினு மியன்ற
பந்தரும் படப்பும் பரந்த பாடி
அந்தமு மாதியு மறிவருங் குரைத்த
யோசனை யகலத் தொலிக்கும் புள்ளிற்
றேவரும் விழையுந் திருநீர்ப் பொய்கைக் 75
கரையுங் கழியுங் கானலுந் துறையும்
நிரைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு
மிடைபுதலை மணந்த மேதகு வனப்பிற்
கடல்கண் கூடிய காலம் போல
நூல்வினை நுனித்த நுண்வினைப் படாத்துத் 80
தானக மாடமொடு தலைமணந் தோங்கிய
வம்புவிரி கொட்டிலொடு வண்டிரை மயங்கிச்
செவ்வான் முகிலிற் செறிந்த செல்வத்
தெவ்வாய் மருங்கினு மிடையறக் குழீஇ
ஊரிறை கொண்ட நீர்நிறை விழவினுள் 85
இறைவன் பணியென் றிறைகொண் டீண்டி
நிறைபுனற் புகாஅர் நின்னகத் தோரென
விழாக்கோ ளாளர் விரைந்துசென் றுரைத்தலும்
பிரச்சோதனன் செயல்
தொகுஉவாக்கட லொலியி னுரிமையொ டுராஅய்
விழாக்கொள் கம்பலின் வெகுண்டுவெளின் முருக்கி 90
எழாநிலை புகாஅ வினங்கடி சீற்றத்
தாணை யிகக்கு மடக்கருங் களிறு
சேணிகந் துறைந்த சேனையிற் கடிகென
வேந்துபிழைத் தகன்ற வினைவ ராயினும்
சேர்ந்தோர்த் தப்பிய செறுந ராயினும் 95
கலங்கவர்ந் தகன்ற கள்வ ராயினும்
நிலம்பெயர்ந் துறைத னெடுந்தகை வேண்டான்
தொகுதந் தீண்டிக் கிளைஞ ராகிப்
புகுதந் நீகவிப் புனலாட் டகத்தெனச்
சாற்றிடக் கொண்ட வேற்றுரி முரசம் 100
திருநகர் மூதூர்த் தெருவுதோ றெருக்கி
மெய்காப் பிளைய ரல்லது கைகூர்ந்
திடைகொள வரினு மிருபத் தொருநாட்
படைகொளப் பெறாஅப் படிவத்- தானையன்
பிடியின் சிறப்பு
தொகுதாழ்புனற் றாரையுந் தமரொடு தருக்கும் 105
நாழிகைத் தூம்பு நறுமலர்ப் பந்தும்
சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் கோடுமென்
றெண்ணிய பிறவு மிளையோர்க் கியைந்த
புனலகத் துதவும் போகக் கருவி
பணையெருத் தேற்றிப் பண்ணின வாகி 110
மாலையு மணியு மத்தகப் பட்டும்
கோதையு மணிந்த கோல முடையன
திருநீ ராட்டினுட் டேவியர்க் காவன
மேவிய வனப்பொடு மிசைபிறர்ப் பெறாதன
பாக ரூரப் பக்கஞ் செல்வன 115
ஆறாட் டிளம்பிடி யாயிரத் தங்கட்
குறும்பொறை மருங்கிற் குன்றம் போல
இருநில நனைப்ப விழிதரு கடாத்துக்
கைம்மிகக் களித்த கவுள தாயினும்
செயிர்கொண் மன்னர் செருவிடத் தல்ல 120
துயிர்நடுக் குறாஅ வேழம் பண்ணி
பிரச்சோதனன் பொய்கைக் கரைக்கு வருதல்
தொகுஅரசுகை கொடுப்ப வண்ணாந் தியலிக்
கடிகை யாரங் கழுத்தின மின்னப்
பயிர்கொள் வேழத்துப் பணையெருத் திரீஇக்
கடவுட் கல்லது காறுளக் கில்லது 125
தடவுநிலை நிழற்றிய தாம வெண்குடை
ஏந்திய நீழற் சாந்துகண் புலர்த்திய
பரந்த கவரிப் படாகைச் சுற்றத்
