அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/திரேதா யுகம்
←←இரணியன் பாடு | திரேதா யுகம் | இராவணன் வரம் வேண்டல்→→ |
- அந்தப்பதியில் அலங்கரித்தநாள்கழித்து
- ஆதிகயிலை அரனாரிடத்தில்வந்து
- வேதியரும்நன்றாய் விளம்புவாரம்மானை
- சூரபர்ப்பனென்ற சூரக்குலங்களைத்துணித்து
- வீரம்பறைந்ததினால் மேலுமதயுகத்தில்
- கொன்றுகிறேதா குவலயமுனானழித்து
- முன்னுகலந்திருந்த ஆறுமுகவேசம்
- சென்தூருவாரித் திரைமடக்கில்வாழ்ந்தீரென்று
- வந்தோங்காணைய்யா மலர்பாதந்தெண்டனிட
- என்றேதானாதி ஈசரோடெதுரைப்பார்
- அன்றேதான் ஈசர் அருளுவாராயருக்கு
- முன்னேகுறோணி முடிந்ததுண்டாறதிலே
- இன்னுமூணுதுண்டு இருக்குதுகாண்மாயவரே
- என்றீசர்சொல்ல எல்லோருந்தான்கூடி
- அன்றிருன்ததுண்டம் அதிலொருதுண்டமதை
- உருவாய்ப்படைத்து உருகொடுக்குமவ்வளவில்
- அருகேயிருந்த அச்சுதருமேதுரைப்பார்
- முன்னேயிவனும் முற்பிறப்பானதிலே
- என்னோடே பாசி எதிர்த்தான்காண் ஈசுரரே
- ஆனதாலிப்பிறவி அரக்கனிவன்றனக்கு
- ஈனயில்லாச்சிரசு ஈரஞ்சாய்ப்படையும்
- பத்துச்சிரசும் பத்துரண்டுகண்காதும்
- தத்துவங்களோடே தான்படையுமென்றுரைத்தார்
- மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து
- வாய்ச்சிரசுபத்தாய் வகுத்தார்காணம்மானை
- கூடப்பிறக்க குண்டிலிட்டரத்தமதை
- வாடவரக்கர்குலமாய்ப் பிறவிசெய்தார்
- அப்போபடைக்கும் அவ்வளவில்மாயவனார்
- மெய்ப்பானமேனிதனில் வியர்வைதனையுரிட்டி
- விபீசணனென்று மெய்யுருவந்தானாக்கி
- கவுசலமாயரக்கன் தம்பியெனக்கருத்தாய்
- கூடியிருந்து அரக்கன்குறியறிந்து
- வேடிக்கையாக வீத்திரென்றுதானுரைத்தார்