ஒப்பியன் மொழிநூல்/தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

3. தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

(1) நிலத்தின் தொனமை

ஞாலத்தில் குமரிநாடு மிகத்தொன்மையானது. இந்தியாவின் முதற்பெயர் நாவலந்தீவு என்பது. இது நாவலந் நண்பொழில் என்றும் வழங்கும். தமிழ்நாடு முழுவதும் ஒரே பொழில் (சோலை) போலிருத்தமையின், பொழில் என்பது நாடு அல்லது உலகம் என்று பொருள்பட்டது. இதனால் தமிழ் நாட்டின் மக்கட்பெருக்கற்ற ஒரு தொன்முதுநிலையுணரப்படும்.

சரித்திர காலத்திற்கு முற்பட்ட தாழிகளும் அடக்கக் கற்களும் ஏனங்களும், தென்னாட்டிற் பலவிடங்களிற் காணப்படுகின்றன.

“மிகப் பழைமையான மண்டையோடுகளுள் ஒன்று, ஜாவாவினின்று வந்துள்ளது. அத்தீவு தன்னருகிலுள்ள பிற தீவுகளுடன் ஒருகாலத்தில் ஆசிய நிலத்தோடிணைக்கப் பட்டிருந்தது. அது காட்டுமாந்தன் (Orang-utan) என்னும் குரங்கு வதியும் இடங்கட்கு அணித்தானது. மாந்தனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட ஓர் உயிரி வதிந்த இடமாகத் தெரிதலால், அது நமக்கு மிக முக்கியமானது”[1] என்று ஆல்ப்வ்ரெட் கிளாட் (Alfred Clodd) கூறுவதால், அதனோடு ஒரு காலத்தில் இணைக்கப்பட்டிருந்த குமரிநாட்டின் தொன்மையும் ஒரு வாறு விளங்கும்.

யானைக்கையும் மடங்கலுடம்பும் உள்ள யாளி என்னும் விலங்கும், அதுபோன்ற பிறவும் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்ததும் அதன் தொன்மையைப் புலப்படுத்தும்.

(2) நிலத்து மொழியின் தொன்மை :

இது பின்னர்க் கூறப்படும்.

(3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை

நாட்டுவாழ்க்கைநிலை : இக்காலத்திற்போலச் சரித்திர நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுட்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டு மென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது புலனெறிவழக்கம் எனப்படும். அதாவது. உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும், இனியதும் இன்னாததுங் கலந்து உள்ள தாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும்.

குறிஞ்சி நாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும், பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவதன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்கனமே பிறவும்.

பண்டைத் தமிழர் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்.) இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள், ஏனைய பூப்பெயர்கள்.

பாலை எனபது பிறநாட்டிலுள்ளது போன்ற வறண்ட மணல் நிலமன்று, குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது, அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.

“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
றானலத் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய குறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”

என்று இளங்கோவடிகள் (சிலப். 11: 12—16) கூறுதல் காண்க. பாலையின் முதுவேனிற்கால நிலையே, பிரிவிற்தரித்தாக அகப்பொருட் செய்யுட்களிற்௷ கூறப்படும்.

மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்து போவது, குறிஞ்சி யினின்று போவதும், அயல் நாட்டினின்று வந்து குடி புகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள்,முன்னது மக்கட்பெருக் கால் படிப்படியாய் திகழ்லது ;பின்னது தெரிந்து கோடலால் ஒரே சமையந்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ் நாட்டில் நிகழ்த்ததென்க.

குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும், தமிழ் நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றிய பின் பாதலின், குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த தொன்னிலை அப்போது மறைந்து போயிற்று. அதனாற் குறிக்கப்பட வில்லை. ஆயினும் அதைக் கருத்தளவையான் அறிந்து தொள்ளலாம்,

மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த் தாளிருந்திருக்க வேண்டும், அவரையே ஆதம் ஏவையென்று கிறித்து மதமும் இஸ்லாம் மதமுங் கூதுகின்றன,

இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய பின், குறிஞ்சியில் இடம்போதாமல், சிலர் முல்லைக்குச்சென்றனர்.

முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டை யாடியும் உண்டுவந்த மக்கள், இயற்கையாய் விளையும் மர வுணவு போதாமை யாலும், வேண்டியபோ தெல்லாம் ஊலுணவு கிடையாமையாலும், செயற்கையாய்ப் பயிர் பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கினர். இதற்கு மரமடாத்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குகட்கும் ஓரளவு தப்பினர்.

மாந்தன் முதன் முதலாய் வளர்த்த விலங்கு ஆவே: ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம் மா என்று கத்துவது மாவெனப்பட்டது. மா-மான்-மாடு. மா என்பது னகர மெய்யீது பெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பது போல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராயிற்று. ஆ - என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று.

மரவுணவும் ஊனுணவும் மக்கட்த வேண்டியவாயுள் எமையின், உழவும் ஆவோம்பலும் ஒருங்கே தோன்றின வென்னலாம். ஆவானது பால் தந்ததுடன் உழவிற்கு வேண்டிய கன்றுகளையும் ஈன்றது. புல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, சிறிது புன்செய்ப் பயிர் களையும் வினைத்துக் கொண்டனர் முல்லை நிலத்தார்.

மாடு பறையரால் மட்டும் தின்னப்படுகின்றது. மேனாடுகளில் அதை எல்லாரும் உண்கின்றனர்.

முல்லை நிலத்திற் போதுமான நீர்வளமும் நிலவளமுமில்லாமையால், மக்கள் அடுத்தாற்போல், மீனை பெரிதும் விரும்பினவர் நெய்தல் நிலத்திற்தம் கூலத்தைப் பெரிதும் விருப்பினவர் மருத நிலத்திற்குமாகப் பிரிந்து போயினர்.

பாலை நிலவாணர்க்கு முதுவேனிலில் உணவு கிடையாமையால், அன்று அவர் ஆறலைக்கவும் சூறை கொள்ளவும், நேர்ந்தது.

ஐந்து நிலத்திலும் மாத்தர் பரவியபின், குறிஞ்சி நிலத்தார் குறி சொல்வதால் குறவர் என்றும், பாலை நிலத்தார் போர்த் தொழில் செய்து மறம். (வீரம்) சிறந்திருந்தமையின் மறவர் என்றும், முல்லை நிலத்தார் குறிஞ்சிக்கும் மருதத்திற் கும் இடையிலிருந்தமையால் இடையர் என்றும் ஆவைக் காத்தலால் ஆயர் என்றும், மருத நிலத்தார் உழவைச் சிறப்பாய்ச் செய்ததால் உழவர் என்றும், நெய்தல் நிலத்தார் படவுத் தொழில் செய்தமையின் படவர் அல்லது பரவர் என்றுங் கூறப்பட்டார்.

படகு படவு: க--வ, போலி, படவர் - பரவர்-பரதவர் ட, ர, போலி, படவர் செந்நிறமா யிருப்பதால் செம்படவர் எனப்பட்டார், பரதவர் விரித்தல் திரிபு.