துயரந்த வுழைக்கலத் தியன்ற வணியின்
முந்நீ ரொலியின் முழங்கு முரசமொ 130
டின்னீர் வெள்வளை யலறு மார்ப்பின்
மைந்துன மன்னரு மந்திரத் துணைவரும்
அத்துணை சான்ற வந்த ணாளரும்
சுற்றுபு சூழ முற்றத் தேறிப்
பிடியும் வையமும் வடிவமை பிடிகையும் 135
பெருந்தே னொழுக்கிற் பிணங்கிய செலவின்
வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
மலர்தூ மாட மயங்கிய மறுகின்
நாட்பெரு வாயி னாறுநீ ராத்திரை
வாட்கெழு நெடுந்தகை வளம்பட வெழலும் 140
அரசன் மனைவியர் புறப்படல்
தொகுஉயவக் கொண்ட வோவியத் தண்டிகை
இயைகொள் வெள்ளியா டிரும்பியாப் புறுத்து
வான்கொடிப் பவழமொடு வல்லோர் வகுத்த
ஆன்கட் சந்தனத் தரிக்கவறு பரப்பி
முத்துமணியுஞ் சித்திரத் தியற்றிப் 145
பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து
மருப்பிடைப் பயின்ற மாசறு மணித்தொழிற்
பரப்பமை பலகையொடு பாசுணங் கோலி
ஐவகை வண்ணமு மாகரித் தூட்டிக்
கைவினை நுனித்த கச்சணி கஞ்சிகை 150
பசும்பொன் குயின்ற பத்திப் போர்வை
அசும்பிற் றேயா வலர்கதி ராழி
பாடின் படுமணி யூடுறுத் திரங்க
மாலை யணிந்த மணித்தொழிற் பாண்டியம்
நூல்பிணித் தின்னுக நோன்சுவற் கொளீஇக் 155
கோல்கொள் கன்னியர் மேல்கொண் டேறி
விசிபிணி யுறுத்த வெண்கோட் டூர்தி
முரசெறி முற்றத்து முந்துவந் தேறும்
அரச மங்கைய ரடிமிசைக் கொண்ட
கிண்கிணி மயங்கிய தண்பெருங் கோயிற் 160
நீர்விழாவிற்காக கொண்டு செல்லும் பண்டங்கள்
தொகுகடைப்பகச் செப்பே கவரி குஞ்சம்
அடைப்பைச் சுற்றமொ டன்னவை பிறவும்
அணிகலப் பேழையு மாடை வட்டியும்
மணிசெய் வள்ளமு மதுமகிழ் குடமும்
பூப்பெய் செப்பும் புகையகி லறையும் 165
சீப்பிடு சிக்கமுஞ் செம்பொற் கலசமும்
காப்பியக் கோசமுங் கட்டிலும் பள்ளியும்
சுட்டிக் கலனுஞ் சுண்ணகக் குற்றியும்
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்
முட்டிணை வட்டு முகக்கண் ணாடியும் 170
நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும்
கழுத்திடு கழங்குங் கவறுங் கண்ணியும்
பந்தும் பாவையும் பைங்கிளிக் கூடும்
யாழுங் குழலு மரிச்சிறு பறையும்
தாழ முழவமுந் தண்ணுமைக் கருவியும் 175
ஆயத் துதவு மரும்பெறன் மரபிற்
போகக் கலப்பையும் பொறுத்தனர் மயங்கிக்
கூனுங் குறளு மாணிழை மகளிரும்
திருநுத லாயத்துத் தேவிய ரேறிய
பெருங்கோட் டூர்திப் பின்பின் பிணங்கிச் 180
செலவுகண் டுற்ற பொழுதிற் பலருடன்
தேவியர் செயல்
தொகுபண்டிவ் வாழ்வினைத் தண்டியுங் கொள்வோள்
இன்றிந் நங்கை கண்டதை யுண்டுகொல்
