பெருங்கதை/5 8 மதனமஞ்சிகை வதுவை

(5 8 மதனமஞ்சிகை வதுவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

5 8 மதனமஞ்சிகை வதுவை

யூகி உதயணனுக்குக் கூறல்

தொகு

நலம்பெறு நகரம் புக்கன னாகி
நிலம்பெறு திருவி னெடுமுடி யண்ணலைக்
கண்டுகண் கூடிக் கழலுறப் பணிந்து
மண்டமர்க் கடந்த மறமாச் சேனன்
உள்ளத் தன்ன வுவகைசெய் தனவும் 5
வள்ளற் றனமும் வகுத்தனன் கூறி
அவந்தி நாடு மணியுஞ் சேனையும்
இயைந்து முந்துறீஇ யிருபாற் குலனும்
தெம்மு னிழியாத் தெளிவிடை யாகச்
செம்மையிற் செய்த செறிவுந் திண்மையும் 10
நம்பிக் கீத்த நன்புகழ் நாடும்
இன்னவை யென்று பன்முறை பயிற்றி

உதயணன் செயல்

தொகு

நாட்டு வாயுளுங் காட்டு வாயுளும்
கரத்த லின்றிப் பரத்த னன்றெனத்
தாமுடை நாடு நகரமுந் தரீஇ 15
வாய்முறை வந்த வழக்கியல் வழாமை
ஏட்டுமிசை யேற்றி யியல்பினின் யாப்புறுத்
தாற்றல் சான்ற வரும்பெறற் சுற்றமொடு
கூற்றமும் விழையக் கோலினி தோச்சிக்
கோட்ட மின்றிக் குடிபுறங் காத்து 20
வான்னொழிற் றானை வத்தவர் பெருமகன்
அன்புடைத் தோழரோ டின்புற் றொழுகச்
சிறந்த திருவொடு செல்வம் பெருகப்
பிறந்த நம்பி திறங்கிளந்துரைப்பேன்

நரவாணதத்தனுடைய இளமைப் பருவம்

தொகு

குலக்குவிளக் காகத் தோன்றிக் கோலமொடு 25
நலத்தகு சிறப்பி னல்லோர் நாப்பண்
இலக்கணம் பொறித்த வனப்புடை யாக்கையன்
விசும்பிற் கவாவும் வேட்கைய னாகிப்
பசும்பொற் பல்படை யிலங்குங் கழுத்தினன்
திருவா ணாய தேங்கமழ் மார்பன் 30
நரவாண தத்த னாடொறு நந்தி
உலம்பொரு மார்பி னுதயண குமரன்
நலம்பெறு தோழர் நால்வரும் பெற்ற
வலம்பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த
நலம்பெறு கோமுக னாம வரிசிகன் 35
தகைமிகு பூதி தவந்தக னென்னும்
நன்ன ரமைந்த நால்வருஞ் சூழத்
தளர்நடைக் காலத் திளமை யிகந்து
நல்லா சாரமொடு நல்லோர் காட்ட
நற்பொருண் ஞான நவின்றுதுறை போகி 40
விற்பொரு ணன்னூல் விதியி னுனித்துப்
படைக்கலக் கரணம் பல்வகை பயிற்றிக்
கொடைக்கடம் பூண்ட கொள்கைய னாகிக்

நரவாணதத்தனது கௌமாரப் பருவம்

தொகு

குறைவில் செல்வமொடு குமார காலம்
நிறையுற வுய்த்து நீர்மையின் வழாஅ 45
ஏமஞ் சான்ற விந்நில வரைப்பிற்
காம னிவனெனக் கண்டோர் காமுறத்
தாளுந் தோளுந் தருக்கி நாளும்
நடவா நின்ற காலை மடனார்ந்

கணிகையர் இயல்பு

தொகு

தீற்று மந்தி யிற்றெழு பூங்கொடி 50
புற்புல முதிரக நற்றுற விக்கே
போல்வ ரென்னுஞ் சால்வுடை யொழுக்கிற்
கலைதுறை போகிய கணிகா சாரத்துப்
பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு
படிவங் குறிக்கும் பாவனை மேற்கொண் 55

