2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25

சீவக சிந்தாமணி

தொகு

2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25

தொகு

(ஆர்வவேர)

தொகு
ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய் |
வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின் |
மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழ |
சோர்வில் கொள்கையான் றோற்ற நீங்கினான். (01) | ( )

(நம்பனித்)

தொகு
நம்ப னித்தலை யாக நன்னகர்ப்
பைம்பொ னோடைசூழ் பரும யானையுஞ் |
செம்பொ னீள்கொடித் தேரும் வாசியும் |
வெம்ப வூர்ந்துலாம் வேனி லானே. (02) |
(வேறு )

(கலையின)

தொகு
கலையின தகலுமுங் காட்சிக் கின்பமுஞ்
சிலையின தகலமும் வீணைச் செல்வமும்
மலையினி னகலிய மார்ப னல்லதிவ்
வுலகினி லைலையென வொருவ னாயினான். (03)
( வேறு)

(நாமவென்றி)

தொகு
நாம வென்றிவே னகைகொண் மார்பனைக் |
காம னேயெனக் கன்னி மங்கையர் |
தாம ரைக்கணாற் பருகத் தாழ்ந்துலாங் |
கோம கன்றிறத் துற்ற கூறுவாம். (04) | ( )

(சில்லம்போ)

தொகு
சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலாம்
முல்லை காரெனப் பூப்ப மொய்ந்நிரை
புல்லு கன்றுளிப் பொழிந்து பால்படுங்
கல்லென் சும்மையோர் கடலின் மிக்கதே. (05) ( )

(மிக்கநா)

தொகு
மிக்க நாளினால் வேழ மும்மத |
முக்க தேனினோ டூறி வார்சுனை |
யொக்க வாய்நிறைந் தொழுகு குன்றின்மேல் |
மக்க ளீண்டினார் மடங்கன் மொய்ம்பினார். (06) | ( )

(மன்னவன்)

தொகு
மன்ன வன்னிரை வந்து கண்ணுறு |
மின்ன நாளினாற் கோடு நாமெனச் |
சொன்ன வாயுளே யொருவன் புட்குரல் |
முன்னங் கூறினான் முழுது ணர்வினான். (07) | ( )

(அடைதுநா)

தொகு
அடைது நாநிரை யடைந்த காலையே |
குடையும் பிச்சமு மொழியக் கோன்படை |
யுடையும் பின்னரே யொருவன் றேரினா |
லுடைதுஞ் சுடுவிற்றே னுடைந்த வண்ணமே. (08) | ( )

(என்றுகூற)

தொகு
என்று கூறலு மேழை வேட்டுவீ |
ரொன்று தேரினா லொருவன் கூற்றமே |
யென்று கூறினு மொருவ னென்செயு |
மின்று கோடுநா மெழுகென் றேகினார். (09) | ( )

(வண்டுமூ)

தொகு
வண்டு மூசறா நறவ மார்ந்தவர் |
தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ |
விண்டு தெய்வதம் வணங்கி வெல்கென |
மண்டி னார்நிரை மணந்த காலையே. (10) | ( )

(பூத்தகோங்)

தொகு
பூத்த கோங்குபோற் பொன்சு மந்துளா
ராய்த்தி யர்நலக் காசெ றூணனான்
கோத்த நித்திலக் கோதை மார்பனினான்
வாய்ந்த வந்நிரை வள்ளு வன்சொனான். (11) ( )

(பிள்ளையுள்)

தொகு
பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலா
ளென்னன் மின்னிரை யின்று நீரென
வெள்ளி வள்ளியின் விளங்கு தோணலார்
முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார். (12) ( )


(காயமீனென)

தொகு
காய மீனெனக் கலந்து கானிரை
மேய வெந்தொழில் வேட ரார்த்துடன்
பாய மாரிபோற் பகழி சிந்தினா
ராயர் மத்தெறி தயிரி னாயினார். (13) ( )

(குழலு)

தொகு
குழலு நவியமு மொழியக் கோவலர்
கழலக் காடுபோய்க் கன்று தாம்பரிந்
துழலை பாய்ந்துலா முன்றிற் பள்ளியுள்
மழலைத் தீஞ்சொல் மறுக வாய்விட்டார். (14) ( )

(மத்தம்)

தொகு
மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ |
ரத்த லைவிடி னித்த லைவிடா |
ருய்த்த னரென வுடைத யிர்ப்புளி |
மொய்த்த தோணலார் முழுது மீண்டினார். (15) |


(வேறு )

(வலைப்படு)

தொகு
வலைப்படு மானென மஞ்ஞையெ னத்தம் |
முலைப்படு முத்தொடு மொய்குழல் வேய்ந்த |
தலைப்படு தண்மலர் மாலைபி ணங்க |
வலைத்த வயிற்றின ராயழு திட்டார் (16) | ( )

(எம்மனை)

தொகு
எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குவிர் |
நும்மனை மார்களை நோவ வதுக்கி |
வெம்முனை வேட்டுவ ருய்த்தன ரோவெனத் |
தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். (17) | ( )

(பாறைபடு)

தொகு
பாறை படுதயிர் பாலொடு நெய்பொரு | பாறை படு தயிர் பாலொடு நெய்பொரு
தாறு படப்பள்ளி யாகுல மாக |
மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது |
சேறு படுமலர் சிந்த விரைந்தே. (18) | ( )

(புறவணி)

தொகு
புறவணி பூவிரிப் புன்புலம் போகி
நறவணி தாமரை நாட்டக நீந்திச்
சுறவணி சூழ்கிடங் காரெயின் மூதூ
ரிறையணிக் கேட்கவுய்த் திட்டனர் பூசல். (19) |
(வேறு )

(கொடுமர)

தொகு
கொடுமர வெயின ரீண்டிக் கோட்டிமி லேறு சூழ்ந்த
படுமணி நிரையை வாரிப் பைந்துகி லருவி நெற்றி
நெடுமலை யத்தஞ் சென்றா ரென்றுநெய் பொதிந்த பித்தை
வடிமல ராயர் பூசல் வளநகர் பரப்பி னாரே. (20) | ( )

(காசின்)

தொகு
காசின் மாமணிச் சாமரை கன்னியர்
வீச மாமக ரக்குழை வில்லிட
வாச வான்கழு நீர்பிடித் தாங்கரி
யாச னத்திருந் தானடன் மொய்ம்பினான். (21) | ( )

(கொண்டவா)

தொகு
கொண்ட வாளொடுங் கோலொடுங் கூப்புபு
சண்ட மன்னனைத் தாடொழு தாயிடை
யுண்டொர் பூசலென் றாற்குரை யாயெனக்
கொண்ட னர்நிரை போற்றெனக் கூறினான். (22) ( )

(செங்கட்)

தொகு
செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக
வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைச்
செங்கட் டீவிழி யாத்தெழித் தான்கையு
ளங்கட் போதுபி சைந்தடு கூற்றனான். (23) |
(வேறு )

(கூற்றின்னிடி)

தொகு
கூற்றின் னிடிக்குங் கொலைவே லவன்கோ வலர்வாய்
மாற்றம் முணர்ந்து மறங்கூர்கடற் றானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறுமீட்கெனக் காவன் மன்ன
னேற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே. (24) | ( )
(வேறு)

(கார்விளை)

தொகு
கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம் கட
போர்விளை யிவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள்
வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோ
னீர்விளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே. (25) | ( )

பார்க்க

தொகு
சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி- பதிகம்


2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75
2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-100
1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25
1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50
1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75
1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100