பாணி ணெய்தனள் காண்மின் சென்றென
ஏறிய வையத் தெடுத்த கஞ்சிகைத் 185
தேறுவா மதியிற் றிருமுகஞ் சுடரக்
கதிர்விரற் கவியலுட் கண்ணிணை பிறழ
நெருக்குறு சுற்றத்து விருப்பி னோக்கி
ஒட்டிழை மகளிரை விட்டனர் நிற்பச்
வாசவதத்தையின் செயல்
தொகுசுட்டுருக் க்கிலின் வட்டித்துக் கலந்த 190
வண்ண விலேகை நுண்ணிதின் வாங்கி
இடைமுலை யெழுச்சித் தாகிப் புடைமுலை
முத்திடைப் பரந்த சித்திரச் செய்கொடி
முதலின் முன்னங் காட்டி நுதலின்
சுட்டியிற் றோன்றிய சுருளிற் றாகி 195
வித்தகத் தியன்றதன் கைத்தொழில் காட்டி
இன்னிசை வீணை யன்றியு நின்வயின்
உதயண நம்பி யோவியத் தொழிலின்
வகையறி யுபாயமும் வல்லை யாகெனத்
தந்தது முண்டோ பைந்தொடி கூறென 200
உற்ற புருவத் தொராஅ ராகி
முற்றிழை மகளிர் முறுவல் பயிற்றச்
செழுங்குரன் முரசிற் சேனா பதிமகள்
ஒருங்குயிர் கலந்த வுவகைத் தோழியை
நறுநீர்க் கோலத்துக் கதிர்நலம் புனைஇயர் 205
நீடகத் திருந்த வாசவ தத்தையை
நீசெலற் பாணிநின் றாய ரெல்லாம்
தாரணி வையந் தலைக்கடை நிறீஇ
நின்றனர் திருவே சென்றிடு விரைந்தென
விளங்குபொன் ன்றையுள விழுநிதிப் பேழையுள் 210
இளங்கலந் தழீஇ யெண்ணிமெய்ந் நோக்கித்
தோழியர்க் கெல்லா மூழூழ் நல்கி
வதுவை வைய மேறினள் போலப்
பதுமகாரிகை உட்கோளும் செயலும்
தொகுபுதுவது மகிழ்ந்த புகற்சிய ளாகிப்
பதும காரிகை மகண்முக நோக்கித் 215
தனித்துஞ் சேனைப் பனித்துறைப் படியின்
நீரின் வந்த காரிகை நேர்த்தது
துகடீ ரிருந்தவத் துணிவின் முற்றி
முகடுய ருலக முன்னிய முனிவரும்
கண்டாற் கண்டவாங் கதிர்ப்பின வாகித் 220
தண்டாப் பெருந்துயர் தருமிவள் கண்ணென
உண்மலி யுவகைய ளாகித் தன்மகள்
இனவளை யாயத் திளையர் கேட்பப்
புனல்விளை யாட்டினுட் போற்றுமின் சென்றென
ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி 225
ஆங்கவ ருள்ளு மடைக்கல நினக்கெனக்
காஞ்சன மாலைக்குக் கைப்படுத் தொழிந்தபின்
வாசவதத்தை புறப்படல்
தொகுஏற்ற கோலத் தியம்புங் கிண்கிணி
நூற்றுவர் தோழியர் போற்றியல் கூறத்
தெய்வச் சுற்றத்துத் திருநடந் ததுபோற் 230
பையென் சாயலொடு பாணியி னொதுங்கி
உறைத்தெழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
வையத்தின் சிறப்பு
தொகுயவனக் கைவினை யாரியர் புனைந்தது
தமனியத் தியன்ற தாமரை போலப்
பவழமு மணியும் பல்வினைப் பளிங்கும் 235
தவழ்கதிர் முத்துந் தானத் தணிந்தது
விலைவரம் பறியா லெறுக்கையுண் மிக்க
தலையள வியன்றது தனக்கிணை யில்லது
தாயொடு வந்த தலைப்பெரு வையம்
வாயின் முற்றத்து வயங்கிழை யேறப் 240