கலிங்க சேனை

தொகு

டடிமையிற் பொலிந்த வகன்பரி யாளத்துத்
தலைக்கோற் சிறப்பி னலத்தகு மகளிர்
ஆயிரத் திரட்டி யைந்நூற் றுவர்களுட்
காசில் சிறப்பிற் கலிங்க சேனையென்
றோசை போகிய வொளியின ளாகிய 60

மதனமஞ்சிகை பந்தாடுகையில் பந்து கீழே விழுதல்

தொகு

மாசில் கற்பின் மடமொழி மடமகள்
வானோ ருலகி னல்லது மற்றவட்
கீனோ ருலகி னிணைதா னில்லெனக்
கண்டோ ராயினுங் கேட்டோ ராயினும்
தண்டாது புகழுந் தன்மைய ளாகித் 65
துதைபூங் கோதை சுமத்த லாற்றா
மதர்மா னோக்கின் மாதரஞ் சாயற்
பதரில் பணிமொழிப் பணைத்தோட் சின்னுதல்
மதர்வை நோக்கின் மதனமஞ் சிகைதன்
மலைபுரை மாடத் துயர்நிலை மருங்கின் 70
அணிச்சா லேகத் தணித்தகு துளையூ
டெறிபந் திழுக்குபு விழுதலி னோக்கிச்

நரவாணதத்தன் உலாவரல்

தொகு

செறிவளைத் தோளி செம்முக மாக
வேகத் தானை வேந்த னொருமகன்
போகுகொடி வீதியிற் புகழ்ந்துபல ரேத்த 75
அருவரை மருங்கி னருவி போல
இருகவுண் மருங்கினுஞ் சொரிதரு கடாத்ததோர்
இடுமணி யானை யெருத்த மேறிப்
படுமுகின் மீமிசைப் பனிமதி போல
உலாவெனப் போந்தோ னிலாவுறழ் பூந்துகிற் 80
நரவாணதத்தன் மதனமஞ்சிகையைக் கண்டு விரும்பல்==
றானைப் படுதலிற் றானே கொண்டிஃ
திட்டோ ளார்கொலென் றெட்டி நோக்கினன்
நிறைமதி வாண்முகத் துறழ்வன போல
நீளரி யொழுகி நிகர்தமக் கில்லா
வாள்புரை தடங்கண் வளைத்தவள் வாங்கி 85
நெஞ்சகம் படுப்ப வெஞ்சின வீரன்
அறியா மையின் மறுகுறு சிந்தையன்
பந்துவலி யாகப் பையெனப் போகியோர்
அந்தண் காவினு ளசைந்தன னிருந்து

நரவாணதத்தன் கோமுகனை வினாதல்

தொகு

கொய்மலர்ப் படலைக் கோமுகற் கூஉய்க் 90
கைபுனை வனப்பிற் கணிகையர் சேரியிற்
செய்பந் தீதுடைச் சேயிழை மாதரை
ஐய மின்றி யறிதி யாயின்
மெய்பெற வுரையென மேயினன் வினவக்

கோமுகன் மதனமஞ்சிகையின் உருவத்தை எழுதுதல்

தொகு

கையிற் கொண்டோன் கண்டன னதன்மிசை 95
ஒற்றிய வொற்றைத் தெற்றெனத் தெரிந்து
நறுவெண் சாந்தம் பூசிய கையாற்
செறிவுறப் பிடித்தலிற் செறிவிர னிரைவடுக்
கிடந்தமை நோக்கி யுடங்குணர் வெய்தி
விரலும் விரலிற் கேற்ற வங்கையும் 100
அங்கைக் கேற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக் கேற்ற நன்கமை தோளும்
தோளிற் கேற்ற வாளொளி முகமும்
மாப்படு வடுவுறழ் மலர்நெடுங் கண்ணும்
துப்பன வாயு முத்தொளி முறுவலும் 105
ஒழுகுகொடி மூக்கு மெழுதுநுண் புருவமும்
சேடமை செவியுஞ் சில்லிருங் கூந்தலும்
ஒல்குமயி ரொழுக்கு மல்குற் பரப்பம்
மருங்கி னீளமு நிறங்கிளர் சேவடித்
தன்மையு மெல்லா முன்முறை நூலின் 110
அளந்தனன் போல வளம்பட வெழுதிப்
பாவை யிலக்கணம் பற்றி மற்றதன்
நிறமு நீளமும் பிறவுந் தெரியாச்
செறிதா னண்ணலைச் செவ்வியின் வணங்கி
இதன்வடி வொப்போ ளிந்நகர் வரைப்பின் 115
மதன மஞ்சிகை யாகுமென வலித்துப்

