பெருங்கதை/3 26 பாஞ்சாலராயன் போதரவு

(3 26 பாஞ்சாலராயன் போதரவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 26 பாஞ்சாலராயன் போதரவு

வருடகாரன் செயல்

தொகு

மறைந்தனர் வந்து மாற்றோன் றூதுவர் செறிந்த சூழ்ச்சியிற் செய்வது கூறலும் உவந்த மனத்த னூன்பாற் படுவளை ஒடுங்கிநீ ரிருக்கென வொளித்தனன் வைத்துத் தார காரியைத் தரீஇ நீசென் 5 றூர்கடற் றானை யுதயணற் குறுகி எண்ணிய கரும மெல்லாந் திண்ணிதிற் றிரித லின்றி முடிந்தன வதனால் பரிதல் வேண்டா பகைவன் றூதுவன் சகுனி கௌசிகன் றன்னை யன்றியும் 10 விசயவில் லாளரை விடுத்தனன் விரைந்தென் றோடினை சொல்லென நீடுத லின்றி

தாரகாரியின் செயல்

தொகு

வகைமிகு தானை வத்தவற் குறுகித் தகைமிகு சிறப்பிற் றார காரி உணர்த்தா மாத்திர மனத்தகம் புகன்று 15

உதயணன் செயல்

தொகு

பிங்கல சார மாணி முதலாப் பைங்கழன் மறவர் பதின்மரைக் கூஉய் ஆடியல் யானை யாருணி தூதுவர் மாடியந் தானை வருட காரனொடு கூடிய வந்தனர் கொணர்மின் சென்றென 20

மறவர் செயல்

தொகு

நிறைநீ ரகவயிற் பிறழும் கெண்டையைச் சிறுசிர லெறியுஞ் ஞெய்கை போல உறுபுக ழுதயணன் றறுகண் மறவர் பற்றுபு கொண்டுதங் கொற்றவற் காட்ட

உதயணன் செயல்

தொகு

இடவகன் கையு ளிருக்க விவரெனத் 25 தடவரை மார்பன் றலைத்தா ளுய்ப்ப

இடவகன் செயல்

தொகு

அந்தி கூர்ந்த வந்தண் மாலைச் செந்தீ யீமஞ் செறியக் கூட்டி அகணி யாகிய வாய்பொருட் கேள்விச் சகுனி கௌசிகன் றன்னொடு மூவரை 30 இடுமி னென்றவன் கடுகி யுரைப்ப நொடிபல வுரைத்து நோக்குதற் காகா அடலெரி யகவயி னார்த்தன ரிடுதலும்

உதயணன் செயல்

தொகு

உள்ளுடைக் கடும்பகை யுட்குதக் கன்றென நள்ளிரு ளகத்தே பொள்ளென வுராஅய் 35 இன்கட் பம்பை யெரரீஉக்குர லுறீஇ இருந்த குரம்பை யெரியுண வெடுப்பிக் கருவியு முரிமையுங் காப்புறத் தழீஇ அருவி மாமலை யரணென வடைதலின்

வருடகாரனது நடிப்பு

தொகு

மறஞ்சால் பெரும்படை வருட காரனும் 40 அறஞ்சால் கெண்ணிய தவப்பட் டதுவெனக் கைவிரல் பிசைந்து செய்வதை யறியான் வந்தோர் தெளிய நொந்தன னுவல

பிழைத்தோர் ஆருணி யரசன்பாற் சென்று கூறுதல்

தொகு

உய்ந்தோ ரோடி யூரகங் குறுகிப் பைந்தார் வேந்தனைக் கண்டுகை கூப்பி 45 அகலா தாகிய வரும்பெறற் சூழ்ச்சிச் சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே உதையண னுணர்ந்து புதைவனர்த் தம்மெனத் தமர்களை யேவலி னவர்வந் தவரைக் கொண்டனர் செல்ல வண்டலர் தாரோன் 50 விடைப்பே ரமைச்சனுழை விடுத்தலின் மற்றவன் கண்டவர் நடுங்கத் தண்டந் தூக்கி இன்னுயிர் தபுக்கென வெரியகத் திட்டதும் பின்னர் மற்றவன் பெருமலை யடுத்ததும் நம்மொடு புணர்ந்த நண்புடை யாளன் 55 எம்மொடு போதந் திப்பாற் பட்டதும் இன்னவை நிகழ்ந்தவென மன்னவற் குரைப்ப

