அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராமாவதாரம்

தேவாதிதேவர் தினம்ஏவல் செய்திட வே
மூவாதிமூவர் ஊழியங்கள் செய்திடவே
மூர்க்கமதால்பாவி ஊழியங்கள் கொண்டதினல்
பொறுக்கமுடியாமல் பூலோகதார்கல்ளெல்லாம்
தெய்வஸ்த்தீரீயும் தேவாதிதேவர்களூம்
அய்யா திருமாலுக்கபையமபையமிட
அபயமிடும்மொலியை அச்சுதருந்தானமர்த்தி
கபயமிடுவேதன் கயிலையதுதானேகி
ஆதிபரமன் அடியைமிகப்போற்றி
சோதித்திருமால் சொல்லுவாரம்மானை
பத்துத்தலைய்யுடைய பாவியரக்கனுக்கு
மற்றும்பலகோடிவரங்கள்மிகயீந்ததினல்
தேவரையும்மூவரையும் தெய்வேந்திரன்வரையும்
நால்வரையும்வேலைகொண்டு நாடாண்டானம்மானை
ஆந்தால்தேவர் அரிக்கேமுறையமிட
ஈனமில்லாதேகேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளியுறக்கம் பரிவாய்வருகுதில்லை
தள்ளினல்தேவரையுந் தற்காப்பாராருமில்லை
என்னவசமாய் எடுப்போஞ்சுரூபமது
தன்னிகரில்டாதவனே சாற்றுவீரென்றனராம்
மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து
தூயவருமங்கே சொல்லுவாரம்மனை
பாவியரக்கனுக்கு பண்டுநாமீந்தவரம்
தாவிப்பறிக்கத் தானக்தென்னலே
என்றரமனார்சொல்ல எம்பெருமாளச்சுதரும்
அன்றெம்பெருமாள் ஆலோசனையாகி
என்னைமகவாய் யெடுக்கத்தசரதரும்
முன்னைவரங்கேட்டு உல்கிலவனிருக்க
அன்னுகத்திலுள்ள வாசந்தினகரனும்
பொன்னுதிருவை பிள்ளையெனவந்தெடுக்க
நெட்டையாயரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப்பார்த்துத் தானனுப்புமீசுரரே
பின்னும்பெருமாள் பெரியோனைப்பார்துரைப்பார்
முன்னுமுறையாய் முறைப்படியேதேவரையும்
வானரமாய்ப்பயிலே வந்துபிந்திருக்க
தானவரேயிப்போ தான்படைக்கவ்பேணுமேன்றர்
ஏவலாய்யெந்தனக்கு இப்பிறப்பானதிலே
பள்ளிகொண்டுநானிருந்த பாபுராசன்றனையும்
வெள்ளிமணிமெத்தையையும் வீற்றிருக்குமாசனமும்
இம்மூன்றுபேரும் என்னேடுடன்பபிறக்க
சமூலப்பொருளே தான்படைக்கவேணுமென்றர்
மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து
தூயவருமந்தப்படியே தெளிந்திருக்க
படைக்கும்பொழுதில் பரதேவரெல்லோரும்
அடைக்கலமேமாயன் அடியெனத்தெண்டனிட்டார்
தெண்டனிட்டுத்தேவரெல்லாம் செப்புவாரம்மானை
மண்டலமெங்கும் மயமாய்நிறைந்தோனே
எங்களைலோகமதில் இப்போபடைப்பீரால்
மங்களமாயுள்ள வலுவும்பிலமதுவும்
ஆயனுக்குநான்ங்கள் அடிப்ணிந்தேவல்செய்ய
நேயனேநீரும் நெறியாய்ப் படையுமென்றர்
ஈசர்மகிழ்ந்து இப்படியேதான்படைக்க
வாசத்தசர தரும் வந்துதினகரனும்
மகவாசையுற்று மகாபானைத்தானேக்கி
அகபாசமற்று அதிகத்தவமிருந்து
நாதனறிந்து நல்மறயைத்தான்பார்த்து
பாதகரைக்கன் பத்துச்சிரத்தானை
தேவர்துயரமறத் திமால்தசரதற்கு
மூவருடன்கூடி உலகமதிலேபிறக்க
அரக்கர்குலமறவே அம்மைசீதாலட்சுமியை
இரக்கம்போலுள்ள ஏற்றதினகரருக்கு
மகவாய்ப்பிற்க்க மறைதான்விதித்தபடி
செக்மிதில்ஞான சிருஷ்டிசிவமயமாய்
இப்படியேவேதத்து எழுத்தின்படியாலே
அப்படியேயீச்ர் அமைக்கத்துணிந்தனராம்
உடனே தசரதர்க்கு உற்றதிருமாலை
திடமாய்ப்பிறவி செய்ய எனத்துணிந்தார்