அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராவணன் கொடுமை
- முக்கோடிவரத்தை உச்சிகொண்டார்மாயவனார்
- அக்கரைக்கோடி அரக்கன்வரங்கொண்டேகி
- தேவரையும் மூவரையுந் தெய்வேந்திரன்வரையும்
- நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டானம்மானை
- வாசுவும் அரக்கன் மணிமேடை தூரட்டால்
- வீசுவேன்வாளால் வெட்டுவேன் பாருவென்பான்
- வருணனவன் மேடை வந்துதெளியாதிருந்தால்
- மரணம்வரும்வரையும் வல்விலங்கில் வைப்பேனென்பான்
- சந்திரருஞ் சூரியருஞ் சாய்ந்துமிகப் போகாட்டால்
- சந்துசந்தாக சரத்தாலறுப்பேனென்பான்
- தெய்வமடவார்கள் திருக்கவரிவீசாட்டால்
- கைவரிந்துகட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
- நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
- பாலுக்குடஞ்சுமந்து பணிந்துமுன்னில்லாட்டால்
- அஸ்திரத்தால்வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
- நெற்றிதனில் கொட்டிடுவேன் நிச்சயமென்பானரக்கன்
- வானவர்களெல்லாம் மலரெடுத்தென்காலில்
- தானமதுபண்ணி தாழ்ந்துநில்லாதேயிருந்தால்
- சாகும்வரைக்கும் தடியிரும்பிலிட்டவரை
- வேகும்படிக்கு வேள்விதனிலிட்டிடுவேன்
- மாமறலிமூவர் வன்தென்சொல்கேளாட்டால்
- காமனையுமீசன் கண்ணாலெரித்ததுபோல்
- என்னுடையகண்ணால் எமனையுங்காலனையும்
- துன்னுடையவல்ல தூதனையும் நானெரிப்பேன்
- இவ்வுலகத்திலுள்ள ராசாதிராசரெல்லாம்
- முவ்வுகமுங்கர்ப்பமிங்கே முன்னாடித்தாராட்டால்
- நெருப்பெடுத்திட்டிடுவேன் நேரேகொண்டுவாராட்டால்
- எரிப்பேனோரம்பால் ராசாதிரசரையும்
- இப்படியேபாவி இந்திரலோகம் வரையும்
- அப்படியே அரக்கன் அடக்கியரசாண்டிருந்தான்
- அப்படியே அரக்கன் ஆண்டிருக்குமன்னாளில்
- முப்படியேவிட்டகுறை முடிவாகும் நாளையிலே.