நகர வாழ்க்கை நிலை :

மாந்தர் மருத நிலத்திற்கு வந்த பின் நிலையாய்க் குடியிருக்கத் தொடங்கினர்!. அதனால் குடியானவர் எனப் பட்டனர். நிலையாய்க் குடியிருந்ததினால், மருத நிலத்தூர்கள் மூதூரும் பேரூரும் நகரும் மாநகருமாயின, மருத நிலத்தூர்கள் பிற நிலத்தர்களினும் பலவகையிற் சிறந்திருந் தமையால், கார் என்றே யழைக்கப்பட்டன.

உயர் நகர் என்னும் பெயர்கள், முதலில் தனி வீட்டையும், பின்பு, வீட்டுத் தொகுதியான உரையும் குறித்தன. நகர் என்பது பிற்காலத்தில் பேரூருக்கு வரையறுக்கப்பட்டது.

நிலையான வாழ்க்கையாலும், மாந்தர் பெருக்காலும், முதன் முதல் நகரத்திலேயே நாகரிகம் சிறப்பாய்த் தோன் றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகரம் என்னும் சொல்லினின்று பிறந்ததே. அது முன்னர்க் கூறப்பட்டது.

அரசியல் :

மாந்தர் நிலையாயுள்ள இடத்தில் ஆட்பொருட் பாதுகாப்பிருப்பதும், நிலையில்லாத இடத்தில் அவையில் லா திருப்பதும் இயல்பு. மருத நிலத்தில் மாந்தர் நிவையா யிருந்தமையின், ஆட்பொருட் பாதுகாப்பிற்கு முதலாவது காவலும், பின்பு ஊராண்மை நாட்டாண்மைகளும், அதன் பின் அரசியலும் தோன்றின

குடிகளை ஒரு மத்தை போன்றும் அரசனை அதன் மேய்ப்பன் போன்றுங் கருதினர். அதனால், அரசன் கோன் எனப்பட்டான். அவன் கையில், அரசிற்கு அடையாளமாக ஒரு மேய்ப்பன் கோலுங் கொடுக்கப்பட்டது. அது நேராயிருந்தமைபற்றிச் செங்கோல் எனப்பட்டது. செங்கோல் செம்மையான அரசாட்சிக்கு அடையாளம்.

கோ= பசு. கோ+ அன் கோவன்--கோன் - கோ (ன்). கோன் என்னும் சொல் ஆவென்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெரு வழக்காக வழங்குகின்றது:

Swed.—Dan: ko, Du. koe, Sans. go, Ger. kub, Ice. kyr, Irish.— Gael. bo, Lg bos, Gr. bous.

கோ என்னுச் சொல், ஆவென்னும் பொருளில் தமிழில் வழங்காமையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச் சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க, ஆ. பெற்றம் என ஏனையிரு சொற்கள் வழங்குவதினாலேயே, கோ என்னும் சொல் அப்பொருளில் வழக்கற்றதென்க;

கோவையுடையவன் கோன். அன் ஈற்றில் அகரம் தொக்கது. ஒ. நோ, யாவர்—யார்.

கோவன், கோன் என்னும் பெயர்கள் இயற்பொருளில் இடையனையும், உருவகப் பொருளில் அரசனையுங் குறிக்கும்,

“கோவனிரை மீட்டனன்” (சீவக, 455) என்பதில் இடையனையும், கோவனும் மக்க தில் அரசனையும் கோவன் என்னுஞ் சொல் குறித்தது.

கோன் கோனார் (உயர்வுப்பன்மை) என்னும் பெயாகள் இடையர்க்குக் குடிப்பெயராய் வழங்குகின்றன. கோன் என்னும் சொல், செங்கோன் கடுங்கோன் என்னும் பெயர் களில் அரசனைக் குறித்தது.

அரசன் என்னும் பொருளில், கோன் என்னும் பெயரே ஈ கெட்டுக் கோ என்றாகும். தலைக்கழகக் காலத் தரசர் பெயர் செங்கோன் கடுங்கோன் என்று வழங்கினதையும், கடைக்கழகக் காலத்தரசர் பெயர் (பாலைபாடிய பெரும்) கடுங்கோ , இளங்கோ (அடிகள்) என்று வழங்கினதையும், கோ என்னும் பெயர் பசுப்பொருளுக் கேற்பதையும் கோன் என்னும் பெயர் அரசனுக்கும் இடையனுக்கு மன்றிப் பசுவுக் கேலாமையையும் நோக்குக.

கோ என்பதை, ஆ மா என்பவற்றோடு சேர்த்து,

“ஆமா கோனவ் வணையவும் பெறுமே“

என்று பவணந்தியார் கூறியது தவறாகும்.

கோடான்னும் பெயர் பெற்றுத் திற்கு வழக்கற்றுப் போன மையின், கோன் என்பதின் ஈறுகெட்ட வடிவம், அரசனைக் குறிக்கும்போது மயக்கத்திற்கிடமில்லை,

தா என்னும் சொல் ஆரிய மொழிகளில் வழங்கினும், தமிழுக்கு எங்கனம் உரியதோ, அங்ஙனமே கோ என்னுஞ் சொல்லும் உரிய தென்க. இன்னும் இதன் மயக்குத் தெளிய, இப்புத்தகத்தின் இறுதியிற் காண்க.

அரசியல் பற்றிச் சில தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழி களில் வழங்குகின்றன. அவை அரசு, பாழி முதலியன. அரசு என்னுஞ் சொல்லின் வரலாறு பின்னர்க் கூறப்படும்.

பாரி = கதர். Gr. polis, a city. இச் சொல்லிலிருந்தே , police (the system of regulations of a city), policy (manner of governing a city or nation), political (pertaining to policy) politics (science of government). polity (civil constitution) முதலிய சொற்கள் பிறக்கும்.

தொழிற் பெருக்கமும் குலப் பிரிவும் :

மருத நிலத்தில் முதலாவது உழவர் என்னும் ஒரே வகுப்பார் இருந்தனர். பின்பு, முறையே வணிகம் அரசியல் துறவு என்பன பற்றி, அவ்வகுப் பினின்றும் பிரிந்து போனவர், வாணிகார் அரசர் அந்தணர் எனப்பட்டார்.உழவர் முதலிய நாற்பாலும் பிற்காலத்தில் ஏற்றத் தலைமை முறையில் தலை மாற்றிக் கூறப்பட்டன. உழவர் கடையிற் கூறப்பட்டமையின் கடையர் எனப்பட்டார்.

கொல், நெசவு முதலிய கைத்தொழில்பற்றிய பின்பு உழவர் குலத்தினின்றே பலர் பிரிந்தனர்.

உழவர் பிறரை தோக்க, வேளாண்மையில் (உபசாரத்தில்) சிறந்திருந்தமையின் வேளாளர் எனப்பட்டார். அவருள் வறியராயினார் உழுதுண் பாரும் செல்வராயினார் உழுவித்துண் பாருமாயினர். இவரே நிறம்பற்றி முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும், வெண்களமா அல்லது வெள்ளாளர் என்றுங் கூறப்படுபவர். களத்தில் வேலை செய்பவர் களமர்.

கருங்கள மரும் ஒழுக்கம், ஊண், இடம், பழக்க வழக்கம் முதலியன பற்றிப் பிற்காலத்திற் பற்பல குலமாய்ப் பிரிந்து போயினர். இங்ஙனமே பிறகுலத் தாரும். இவற்றின் விரிவை எனது தென்னாட்டுக் குலமரபு என்னும் நூலிற் கண்டுகொள்க.