பாத பீடிகை பக்கஞ் சேர்த்தலும்
செந்நூல் விசித்த நுண்ணுக நுழைந்த
இலக்கணப் பாண்டியம் வலத்தி னெற்றிக்
கண்ணி பரிந்து கடிக்குளம் பிளகலும்
பண்ணிய வையம் பள்ளி புகுகென 245
மூதறி பாக னேற லியையான்
இலக்கண மின்றென விலக்கினன் கடிய
மாடச்சிவிகையின் சிறப்பு
தொகுஆடகப் பொற்கவ றணிபெறப் பரப்பிக்
கூடங் குத்திய கொழுங்காழ்க் கேற்ப
நாசிகைத் தானத்து நகைமுத் தணிந்து 250
மாசறு மணிக்கான் மருப்புக் குடமிரீஇ
அரக்குருக் கூட்டிய வரத்தக் கஞ்சிகைக்
கரப்பறை விதானமொடு கட்டி லுடையது
கோதை புனைந்த மளதகு வனப்பின்
மல்லர் பூண்ட மாடச் சிவிகை 255
பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும்
செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை
வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
மெல்லியன் மாதரை யுள்ளகம் புகுத்தி
மல்லற் பெருங்கிளை செல்வுழிப் படர 260
காவலர் முரசறைதல்
தொகுமுனிவ ராயினு மூத்தோ ராயினும்
எனையீர் பிறரு மெதிர்வரப் பெறீரென
வானுறை யுலகினும் வையக வரைப்பினும்
தான விளைவினுந் தவத்தது பயத்தினும்
எண்ணரும் பல்லுயி ரெய்தும் வெறுக்கையுட் 265
பெண்டிருண் மிக்க பெரும்பொரு ளின்மையின்
உயிரெனப் படுவ துரிமை யாதலிற்
செயிரிடை யிட்டது செல்வன் காப்பென
ஆறுகடி முரச மஞ்சுவரக் கொட்டிக்
காவ லாளர் காற்புறஞ் சுற்றப் 270
புயன்மலை தொடுத்துப் பூமலர் துதைந்து
மகளிர் பொய்கைத் துறையைச் சேர்தல்
தொகுவியன்கா மண்டிய வெள்ளம் போல
மாட மூதூர் மறுகிடை மண்டிக்
கோடுற நிவந்து மாதிரத் துழிதரும்
கொண்மூக் குழாத்திற் கண்ணுற மயங்கி 275
ஒண்ணுதன் மகளி ரூர்தி யொழுக்கினம்
புள்ளொலிப் பொய்கைப் பூந்துறை முன்னித்
தண்பொழில் கவைஇய சண்பகக் காவிற்
கண்டோர் மருளக் கண்டத் திறுத்த
பிரச்சோதனன் செயல்
தொகுவிழாமலி சுற்றமொடு வெண்மண லேறி 280
நாளத் தாணி வாலவை நடுவண்
நிரந்தநீர் விழவினு ளிரந்தோர்க் கீக்கெனப்
பன்னீ ராயிரம் பசும்பொன் மாசையும்
குவளைக் கண்ணியுங் குங்குமக் குவையும்
கலிங்க வட்டியுங் கலம்பெய் பேழையும் 285
பொறியொற் றமைந்த குறியொடு கொண்ட
உழைக்காப் பாள ருள்ளுறுத் தியன்ற
இழைக்கல மகளி ரிருநூற் றுவரொ
டியாழறி வித்தகற் கூர்தி யாவது
கண்டுகொண் மாத்திரை வந்தது செல்கெனத் 290
தனக்கென் றாய்ந்த தலையிரும் பிடிகளுள்
இலக்கணக் கரும மெட்டா முறையது
மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
விதியோர் கொளுத்திய வீரிய முடையது
சேய்ச்செல னோன்பரிச் சீலச் செய்தொழிற் 295