கோமுகன் மதனமஞ்சிகை வீடு சென்று பரிசங்காட்டல்

தொகு

பந்துகைக் கொண்டு மைந்தன் போகிக்
காழார் வனமுலைக் கணிகையர் சேரித்
தோழ னுள்ளத் தாழ்நனி கலக்கிய
மாதர் மனைவயிற் நூதுவ னாகிப் 120
பல்காற் சென்று மெல்லெனச் சேர்ந்து
குறிப்புடை வெந்நோய் நெறிப்பட நாடிய
பாசிழை நன்கலம் பரிய மாக
மாசில்பந் தறிவு படமேல் வைத்தாண்
டீன்ற தாய்முதற் றோன்றக் காட்டிப் 125

பரத்தையர் செயல்

தொகு

பட்டது கூறலி னொட்டிய வுவகையள்
வழிபடு தெய்வம் வரந்தரு கின்றென
மொழிவன ளாக முகத்தின் விரும்பித்
தாயுந் தவ்வையுந் தம்மொடு பயின்ற
ஆய்வளை மகளிரு நிகழ்ந்ததை யறிந்து 130
சீரின மதித்துச் சிற்றின மொரீஇப்
பேரினத் தவரொடு பெருங்கிளை பிரியாத்
தலைக்கோன் மகளிர் தன்மை கூறிக்
மற்கெழு கானவன் கைக்கோ லுமிழ்ந்த
ஏற்படு சுறுதீ யெழுச்சியிற் காமம் 135
மிகுமனத் துவகையி னொல்லை விருப்பம்
முறையின் முறையின் முறுக மூட்டிக்
கொடித்தேர்க் கோமான் குறிப்பி னல்லதை
அடித்தியை யருளுதல் யாப்பின் றெமக்கெனப்
படிற்றுரை மகளிர் பரிய மறுப்பு 140

கோமுகன் கூறல்

தொகு

இருங்கண் வையகந் தேந்தலு முரியன்
மருந்தேர் கிளவி மதனமஞ் சிகைதன்
காமரு நோக்கங் காணக் கூடும்
ஏம வைக லியல்வதா மெனினென

உதயணன் மதனமஞ்சிகைக்குப் பொன் விடுத்தல்

தொகு

அன்றுகை நில்லாது சென்ற வுள்ளமொடு 145
பகன்மதி போலப் பசந்த குமரன்
இகன்மிசை யுள்ளத்தெவ்வங் கேட்டுத்
தலைப்பெருந் தேவியுந் தந்தையுங் கூடிக்
குலப்பெருந் தேவியாக் கோடி விழுநிதி
சிறப்பின்விட் டிருந்து நலத்தகு கிழமைக் 150
கியாவது முரியோ ரிவளி னில்லெனக்
காவல் வேந்தன் காணங் காண்டலின்

நரவாணதத்தன் மணம்

தொகு

உறாஅர் போல வுற்ற காதலொடு
மறாஅ மாதர் வதுவை வலித்தபின்
மதிபுரை முகத்தியை மன்னவ னொருமகன் 155
வதுவைச் செல்வமொடு வான்றோய் வியனகர்
விதியி னெய்தி விழவு முந்துறீஇப்
பதன்றிந்து நுகருமாற் பண்புமிகச் செறிந்தென்.

5 8 மதனமஞ்சிகை வதுவை முற்றிற்று.