நகரத்தில் அரசியல் தோன்றினபின் திணை மயக்கம் ஏற்பட்டது.முல்லை நிலத்திலிருந்த இடையரும் பாலைநிலத்திலிருந்த கள்ளர் மறவரும், நெய்தல் நிலத்திலிருந்த செம்படவரும், குறிஞ்சி நிலத்திலிருத்த குறவரும் நகரத்திற்கு வந்து தத்தம் தொழிலைச் செய்வாராயினர். அவருட் கள்ளரும் மறவரும் முறையே சோழனுக்கும் பாண்டியனுக்கும் படைரூ ராயினர். பண்டைத் தமிழ் நாட்டின் வெற்றிச் சிறப்பிற்கு இவ்விரு குலமும் பெருங்காரணமென்பது தென்னாட்டுக் குலமரபில் விளக்கப்படும்,

கள்ளர் தனித் தமிழராயிருப்பவும், அவரைப் பல்லவரென்று ஓர் அயல் வகுப்பாராகக் கூறி வருகின்றனர் சிலர்: பல்லவர் என்பார், கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையும், சோழ நாட்டை அல்லது தொண்டை மண்டலத்தையாண்ட ஓர் அரசக் குடும்பத்தாரேயன்றித் தனிக் குலத்தினரல்லர். அவருடைய குடிகளும் படைஞரும் தமிழரே, அவருக்குத் தனிமொழியும் தனிமதமுமில்லை , தமிழ் நாட்டு மொழிகளும மதங்களுமே அவர்க்கிருந்தனவும், செல்வமும் மறமும் படைத்த எவனும், ஒரு படையைத் திரட்டிக் கொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்ற என்றும் இடமுண்டு.

பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களுள், தொண்டையன் என்பதும் ஒன்று, பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழ நாட்டின் வடபாகத்திற்குத் தொண்டை மண்டலம் என்றம், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்னும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப்படையா லறியப்படும். அவ்வாற்றுப்படைத்தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி.1 ஆம் நூற்றாண்டாகும். ஆகையால். புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் தொண்டைமான் என்பது தனித் தமிழ்ச்சொல்லாதலுங் காண்க.

வழிபாடும் மதமும் :

வழிபாடாவது ஒரு சிறு தெய்வத்தையேனும் முழு முதற் கடவுளையேனும் வணங்கும் வணக்கம். மதமாவது வீடுபேறு கருதி முழுமுதற் கடவுளை யடையும் பெருநெறி.

மதி+அம் = மதம். மதித்தல் - கருதுதல். கடவுளைப் பற்றிய மதிப்பு மதமாகும். மதத்திற்குச் சமயம் என்றும் பெயருண்டு சமை+ அம் =(சமையம்)-சமயம். சமைதல் - பக்குவமாதல்: பெண்டிர் பூப்படைதலையும் அரிசி சோறா தலையும் சமைதல் என்று சொல்லுவதும், பக்குவமாதல் என்னுங் கருத்துப்பற்றியே, மதம் ஆன்மாக்களை வீடு பேற்றிற்குப் பக்குவப்படுத்தலால் சமயம் எனப்பட்டது. சமையம் = பக்தவமான வேளை. வேளை, சம்யம் பக்குவ மாக்கும் நெறி அல்லது கொள்கை. வேளையைக் குறிக்கும் சமையம் என்னும் சொல், மதத்தைக் குறித்தற்கு ஐகாரம் அகரமாயிற்று. ஒரு சொல் பொருள் வேறுபடுதற்கு எழுத்து மாறுவது, ஒரு சொல்லியல் நூல் நெறிமுறையாகும்.

கா : பழைமை (தொன்மை )—பழமை (புராணம்) - முதலியார்—முதலியோர்.

நொடிப்பழமை, பழமை பேசுதல் என்னும் வழக்குகளை நோக்குக:

வழிபாடு - Cults,

ஐந்தினைத் தெய்வம் :

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

என்பது தொல்காப்பியம் (அகத். 5);

முல்லைத்தெய்வம் மாயோன்

மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர், மால் கருப்பு, மேகம், வானம், கரியோன் முல்லை நிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆதிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வானவாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும்,மேகத்தை வானத்தோ டொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடை.

முல்லை நிலத்திற்குரிய கலுழனை (கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய மர்தியாகவும் பவாகவும் கொண்டார்கள்.

குறிஞ்சித்தெய்வம் சேயோன்

சேயோன் - சிவந்தவன், சேயோன் சேந்தன் சிவன் என்பன ஒரு பொருட்சொற்கள் : குறிஞ்சியில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிக் கொண்ட தினாலும், தீ அஞ்சத்தக்க தான திலாதும். அதைத் (தெய்வமாக அல்லது) தெய்வ வெளிப்பாடாகக் கொண்டு,அதற்குச் சேயோன் என்று பெயரிட் டார்கள்.

சேயோனுக்குக் குறிஞ்சி நிலத்திற்குரிய மயிலை ஊர்தி யாகவும், சேவலைக் கொடியாகவும், கடம்பமலரைப் பூவாகவுங் கொண்டனர்.

கோழியை வீட்டில் வளர்த்தது பிற்கால வழக்கம். சூரபன்மன் மயிலுங் கோழியுமாகிக் கந்தனுக்கு முறையே ஊர்தியுங் கொடியுமானான் என்றது பிற்காலக்கதை. சேவல் போர் செய்வதிற் சிறந்த பறவையாதலால், அத்தொழிலிற் சிறந்த சேயோனுக்குக் கொடியுருவமாய்க் கொள்ளப்பட்ட தென்க.

சேயோனுக்கு முருகன், கந்தன், ஆறுமுகன் என்றும் பெயருண்டு. முருகு என்பது மணம், அழகு, இளமை என்னும் பல பொருள்களை யுடையது. தெய்வத்திற்கு அல்லது பேய்க்கு மணம் விருப்பமென்றும், மலரணிந்து கொண்டாவது மலருள்ள இடத்திலாவது பருவப்பெண்கள் தனிச்செல்லக் கூடாதென்றும், ஒரு கொள்கை தமிழர்க்குள் இன்றும் இருந்து வருகின்றது.

தெய்வம் இயல்பாக அழகுள்ளதென்று எல்லா மதத் தாராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இதனால் அழகன் என்று திருமாலுக்கும் சொக்கன் என்று சிவனுக்கும் பிற்காலத் திற் பெயர்கள் தோன்றின. அழகு எப்போதும் இளமையொடு கூடியது. கோவையில் 'நிலைகண்டுரைத்தல்' என்னுந் துறையை நோக்குக.

கந்தன் என்னும் பெயர், சந்தில் (தூணில்) தெய்வ வுருவைப் பொறித்த அல்லது செதுக்கிய பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. கந்திற்பாவை என்னும் வழக்கை நோக்குக, கந்தனையே ஸ்கந்தன் என்றனர் வட நூலார். ஆறுமுகம் என்னும் பெயர் பின்னர்க் கூறப்படும்.

மருதத்தெய்வும் வேந்தன்

வேந்தன் = அரசன்,

நல்வினை செய்தவரின் உயிர்கள் இறந்த பின் மேலுலகத் திற்குச் செல்லுமென்றும், உலகில் (மருதநிலத்தில்) அரசனா யிருந்தவன் மறுமையில் மேலுலகத்திலும் அரசனாவான் என்றும், மருத நில மாந்தர் கருதி, முதன் முதல் இறந்த அரசனையே வேந்தன் என்று பெயரிட்டு வணங்கினார்கள், மழை மேலிருந்து பெய்வதால், மேலுலக வேந்தனாகிய தங்கள் தெய்வத்தினிட மிருந்தே வருவதாகக் கருதி,மழை வளத்திற் காகவும் அவனை வழிபட்டார்கள்.