பூச்செய் கோலத்துப் பொலிந்த பொற்படை
மத்தக மாலையொடு மணமகள் போல்வ
துத்தரா பதத்து மொப்புமை யில்லாப்
பத்திரா பதியே பண்ணிச் செல்கென
உதயண குமரற் கியைவன பிறவும் 300
உழைக்கல மெல்லாந் தலைச்செல விட்டு
வல்லே வருகவில் லாளன் விரைந்தென
உதயணன் செயல்
தொகுவிட்ட மாற்றம் பெட்டனன் பேணிச்
சென்ற காட்சிச் சிவேதனைக் காட்டிப்
பொன்னறை காவலர் பொறிவயிற் படுகெனச் 305
செண்ண மகளிர் செப்பிற் காட்டிய
வண்ணஞ் சூட்டின கண்ணியிற் கிடந்த
பனிப்பூங் குவளை பயத்தின் வளர்த்த
தனிப்பூப் பிடித்த தடக்கைய னாகி
நெடுநிலை மாநகர் நில்லான் போதந் 310
திடுமணன் முற்றத் திளையரு ளியன்று
படுமணி யிரும்பிடிப் பக்க நண்ணிப்
பொலிந்த திருவிற் பொற்புடைத் தாகி
மலிந்த யாக்கையின் மங்கல மிக்கதன்
வனப்பிற் கொவ்வா வாழ்விற் றாகி 315
வாழ்நா ளற்ற வகையிற் றாயினும்
கணைச்செல வொழிக்கும் கடுமைத் திதுவென
மனத்திற் கொண்ட மதிய னாகிக்
கண்டே புகன்ற தண்டா வுவகையன்
தாரணி யிரும்பிடி தலைக்கடை யிரீஇ 320
ஏரணி யெருத்த மிறைமக னேறலும்
குதிரைகள்
தொகுதூய்மை யின்றென மாநிலத் தியங்காக்
கடவு ளியக்கங் கற்குவ போலக்
குளம்புநில னுறுத்தலுங் குறையென நாணிக்
கதழ்ந்துவிசை பரிக்குங் கால வாகி 325
உரத்தகைப் போற்றா ரரற்று மார்ப்பிற்
பந்துபுடை பாணியிற் பொங்குமயிர்ப் புரவி
தேர்கள்
தொகுமருங்கிரு மணிப்புடை நிரந்துடன் மிளிர
நான்முகங் கவைஇய வான்செய் பச்சைய
தானச்செங் கோட்டுத் தோன்மணைப் படுத்த 330
சித்திரத் தவிசிற் செறிந்த குறங்கிற்
பொற்றொடர் பொலிந்த பூந்துகிற் கச்சைய
கத்திகை சிதர்மணி கட்கத்துத் தெரிப்ப
வித்தக நம்பியர் பக்கத்து வலித்த
கானத்துக் குலைந்த கவரி யுச்சிய 335
தானைத் தலைப்படை பாணியிற் பரிப்ப
அச்செறி புலவ ரளவுகொண் டமைத்துக்
கடக நுனித்த கடைக்கட் டிண்ணுகம்
கொய்சுவ லிரட்டை மெய்யுறக் கொளீஇ
ஒட்டிடை விட்ட கட்டின வாயினும் 340
ஒன்றிநின் றியங்காச் சென்றிடை கூடுவ
மாயங் காட்டுநர் மறையப் புணர்ந்த
கோவை நாழிகைக் கொழூஉக்கண் கடுப்ப
வடுச்சொ னீங்கியவயங்கிய வருணத்
திடிச்சொற் பொறாஅ விலக்கண வினையர் 345
உள்ளுறக் கோத்த வள்புகொள் வலித்தொழிற்
பாகர் நின்ற பண்ணமை நெடுந்தேர்
ஆக ……புறஞ்சுற்றக்
காலியற் புரவியொடு களிறுபல பரப்பிப்
பால குமரர் படையகப் படுப்ப 350
உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பிச்
செருமிகுந் தாமமொடு சேனையிற் கூடி
மன்னவ னிருந்த தண்பொழிற் காவிற்
சென்றிறுத் தனரா னம்பிய ரொருங்கென்.
1 38 விழாவாத்திரை முற்றிற்று.