அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராவணன் வரம் வேண்டல்

இராவணன் வரம் வேண்டல்


பத்துத்தலையான பாவியரக்கனவன்
மற்றுநிகரொவ்வா வாய்த்தபரமேசுரரை
வணங்கித்தவம்வேண்ட மனதில்ப்பிரியமுற்று
இணங்கியேஈசர்பதம் இறைஞ்சிநின்றானம்மானை
தவத்தருமைகண்டு தலைபத்தரக்கனுக்கு
சிவத்தலைவரானோர் செப்புவாரம்மானை
காதுரண்டுபத்து கண்ணிருபதுள்ளோனே
ஏதுவரம்வேணும் இப்போதுசொல்லுமென்றார்
அப்போதுஈசுரரை அரக்கனவன்வணங்கி
இப்போது ஈசுரரே யான்கேட்குமவ்வரங்கள்
தருவோமெனவே தந்திமுகன்பேரில்
உருவாயெனக்கு உறுதிசெப்புமென்றுரைத்தான்
அப்படியேயீசர் ஆணையிட்டுத்தான்கொடுக்க
சொல்படியேகேட்டேயரக்கன் சொல்லுவானப்போது
மூன்றுலோகத்திலுள்ள முனிவர்தேவாதிகளும்
வேண்டும்பலவாயுதமும் விதவிதமாய் அம்புகளும்
வீரியமாய்நானிருக்கும் வீண்தோயுங் கோட்டைசுற்றி
சூரியனுஞ்சந்திரனுஞ் சுற்றியதுபொயிடவும்
சிவனாரொருகோடி செய்யவரந்தரவும்
புவனம்படைக்கும் பிரம்மாவொருகோடி
உமையாளொருகோடி உற்றவரந்தரவும்
இமையோரரைக்கோடி இப்படியேயுள்ளவரம்
மூணரைக்கோடி உள்ளவரமத்தனையும்
தாணரேயெந்தனுக்கு தாருமென்றானம்மானை
துடுக்கனிவன்கேட்ட சுத்தவரமத்தனையும்
கொடுக்குமவ்வளவில் குன்றெடுத்தோன்தன்தேவி
அலைமேல்துயிலும் அச்சுதனார்தன்தேவி
சிலைவேலெடுத்து செயிக்கவல்லோன்தன்தேவி
அலங்காரமாகி அன்றைப்பொழுததிலே
கலங்காதான்தேவி கைலையுமையாளருகே
மணிமேடைதன்னில் மகிழ்ந்திருக்குமவ்வளவில்
கெணியாமலேயரக்கன் கெடுவதறியாமல்
அம்மைதனைக்கண்டு அயர்ந்துமுகஞ்சோர்ந்து
கர்மவிதியால்க் கைமறந்து நின்றனனே
நின்றவுணர்வை நெடியசிவமறிந்து
அன்றந்தரக்கனுக்கு ஆதிவரங்கொடுத்து
கேட்டவரங்கள் கெட்டியாய்த்தான்கொடுத்து
நாட்டமுடன்சீதை நகையாலழிவையென்று
இரக்கமில்லான்கேட்ட ஏற்றவரங்களெல்லாம்
அரக்கனவன்றனக்காதி மிகக்கொடுத்தர்
ஆதிகொடுத்த அவ்வரங்களத்தனையும்
நீதியில்லான்வேண்டி நெடியோன்றனைவணங்கி
கொண்டுபோகும்போது குன்றெடுத்தமாயவரும்
கண்டுமறித்து கவுசலமிட்டேமாயன்
அரைக்கோடிவரமாய் ஆக்கிவிட்டார்மாயவரும்
சரக்கோடிமூணுந் தான்தோற்றுப்போயினனே
ஆதியைத்தொழுதுபோற்றி அரக்கனும்வரமும்வேண்டி
சீரியசீதையாலே சிவனுக்கிடறும்பெற்று
வாரியமூணுகோடி வரமதுதோற்றுப்பின்னும்
மூரியன் மூன்றுலோகம் முழுதுமேயடக்கியாண்டான்