நல்வினையாவன வேளான்மையும் போர்த் தொழிலும், போர்த்தொழிலில் ஒருவன் பிறர் நன்மைக்கென்று தன் உயிரைக் கொடுத்தலால், அது தலைசிறந்த வேளாண்மை யாகும். சிறந்த இல்லறத்தார்க்கும் போரில் பட்ட மறவர்க்கும் மறுமையில் வானுலகம் என்பது. அவர் வேளாண்மையிற் சிறந்தவர் என்னும் கருத்துப் பற்றியே,

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள், 86)

என்றார் திருவள்ளுவர்.

26 ஆம் புறப்பாட்டும் இக்கருத்துப்பற்றியதே.

"நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்க" (புறத். 93)

என்பதனால், போரிலி தந்தவர் வானுலகம் புகுவர் என்ற கொள்கையறியப்படும்.

உழவுத்தொழில் செய்யும் பள்ளரும் போர்த் தொழிற்குரிய மறவரும், இன்றும் தங்களை இந்திர குலத்தாரென்றும், தங்கள் குலமுதல்வன் இந்திரனென்றும் கூறிக்கொள்கின்றனர். அரசனிடத்தில் வேளாண்மையும் போர்த்தொழிலும் ஒருங்கேயுண்டு, அவன் இம்மையிலும் மழைக்குக் காரணமாகக் கருதப்பட்டான்.

"இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு" (குறள், 545)

"முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வாளம் பெயல்" (குறள். 559)

என்றார் திருவள்ளுவர்.

வேளாண்மைக்குச் சிறந்த உழவர் குடியிருப்பதும், சிறந்த அரசு முதன் முதல் தோன்றியதும் மருத நிலமே.

பாலை நிலத்து மறவர் படை ஞராகுமுன், மருத நிலத்து உழவரே போர்த்தொழில் செய்து வந்தனர். அதன் பின்பும் உழவர் போர்த்தொழிலை விட்டுவிடவில்லை. இதை,

“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்த னர் என்ப அவர் பெறும் பொருளே" (மரபு. 77)

என்று தொல்காப்பியங் கூறுவதாலும், மள்ளர், மழவர் என்னும் பெயர்கட்கு உழவர் மறவர் எள்னு மிருபொருளு முண்மையாலும், உழவர் குலத்தில் ஒரு வகுப்பார் படையாட்சி யென்று பெயர் பெற்றிருப்பதினாலும், மேனாட்டிலும் கீழ்நாட்டிலு மிருந்த பண்டை அமர நாயக முறை (Feudalism) யாலும் அறியலாம்.

பண்டைக்காலத்தில் அரசரையும் தெய்வமாக வணங் கினர் என்பது, இரணியன், நேபுகாத் தேச்சார் முதலியார் சரித்திரத்தாலும், அரசனும் தெய்வ முமிருக்குமிடம் கோயில் என்று கூறப்படு வதினாலும், அரசனுக்கும் அரசிக்கும் தேவன் தேவி என்னும் பெயர்கள் வழங்குவதாலும், திருவாய்க் கேள்வி திருமந்திர வோலை முதலிய அரசக அலுவற் பெயர்களாலும், பிறவற்றாலும் அறியப்படும்,

வேந்தன் என்னும் பெயரை யே, இந்திரன் என்று ஆரியர் மொழிபெயர்த்துக்கொண்டனர். இந்திரன் = அரசன். நரேந் திரன், மிருகேந்திரன், கவீந்திரன் முதலிய பெயர்களை நோக்குக.

நூறு குதிரைவேள்வி வேந்தன் (இந்திரன்) பதவிக்குத் தகுதியாக ஆரியப்பழமை நூல் கூறும்: குதிரை வேள்வி செய் பவன் அரசனே.

கடைக்கழகக் காலம் வரை வேந்தன் வழிபாடு தமிழ் நாட்டிற் சிறந்திருந்ததென்பது, சிலப்பதிகாரத் தாலும் மணி மேகலையாலும் பிற நூல் குறிப்புக் களாலும் அறியப்படும்.

(ஆயர்பாடியில் வேந்தன் வழிபாட்டை நிறுத்திய) கண்ணன் வழிபாடு வரவரத் தமிழ்நாட்டில் வலுத்ததினாலும், நகர மாந்தருள் உழவர் சிறுபான்மையான தினாலும், வேந்தன் மழைவளம் ஒன்றே தரும் சிறுதெய்வமாதலாலும், சைவம் திருமா லியம் என்னும் இரண்டும் வீடுபேற்றிற் குரிய பெரு மதங்களாய் வளர்ந்து விட்டமை யாலும், வேந்தன் வணக்கம் பெரும்பாலும் நின்று விட்டது. இதுபோது ஒரோவோரிடத் துள்ள மழைத்தெய்வவுருவமே பண்டை வேந்தன் வழிபாட் டின் அடையாளமாயுள்ளது.

மருத நிலத் தெய்வத்துக்குப் பண்டிருந்த பெருமையை, அகத்தியர் வேந்தன் சிவிகையைச் சுமந்ததாகத் திருவிளையாடற் புராணமும் குமரிமலையை மகேந்திரமென்று வடநூல் களும் ஐந்திரத்தை 'விண்ணவர் கோமான் விழு நூல்' என்று சிலப்பதிகாரமும் கூறுவதும், வேந்தன் விழாவை ஒரு சோழன் நிறுத்தியதால் புகார் கடல்வாய்ப்பட்டதென்ற கொள்கையும் விளக்கும்.

வேந்தனுக்குச் சேணோன் புரந்தரன் என்றும் பெய ருண்டு, சேண் உயரம், சேணுலகத்தரசன் சேணோன், வாலு லகைப் புரந்தருபவன் புரந்தரன். புரந்தருதல் காத்தல்,

நெய்தல் நிலத்தெய்வம் வாரணன்

வாரணம்=கடல்; வாரணன்-கடலோன்

கடல் மீனாகிய சுறாவின் கோடு (முதுகெலும்பு) வாரண னுக்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது:

கடைக்கழகத்திற்குப் பின்புகூட தமிழர் வாரித் துறையில், தேர்த்திருந்தமையும், தமிழரசர் நாவாய்ப்படை வைத்திருந் தமையும்,

"காந்தளூர்ச்[2] சாலை கலமறுத் தருளி..
முரட்டொழிற் சிங்களர் ஈழமண் டலமும்[3] ....
முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்"

என்று முதலாம் இராஜராஜசோழன் (985) கல்வெட்டும்,

"அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
சங்கிராம விசையோத் துங்க வர்மம்
னாகிய கடாரத் தரசனை வாகையம்
பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத்து...........
தேனக்க வார்பொழில் மா தக்க வாரமும்[4]
தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்[5]
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி"

என்று இராஜேந்திர சோழன் (1012) கல்வெட்டும் கூறுவதா இலும், 13-ஆம் நூற்றாண்டுவரை பாண்டியரும் சோழரும் ஈழத்தொடு வைத்திருந்த போர் நட்புத் தொடர்பினாலும் அறியப்படும்.

