அருள்நெறி முழக்கம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.



அருள் நெறி முழக்கம்



தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பதிப்பாசிரியர்
தவத்திரு பொன்னம்பல அடிகளார்




அருள்நெறிப் பதிப்பகம்

குன்றக்குடி - 630 206

சிவகங்கை மாவட்டம்.



நூல் விபரம்

நூலின் பெயர் : அருள் நெறி முழக்கம்
நூலின் தன்மை : பொழிவுத் தொகுப்பு
ஆசிரியர் : தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பதிப்பாசிரியர் : தவத்திரு பொன்னம்பல அடிகளார்
உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி
பதிப்பாண்டு : முதற்பதிப்பு:செப்டம்பர் 2006
படிகள் : 1200
பக்கங்கள் : 96
விலை : ரூ. 40 /-
நூல் வடிவாக்கம் : சொ. அருணன்
அச்சிட்டோர் : வெற்றிவேல் ஆப்செட் பிரிண்டர்ஸ்
பாண்டிச்சேரி - பேச: 9345452912
வெளியீடு : அருள்நெறிப் பதிப்பகம்
குன்றக்குடி-630 206
சிவகங்கை மாவட்டம்



குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் குருபூசை
விழாவில் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களால்
வெளியிடப்பெற்றது.




பதிப்புரை


தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ருள்நெறி முழக்கம்! இருள்படர்ந்த தமிழகத்தில் உதய ஒளிக்கீற்றாய் உலாவந்த அருள்ஞான உரைகளின் தொகுப்பு! உதய ஞாயிற்றுக்கு வரவு கூறிய புரட்சியின் புதிய பூபாளங்கள்! நாத்திகத்தின் நெருக்கடியால் சனாதனம் சரிந்து விழுந்தபொழுது உண்மையான ஆன்மிகத்தை உயர்த்திப்பிடித்த ஆன்மிக உயிர்த்துடிப்பு! கோலத்தாலும் உள்ளத்தாலும் துறந்த துறவுச்சிங்கத்தின் கர்ஜனை காற்றில் கரைந்த கற்பூரமாய்க் காணாமல் போய்விடாமல் வரலாற்றுக் கல்வெட்டாய்ச் செதுக்கும் முயற்சிதான் தங்கள் கரங்களில் தவழும் அருள்நெறிமுழக்கம் என்ற இந்த சீரிய சிந்தனை நூல்! வரலாற்றைப் படைத்தவரை வரலாறாய் வாழ்ந்தவரின் வார்த்தைகளே வருங்கால வரலாற்றுக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் முகிழ்த்ததுதான் அருள்நெறி முழக்கம் எனும் இந்நூல்!

தம் ஊனில் உயிரில் மகாசந்நிதானம் எண்ணிப் பார்த்த இலட்சிய, சமய, சமுதாயத்தினைப் படைக்க விரும்புவதே இந்நூலின் நோக்கம்! மகாசந்நிதான்த்தின் உரைகளின் வாயிலாகக் கடந்த காலத் தமிழகத்தின் சமய, சமுதாய வரலாறு ஊடும் பாவுமாக இழையோடியிருப்பதை உணர முடிகின்றது. பிரார்த்தனையைப் பாருங்கள்! ஆசைகளின், அபிலாஷைகளின் கூடங்களாக வழிபாட்டு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதுவா நம் பிரார்த்தனை? சிவபூசையினால் ஏதாவது நன்மை உண்டாகுமேயானால் அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளாமல், 'ஆண்டவரே நீயே ஏற்றுக் கொள்வாயாக!' என்று சைவசமயக்குரவர்கள் கூறிச் சென்றது பூசை தொண்டு இவற்றின் பயன் தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்ற பற்றற்ற, பற்று நிலையில்தான்! பாரதி கடவுளிடம் வேண்டிய பிரார்த்தனை பொதுநலம், உலக உயிர்க்குல நாட்டம் சார்ந்தது. அப்படிப் பிரார்த்தனை அமைய வேண்டும் என்று மகாசந்நிதான்ம் கூறுவது நனவாக வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை!