ஆருணி யரசன் செயல்

தொகு

அயிர்த்தவ னகன்றன னாதலி னிவனொடு பயிர்ப்பினி வேண்டா பற்றுத னன்றெனப் பெயர்த்தவன் மாட்டுச் செயற்பொரு ளென்னென 60 அகத்தர ணிறையப் பெரும்படை நிறீஇப் புறப்படப் போந்தெற் புணர்க புணர்ந்தபின் செறப்படு மன்னனைச் சென்றன நெருக்குதும் என்றனன் விடுத்தலி னன்றென விரும்பிக் கோயிலு நகரமுங் காவலு ணிறீஇக் 65 காழா ரெஃகமுதல் கைவயிற் றிரீஇயர் ஏழா யிரவ ரெறிபடை யாளரும் ஆறா யிரவ ரடுகடு மறவரும் வீறார் தோன்றலொடு விளங்குமணிப் பொலிந்தன ஆயிரந் தேரு மடர்பொன் னோடையொடு 70 சூழியிற் பொலிந்தன பாழியிற் பயின்றன ஐந்நூ றியானையு மகினா றகற்சிய ஆர்க்குந் தாரொடு போர்ப்படை பொலிந்தன மிலைச்ச ரேறித் தலைப்படைத் தருக்குவ ஒருபதி னாயிரம் விரைபரி மாவும் 75 முன்ன வாகத் தன்னொடு கொண்டு நாவாய்ப் பெருஞ்சிறை நீர்வாய்க் கோலிச் சாந்தார் மார்பிற் சாயனுஞ் சாயாக் காந்தா ரகனுங் கலக்கமில் பெரும்படைச் சுருங்காக் கடுந்திறற் சூர வரனெனும் 80 பெரும்பேர் மறவனும் பிரம சேனெனும் அரும்போ ரண்ணலு மவர்முத லாகப் பெரும்படைத் தலைவரும் பிறருஞ் சூழப் பூரண குண்டல னென்னு மமைச்சனொ டாருணி யரசன் போதர வறிந்தபின் 85

வருடகாரன் செயல்

தொகு

அடக்கருஞ் சீற்றத் தாருணி கழலடி வடுத்தீர் வருடகன் வணங்கினன் காண

ஆருணி வருடகாரனுக்குச் சிறப்புச் செய்தல்

தொகு

எடுத்தனன் றழீஇ யின்னுரை யமிர்தம் கொடித்தேர்த் தானைக் கோமான் கூறி இருக்கென விருந்த பின்றை விருப்போ 90 டாய்தார் மார்ப னீர்வயி னிரைத்த நாவாய் மிசையே மேவா ருட்கப் பதினா றாயிர ரடுதிறன் மறவரும் அதிராச் செலவின வாயிரங் குதிரையும் முதிரா யானை முந்நூற் றறுபதும் 95 காணமும் வழங்கி நாணா டோறும் ஊனிடை யறாமை யுணாத்தந் திடீஉம் சேனை வாணிகஞ் செறியக் காக்கென வல்வினைக் கடுந்தொழில் வருட காரன் செல்படைக் குபாயஞ் செறியக் கூறி 100 மறுகரை மருங்கிற் செழியப் போக்கிப் பாஞ்சால ராயனைப் பாங்குறக் கண்ணுற் றாம்பாற் கரும மாண்புறக் கூற அருஞ்சிறைத் தானை யாருணி யரசனிற் பெருஞ்சிறப் பெய்தி யிருந்தன னினிதென். 105 3 26 பாஞ்சாலராயன் போதரவு முற்றிற்று.