ஆகவே, வாரணன் என்னும் பெயரே வருணன் என்று, வடமொழியில் திரிக்கப்பட்ட தென்க.

பாலைநிலத்தெய்வம் கொற்றவை

பாலை நிலம் முதுவேனிற்காலத்தால் தோன்றுவது,

கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை — கொற்றவை. கொற்றம் = வெற்றி. அவ்வை அம்மை என்பதன் போலி, பிற்காலத்தில் பாட்டியைக் குறித்தது.

பாலை நில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு. அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை,

கொற்றவைக்கு அம்மை, மாயோள், காளி, அங்காளம்மை, மாரி, பிடாரி, கன்னி , குமரி, பசுவதி முதலிய பிற பெயர்களுமுண்டு.

அம்மை = தாய்,பெண்தெய்வம். முதுவேனிற் காலத்தில் வெப்பத்தினால் தோன்றும் வைசூரிநோய், அம்மையால் தோன்றுவதாகக் கருதப்பட்டு அம்மை எனப்பட்டது. அக் காலத்தில் தழைக்கும் வேப்பிலையும் அம்மைக்குகந்த தாகக் கொள்ளப்பட்டது.

அம்மை (அம்ம) என்பதின் திரிபே அம்மன், அம்பா (வ.), என்பவை,

மாயோள் = கரியள். - மாமை-கருமை.

கள்—காளம்—காளி, கள்— கருப்பு. கள்ளம், களங்கம், காளான் (black mushroom) முதலிய சொற்கள் கருப்பு என்னும் மூலப்பொருளைக் கொண்டவை.

காளி வணக்கம் முற்காலத்தில் தமிழகத்தில் மிகச் சிறத் திருத்தது.வங்காளத்தில் உள்ள காலிக் கோட்டம் என்னும் இடப்பெயர் இன்று காளிக்கட்டம்—Culcutta — கல்கத்தா, என்று திரிந்து வழங்குகின்றது. கோட்டம் - அரண், கோயில், கோடு +அம் = கோட்டம். கோடுதல்- வளைதல், கோடிய (வளைந்த) மதிலாற் சூழப்பெற்றது கோட்டம் (தொழிலாகு பெயர்), கோடு+ஐ= கோட்டை . தமிழர் அல்லது திராவிடர் பண்டு வட இந்தியா வரை பரவியிருந்தனர் என்பதற்குக் காளிக்கோட்டமும் ஒரு சான்றாம்.

காளி கூளி (பேய்) களின் தலைவி, பேயைக் கருப்பென்றும் இருளென்றும் கூறுவது உலக வழக்கு.

அம் + காளம் (அல்லது காளி) + அம்மை = அங்காளம்மை.

மாரி = சாவு. காளி அழிப்புத் தெய்வமாகக் கருதப் பட்ட தால் மாரியெனப்பட்டாள், மடங்கலை அவளுக்கு ஊர்தியாகக் கொண்டதும் இக்கருத்துப்பற்றியே.

பீழை—பீடை+அரி =பீடாரி (மரூஉப்புணர்ச்சி).

ஒரு நோ. பனை+அட்டு = பினாட்டு: அரித்தல் அழித்தல்.

துன்பத்திற்குக் காரணமானவளே அதை அழிப்பவளாக வுங் கருதப்பட்டாள்.

பீடாரி—பிடாரி, பிடாரி = அம் = பிடாரம்.

கன்னி என்றும் இளையோளாயிருப்பவள்; குமரி என்னும் பெயரும் இப்பொருட்டே.

கும் + அம் = குமம்—குமர் = திரட்சி, இளமை , கன்னிமை.

ம்-ர், போலி. ஒ. நோ. சமம் - சமர்:

"குமரிருக்குஞ் சசிபோல்வாள்" (குற்றா தருமசாமி. 47)

கும்—குமி — குவி. குவிவு—குவவு = திரட்சி,
குமர்+அன் = குமரன், குமர்+இ= குமரி.
குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.
குமரி— திரண்டவள், இளையள், கன்னி, காளி,
ஓ, நோ. இளவட்டம் = இளைஞன். வட்டம் = உருட்சி.
E. vergin, from Gr. orago, to swell.

கும்மை — கொம்மை = திரட்சி, ஓ. நோ. குட்டு — கொட்டு.

குமரன் — குமாரன்(வ.) குமரி—குமாரி(வ.) — குமாரத்தி:

பகவதி பகவன் என்பதின் பெண்பால்) கன்னி என்னும் பெயர்கள் பின்னர்க் கூறப்படும்.

"வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ" (கலி. 15) என்பதால், சூரியனும் பாலைநிலத்தில் வணங்கப்பட்டமை அறியப்படும். ‘சுடரோடிரத்தல்’ என்னும் கோவைத் துறையும் இதை யுணர்த்தும்.

இனி, ஐந்திணைக்கும் பொதுவான சில வழிபாடுகளுமுள. அவையாவன :—

(1) தீவணக்கம்.

மலையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று தேய்வதனாலும், சக்கிமுக்கிக்கற்களை ஒன்றோடொன்று தேய்ப்பதனாலும் தீ உண்டாகிறது. தீக்கடை கோலால் நெருப்புண்டாக்கும் வழியை மூங்கிலுரசித் தீப்பற்றுவதிலிருந்து, அல்லது கல்லைச் செதுக்கும் போது தீப்பொறி தோன்றுவதிலிருந்தே. முதன் மாந்தர் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

பொருள்கள் தேய்வதால் உண்டாகும் நெருப்பு, தேய் எனப்பட்டது. தேய்-தேயு (வ.)

தேய்—தே—தீ. ஓ. நோ. தேன்—தே (த்தட்டு)— தீ(ம் பால்). தே+உ = தேய்வு—தேவ.. தேய்வு-தெய்வு. தெய்வு +அம் =தெய்வம். தேவு+ அன் =தேவன்.

மாந்தனால் முதன்முதல் வணங்கப்பட்டது தீயாதலால், அதன் பெயர்கள் பிற்காலத் தெய்வங்கட்கெல்லாம் பொதுப் பெயராயின. தீ வணக்கமும் பேய் வணக்கமும் சேர்ந்தே , சேயோன் வணக்கம் முதன் முதல் தோன்றிற்று.

தெய்வம், தேவு, தேவன் :
Sans, deva : L. deus, Cr. theos, god :
Ice tivi; W. duw; Gael-Ir. dia; A. S. tiw E. deity.

திவ், திவ்ய என்பவை தேவு என்பதன் திரிபேயாதலால், திவ் என்பதைத் தெய்வப் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது தவறாகும். இங்ஙனம் முதன் முதற் காட்டியது வடமொழியாரியர், வடமொழிக்குப் பிறமொழியை மூலமாகக் காட்டக் கூடாதென்பதே அவர் நோக்கம். ஆகையால், அவர் கூற்றைப் பின்பற்றுவோரெல்லாம், ஒப்பியன் மொழி நாலியல்பைச் செவ்வையா யுணரார். வடமொழி வழக்கற்ற மொழியாதலின், அதன் சொற்கட்குப் பொருத்தப்புகலல் என்னும் முறையில், எதையும் மூலமாகக் காட்டலாம், எப் பொருளையும் மூலப் பொருளாகக் கூறலாம்.