'சமயக் கொள்கைகள் பெட்டியினுள் அடைக்கப்பட்டிருந்தால் மக்களுக்கோ அவர்கள் வாழ்கின்ற நாட்டிற்கோ பயன்தர முடியாது. அவற்றால் நாடும், மக்களும் பயன்பெற வேண்டுமானால் சமயக் கொள்கைகளை ஒர் இலட்சியத்தின் அடிப்படையில் நின்று மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்' என்ற மகாசந்நிதானத்தின் வாக்குத்தான் அப்பரடிகள் காட்டிய ஆன்மிகத்தடம்! 'எல்லோரும் மந்திரத்தைச் செபியுங்கள்' என்று இராமாநுஜர் காட்டிய புரட்சியில் பூத்த பொதுமைத் தடம்! 'மண்ணில் நல்லவண்ணம் வாழ' வழிகாட்டிய நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் காட்டிய நல்தடம்! எம்பிரானை ஏவல் கொண்ட நற்றமிழ்ச் சுந்தரர் காட்டிய தனித்தமிழ்த்தடம்!

உடைக்கப்போகும்
நாத்திகனையும்
ஒருகணம் நிற்கவைத்து
அழகு பார்த்து ரசிக்க வைக்கின்றது
சிலை!

என்ற கவிவரிகள், கடவுள் மறுப்புக் கொள்கைகூட கடவுளின் மீதுள்ள கோபத்தால் தோன்றியது அல்ல; கடவுளின் பெயரால் நடைபெற்ற கயமைகளால்தான் என்பதை அறிவுறுத்துகின்றன!

அண்ணல் காந்தியடிகளின் பிரார்த்தனையைப் பற்றி நம் அடிகள் பெருமான் விளக்குகின்றார். என்னே! உன்னதமான மகாத்மாவின் பிரார்த்தனை மரணத்தின் பிடியிலும் மருத்துவரைத் தேடாமல் ஆண்டவனைத் தேடும் மகாத்மாவின் பிரார்த்தனை எதைக்காட்டுகிறது? உடல்நோயை மருத்துவர் குணப்படுத்துவார், உயிர் மருத்துவர் ஆண்டவனால் மட்டுமே உயிர்நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகின்றார். உயிரின் மருத்துவர் புறத்தே இருந்து வருவதில்லை. உயிரின் உள்ளே இருந்து எழுகின்றார்.

உயிர் மருத்துவர் ஆசையைச் சுடுகின்றார்!
கோபத்தைச் சுடுகின்றார்!
பொய்யைச் சுடுகின்றார்!
பொறாமையைச் சுடுகின்றார்!
தணலில் இட்ட தங்கமென

மனிதனைப் புனிதன் ஆக்குகின்றார்!
மனிதாத்மா மகாத்மாவாக மாறுகின்றது!
மகாத்மாவின் உயிர்குடித்தவை துப்பாக்கிக் குண்டுகளா?
அல்ல! அல்ல!
மதவெறித் தீயே மகாத்மாவைக்
காவுகொண்டது!

தலைப்பிரசவத்தில் குழந்தையை ஈன்று தாய் இறந்ததைப் போல, சுதந்திர இந்தியாவின் ஜனனத்தில் மகாத்மா மரித்துப் போனார்!

எல்லோரும் காந்தி ஆகுங்கள் என்பதல்ல நம் பிரார்த்தனை! இயன்றவரை மனிதனாக வாழுங்கள் என்பதே நம் பிரார்த்தனை!

இந்தப் பிரார்த்தனையைத்தான் - அருள்நெறி முழக்கமாய் மகாசந்நிதானம் முழங்கிச் சென்ற வயிர வார்த்தைகளைத்தான் தாய் பாலை (தாய்ப்பாலை)த் தன் குழந்தைக்குச் சேமித்துத் தருவதைப்போல, வருங்காலத் தலைமுறைக்கு ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு வழங்கியுள்ளார். அருள்நெறிப் பதிப்பகத்தின் ஆணிவேராய்ச் செயல்படும் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு பணிசிறக்க வாழ்த்துக்கள்! அருள்நெறிப் பதிப்பகத்தின் துடிப்புமிக்க செயல்வீரராக மகாசந்நிதானத்திடம் தாம் பருகிய தாய்ப்பாலை, வளரும் தலைமுறையும், வரும் தலைமுறையும் பருகட்டும் என்று அருள்நெறி முழக்கத்தை அச்சில் பதிவு செய்ய ஆதாரமாய் விளங்கிய கிருங்கை சேதுபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

அருள்நெறி முழங்கட்டும்!
அன்பு பரவட்டும்!
அருள் சிறக்கட்டும்!
என்றும் வேண்டும் இன்ப அன்பு


குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனம்

குன்றக்குடி

(பொன்னம்பல அடிகளார்)

25.03.2006

முழக்கங்கள் 


"https://ta.wikisource.org/w/index.php?title=அருள்நெறி_முழக்கம்&oldid=1548110" இலிருந்து மீள்விக்கப்பட்டது