தீயானது பொருள்களை அழித்து விடுவதால் அஞ்சத் தக்கது சமையலுக்கும் குளிர் நீக்கவும் உதவுவதால் நன்மை செய்வது. அச்சமும் என்மைப் பேறுமே, முதன் முதல் தெய்வ வழிபாடு தோன்றிய தற்குக் காரணம்,

தீ வணக்கம் பண்டு எல்லா நாட்டிலு மிருந்தது. இன்றும், விளக்கு வடிவில் அதன் அடையாளம் இருந்து வருகின்றது.

(2) நாக வணக்கம்.

இந்தியாவிலுள்ள 280 வகைப் பாம்புகளுள், அரச நாகம் (King Cobra). நல்லபாம்பு, விரியன் முதலியவை பெரு நஞ்சுடையன. இவற்றுள், அரச நாகம் உலகத்திலேயே மிகக்கொடியது. நச்சுப்பாம்புகளுள் பருமனிலும் இதுவே பெரியது. இதற்கடுத்ததே தென்கண்டத்திலுள்ள செம்பூதப் பாம்பு (Giant Brown Snake). இவற்றின் நீளம் முறையே 18 அடியும் 12 அடியுமாகும்.

அரச நாகம் அசாம், பர்மா, தென் சீனம், மலேயா, பிலிப்பைன் தீவுகள் முதலிய இடங்களிலும் வதிகின்றது.

பாம்புகளுள் மிகப்பெரியவை தென் அமெரிக்காவிலுள்ள அனக் கொண்டாவும் (Anaconda) இந்தியாவிலும் மலேயாவிலுமுள்ள பாந்தளுமே (Python) இவை 30 அடிக்கு மேற்பட்டவை: மாந்தனையும் விலங்குகளையும் பிடித்துச் சிறிது சிறிதாய் விழுங்குபவை.

கடற்பாம்புகளும், அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், அமைதிப்பெருங்கடல் ஆகிய இடங்களில்தான் மிகுதியாய் வாழ்கின்றன. ஆகையால், குமரிநாடு பாம்பு நிறைந்த இடமாகும்.

திருநெல்வேலிக் கோட்டகையின் கீழ்ப்பாகத்தில், இன்றும், நல்ல பாம்பினாலும் விரியனாலும் கடியுண்டு மக்கள் அடிக்கடியிறக்கின்றனர். ஆகையால், தமிழர் நாகத்தை வணங்கினமை வியப்பன்று.

இன்றும் தமிழ் நாட்டிலும் மலையாள நாட்டிலும் சில வீடுகளில் நாகவணக்கம் இருந்துவருகின்றது.

நகர்வது நாகம்: நகர்— நாகர் — நாகம்.

E. snake; A. S. snaca from snican, to creep; Ice, snakr, snokr; Dan. snog ; Swed. snok ; Sans. naga.

நகத்தில் மலையில்) உள்ளது நாகம் என்று வடநூலார் கூறுவது சரியன்று . நாகம் - Snake (முதல்விரி—Prosthesis).

கீழுலகத்தில் பாந்தள் மிகுதியாயிருப்ப தால், கீழ் என்பதை அடியென்று நினைத்துக் கொண்டு, ஞாலத்திற் கடியில் ஆதிசேடன் (= முதற்பாம்பு) இருந்து தாங்குவதாகக் கூறினர் பழமையர்.

கீழ்நாட்டில் நாக வணக்கம் மிகுதியாயிருந்தமையால், பிற்காலத்தில் அதைச் சைவத்திலும் திருமாலியத்திலும் உட்படுத்தவேண்டி, நாகம் சிவ பெருமானுக்கு அணியாகவும் திருமாலுக்குப் பாயலாகவுங் கூறப்பட்டது.

சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்திருப்பதாகக் கூறுவது, நாக வணக்கத்தின் பண்டைப் பெருமையைக் காட்டும்.

பண்டை எகிப்தியரின் நாக வணக்கமும், கௌ—என். அத்தென் (Khou-en-Aten) என்னும் எகிப்தியவரசன் நாகவுருவைத் தன் முடியிலமைத்ததும்[6], இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

தாருகா வனத்து முனிவர் சிவபெருமான்மேற் பாம்பை யேவியதாகக் கூறுவது பழமைக்கட்டு.

(3) பேய்வணக்கம்—Demonolatry.

பே என்பது அச்சத்தினால் உளறும் ஒலி, பேம் = அச்சம்;

“பேநாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” (உரி. 69.)

என்பது தொல்காப்பியம்.

பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு: ஓ. நோ. E. babble பே-பேய், ஒ. நோ . E. fay ; Fr. fee.

பே—பேந்து. பேய், பேந்து என்பவை இடைச்சொல்லாகவும் வழங்கும். கா : பேயப்பேய (விழிக்கிறான்), பேத்தப்பேந்த (விழிக்கிறான்):

பேந்து: ஓ. நோ. Ger, feind; Dut. vijand: A. S. feond; E. fiend.

சேம்பர் அகராதியில், A. S. feond, pr. p. of feon, to hate என்று கூறப்பட்டுள்ளது: feon என்பதற்கு அஞ்சு என்பதே மூலப் பொருளாயிருக்கலாம்.

பேய் — அச்சம். அச்சத்தைத் தரும் ஆவி பேய் எனப்பட்டது: பேய்கள் அகாலமாய் இறந்தோரின் ஆவிகளென்றும், அதற்றிற் பல வகையுண்டென்றும் சொல்லப்படுகிறது.

பேய்களை மனவுறுதியாற் கட்டுப்படுத்தி, அவற்றாற் பயன் கொள்வது மந்திரம், மந்திரம், மாந்திரிகம், மாத்திரிகள் என்பன முறையே மந்திர மொழிக்கும் வினைக்கும் வினைஞனுக்கும் வழங்கும் பெயர்கள். மந்திரம் வாய்மொழி என்னும் பெயர்களுள், முன்னது கடவுள் பேய் இரண்டையும் பற்றியது; பின்னது கடவுளையே பற்றியது.

பேய்களுக்குத் தலைவி காளியாதலால், அவளை வழி படுதல் ஐத்திணைக்கும் பொதுவும் மாந்திரிகர்க்குச் சிறப்பும் ஆயிற்று. மாந்திரிகா அவளை வாலை (-இளையள், கன்னி) என்பர்.

சுட்டுவைப்பித்தல், வேலன் வெறியாட்டு, தேவராளன், தேவராட்டி என்பவை மாந்திரிகம் பற்றிய பழங் குறிப்புக்களாகும்:

பேய்களில் ஒருவகை பூதம். பூதம் பெருஞ்செயல் செயவல்லது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப் பூதத்தைப் பற்றிச் சிலப்பதிகாரத்திற் காண்க.

பூத வணக்கம் பண்டைக்காலத்தில் சிறப்பாயிருந்ததினாலேய, சிவபெருமான் பூத கணங்களுக்குத் தலைவர் எனப்பட்டார்.

பூதம் என்னும் பெயர் பெருமைப் பொருளது. பொது பொது (இரட்டைக் கிளவி), பொதுக்கு, பொந்து என்னும் சொற்களை நோக்குக. பொந்து — பொந்தன்-மொந்தன். ஓ— உ — ஊ, பொது— (புது)—புது. இரும்பூது — இறும்பூது. புது+ அம் = பூதம். பேய்களிற் பெரியது பூதம். உலகின் ஐம்பெருங் கருவிப்பொருள்கள் ஐம்பூதம் எனப்பட்டன.

இந்தியா, எகிப்து, சீனம் ஆகிய நாடுகள் பண்டைக் காலத்தில் மாந்திரிகத்திற் சிறந்திருந்தன.

பேய்களைத் தெய்வம் என்பது, இருவகை வழக்கிலும் தொன்று தொட்டு இன்றுவரை யுள்ளது.

(4) நடுகல் தெய்வம்.

“காட்சி கல்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல்” (புறத். 5.)

என்பது தொல்காப்பியம்.

மதுரை வீரன், மாடசாமி, கருப்பசாமி முதலியவை நடுகல் தெய்வங்களே.

(5) கற்புத் தெய்வம்.

கண்ணகி வரலாறு காண்க:

(6) தென்புலத்தார் வணக்கம் - Aacestor Worship.

பண்டைத் தமிழர், இறந்து போன தம் முன்னோரைத் தென் புலத்தார் என்று பெயரிட்டுச் சமையம் வாய்க்கும் போதெல்லாம் வணங்கி வந்தனர். இது முன்னோரை நினைவு கூர்வதும் பெரியோர்க்குச் செய்யும் மதிப்புமாகும். இது சீன நாட்டில் மிகுதியாக வுள்ளது.

”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை”

என்றார் திருவள்ளுவர்.

(7) நிலா வணக்கம்.

நிலாவும் ஒருகாலத்தில் வணங்கப்பட்டதைப் 'பிறை தொழுகென்றல்' என்னுங் கோவைத்துறையா லறியலாம்,

நால்வேள்வி :

வேள் + வி = வேள்வி. வேட்டல் விரும்பல், விருப்பத்தோடு பிறரை யுண்பிப்பது வேள்வி

”இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்” (குறள். 87),

என்னுங் குறளில், விருந்தைத் திருவள்ளுவர் வேள்வி யென்றமை காண்க

வேந்தன், வாரணன் முதலியோர்க்குச் செய்யும் தேவ வேள்வியும், பேய்கட்குச் செய்யும் பூத வேள்வியும், முன்னோர்க்குச் செய்யும் தென்புலத்தார் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் மாந்தர் வேள்வியுமெனத் தமிழர் செய்துவந்த வேள்வி நான்கு. இவற்றொடு மறையோதுதலைப் பிரமயாகம் என்று சேர்த்து, பஞ்சமகாயக்ஞம் என்றனர் ஆரியர், இதன் பொருந்தாமையை அறிஞர் அறிக, ராஜசூயம், அசுவமேதம் முதலிய ஆரிய வேள்விகள் தமிழர்க்குரியவை யல்ல, தமிழரசர் அவற்றை வேட்டது பிற்காலமாகும்.

மதம் — Religion

முதலாவது, முற்கூறிய சிறு தெய்வ வணக்கங்களே தமிழர்க்கிருந்தன. பின்பு அவற்றிலிருந்து பெருந்தெய்வ வணக்கமாகிய மதம் தோற்றுவிக்கப்பட்டது.

குறிஞ்சித் தெய்வ வணக்கத்தினின்று சைவமும், முல்லைத் தெய்வ வணக்கத்தினின்று திருமாலியமும் தோன்றின, பாலைத் தெய்வமாகிய காளி, சிவபெருமானுக்குத் தேவியாகக் கொள்ளப்பட்டாள். மருதத்தெய்வமும் நெய்தல் தெய்வமும் கடைக்கழகக்காலம் வரை வணங்கப்பட்டுப் பின்பு கைவிடப்பட்டன.

சேயோன் என்னும் பெயரின் மறு வடிவமே சிவம் என்பது சிவ-சே (மரூஉ), சிவ+அம் =சிவம். சிவம்+(அன்) = சிவன் சே+= சேய், சே+ஒன் = சேயோன், சேந்தோன் சேந்தன் சிவன், சேயோன் சேந்தன் என்னும் மூன்றும், சிவந்தவன் என்று பொருள் பட்டு முருகனையே அல்லது ஒரு தெய்வத்தையே முதலாவது குறித்தன.

சேய், சேயோன், குமரன் என்னும் பெயர்கட்கு. மகன் என்று தவறாகப் பொருள்கொண்டு, சிவம் என்பது சேயோனின் தந்தையென, ஒரே தெய்வத்தை யிரண்டாகக் கூறிவிட்டனர் ஆரியர். இங்ஙனம் செய்தது. ஆரியத்தெய்வமாகிய ருத்திரனைச் சிவத்தோடிணைத்தற்கும் உதவிற்று.

முருகனும் சிவமும் ஒன்றேயென்பதை, சேயோன் சிவன் என்னும் இருபெயர்களும் ஒரே பொருளுடைமையாலும், குறிஞ்சிக்குரிய மலை, காளை, துடி, மழு, புலித்தோல், கரித் தோல் முதலியவை சிவனுக்குக் கூறப்படுவதாலும், குமரன் என்பதின் பெண்பாற் பெயரான குமரி என்பது சிவன் தேவி பாகிய காளியைக் குறித்தலாலும் அறியப்படும்.

திசைகளைத் தெய்வத்திற்கு முகங்களாவும் கைகளாகவுங் கூறுவது வழக்கம். திசைகள் முதலாவது நான்கென்றும் பின்பு உயர் திசையைக் கூட்டி ஐந்தென்றும், பின்பு உயர் திசையும் அடித்திசையுங் கூட்டி ஆறென்றும், பின்பு நான்கு பெருந்திசையும் நான்கு கோணத்திசையுமாக எட்டென்றும், பின்பு இவற்றொடு உயர்திசையும் அடித் திசையுங் கூட்டிப் பத்தென்றும் கூறப்பட்டன.

ஐந்து திசைகளும் எட்டுத் திசைகளும், முறையே சிவ பெருமானுக்கு ஐம்முகங்களாவும் எட்டுக் கைகளாகவும், ஆறு திசைகளானவை. முருகனுக்கு ஆறு முகங்களாகவுங் கூறப் பட்டன. ஆறு முகங்கட்கும் முகத்திற் கிரண்டாகப் பன்னிருகைகள் கூறப்பட்டன. சிவபெருமானுக்கும் ஆறு முகம் என்று ஒரு காலத்தில் கொள்ளப்பட்டிருந்தமை, அவர் தமது ஆறு முகங்களினின்றும் ஆறுபொறியைத் தோற்றுவித்து முருகனைப் படைத்ததாகக் கூறும் கந்தபுராணக் கதையா லறியலாம். ஆறு முகத்தை ஷண்முகம் என்று மொழி பெயர்த்தும், சுப்பிரமண்யன், கார்த்திகேயன், குகன் எனப்புது வடமொழிப் பெயர்களையிட்டும், பனிமலையில் சரவணப் பொய்கையிற் பிறந்ததாகக் கதை கட்டியும், முருகனை ஆரியத் தெய்வமாகக் கூறினர் வடநூலார்:

முழுமுதற்கடவுளுக்குப் பேரண்டத்தையே வடிவமாகக் கூறுவது வழக்கமாதலால், மாலையில் தோன்றும் செவ்வானம் சிவபெருமானுக்குச் சடையாகவும், செவ்வானத்திற்கு மேலாகத் தோன்றும் பிறையையும் பனிமலையுச்சியில் பிறக்கும் கங்கையையும் அவர் தலையிலணித்திருப்பதாகவும் உருவகித்துக் கூறினர் முன்னோர்.

திங்கள் தக்கன் புதல்வியர் இருபத்தெழுவரை மணந்ததாகக் கூறுவது, இராவான் சுடர்கட்குத் தலைமையானது நிலா என்பதே. உடுபதி என்னும் பெயரை நோக்குக; -

தீ முதன் முதல் வணங்கப்பட்ட தெய்வமாதலாலும்,இறைவன் பெரும்பாலும் தீயாக அல்லது ஒளியாக வெளிப்படுவதாலும், ஐம்பூதங்களுள் தீயே அறிவு, தூய்மை, நன்மை, அழிப்பு முதலிய பலவகையில் இறைவனைக் குறித்தற்குச் சிறத்தலாலும், அதன் நிறம்பற்றிய சிவம் என்னும் பெயரே முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராகக் கொள்ளப்பட்டது.

சிவபெருமானுக்குச் செம்மணியாகிய மாணிக்கத்தை உவமை கூறுவதாலும், முதன் முதல் சைவத் துறவிகளே நெருப்பின் நிறமான காவியுடையை அணிந்ததினாலும், சிவம் என்னும் சொல்லுக்குச் சிவப்பு என்னும் பொருளே தெளிவாயிருத்தலாலும், சிவம் என்பது தமிழ்த்தெய்வமேயாத லாலும், மங்கலம் அல்லது நன்மை செய்பவன் என்று பொருள் கூறிச் சிவம் என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் கூறவது பொருந்தாது.

செம்மை என்னும் நிறம் பற்றிய சொல்லுக்கு, நேர்மை, நேர்மையான ஒழுக்கம் என்று பொருள் வந்தது, துறவிகள் காவியுடையணிந்ததினாலேயே, செம்மையாயிருத்தல் என்பது, முதலாவது செங்கோலமாயிருத்தல் என்று பொருள்பட்டுப் பின்பு, செவ்வையா யொழுகல் என்று பொருள்பட்டது.

சிவம் தமிழத் தெய்வமேயென்பது, ஆரியர் வருமுன்னமே, மோஹன் ஜோ-டேரோவில் சைவம் வழங்கியதினாலும்,

“மந்திர மாமலை மகேந்திர வெற்பன்“
“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமத் தோற்றுவித் தருளியும்“
“பாண்டி நாடே பழம்பதி யாகவும்“
“தென்னா டுடைய சிவனே போற்றி“

என்று மாணிக்கவாசகர் கூறுவதாலும் அறியப்படும்.

முதலாவது ஒரு தெய்வமாயிருந்த சிவத்திலிருந்து, முருகன், பிள்ளையார், சாத்தனார், பைரவன், வீரபத்திரன் எனப் பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டன பழமையரால்,

பிள்ளையார் என்று முதலாவது முருகனுக்குப் பெயரிடப்பட்டது. பின்பு ஆனைமுகத்தர் மூத்த பிள்ளையார் எனப்பட்டார். இப்போது, மூத்த பிள்ளையாரே பிள்ளையார் எனப்படுகிறார்.

ஓங்கார வரிவடிவம் யானை வடிவு போலிருத்தலாலும், கயமுகன் என்னும் அசுரனைக் கயமுகத்தொடு சென்ற சிவ ஆற்றல் கொன்ற தென்னுங் கதையாலும், பிள்ளையார் என்ற தெய்வம் தோற்றுவிக்கப்பட்டது. கணபதி (தகணங்களுக்குத் தலைவர்) என்னும் பெயர் சிவனுக்கும் ஏற்றலாலும், சிவனுக்கும் பிள்ளையாருக்கும் முக்கண் கூறப்படுவதாலும், அவ்விருவரும் ஒருவரே யென்பதுணரப்படும்.

இங்கனமே பிறதெய்வங்களும் ஒவ்வோர் காரணம் பற்றித் தோற்றுவிக்கப்பட்டனவாகும்.

பிள்ளையார் வணக்கம் கடைக்கழகக்காலத்திற்கு முந்தி யிருந்ததாகத் தெரியவில்லை, முருகனுக்குப் பிள்ளையார் உதவினதாகக் கந்தபுராணங் கூறுவது களிறு தரு புணர்ச்சியேயன்றி வேறன்று.

சிவ பெருமானுக்குப் பகவன், ஐயன் என்று பெயர்களுண்டானமையின், காளிக்குப் பகவதி, ஐயை என்று பெயர்களுண்டாயின. பகவன் என்னும் பெயருக்கு அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் என்னும் அறு குணங்களையுடையவன் என்று பொருள் கூறப்படுகிறது. சிலர் பகம் என்பது குறி (இலிங்கம்) யென்றும், பகவடிவிற் குறிக்கப்படும் கடவுள் பகவன் என்றுங் கூறுகின்றனர். இருபாற்கூட்டத்தால் உயிர்கள் தோன்றுவதாலும், கடவுளிடத்தில் தாய்க் கூறும் தந்தைக் கூறும் உள்ளன என்னுங் கருத்தில், சிவபிரானை அம்மையப்பன், மாதொருபாகன், மங்கைபங்கன் முதலிய பெயர்களால் அழைப்பதாலும், வழிபடப்படும் சிவவுரு இலிங்கப் பெயருள்ள தாயும் இலிங்க வடிவ மாயுமிருத்தலாலும், எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் ஒரு மூல ஆற்றலைக் குறி' வடிவால் முன்னோர் குறிப்பித்தார் என்று கொள்ளல் பொருத்தமானதே.

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள், 355)

காளி துடுக்கு நிலையளாதலின், அமைந்த நிலைக்குரிய தேவிவடிவம் சிவன் என்பதின் பெண்பாலான சிவை என்னும் பெயராற் குறிக்கப்பட்டது. சிவையைப் பார்வதியென்பர் வடநூலார்.

சிவை பர்வதவரசன் மகளாகிப் பார்வதியென்று பெயர் பெற்றதாக ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால், குறிஞ்சித் தேவி என்று பொருள்படும் மலைமகள் என்னும் பெயரையே, மலைக்கு மகள் எனப் பிறழவுணர்ந்து அக்கதைகட்டப்பட்டதோ என ஐயுறக் கிடக்கின்றது. கலைமகள், மலர்மகள், நில மகள் முதலிய பெயர்களில் மகள் என்பது மூறைகுறிக்காது பெண் பாலையே குறித்தல் காண்க. பர்வதவரசன் என்னும் தொடரும் மலைகட்கு அரசு போற் சிறந்த பனிமலையையே குறித்தலையும், சிவன் பண்டு குறிஞ்சித் தெய்வமாயிருந்ததையும், மகேந்திரம் முழுகிய பின் பனிமலை சிவனுக்குச் சிறந்த இடமாகக் கொள்ளப்பட்டமையையும் நோக்குக. ஆகவே, மலையரசன் பெற்ற மகள் என்பது பனிமலை அடைந்த அல்லது தாங்கிய பெண்டெய்வம் என்றே பொருள்படுவது காண்க.

சிவனியமும் (சைவமும்) மாலியமும் (வைணவமும்) வெவ் வேறு சமயங்களா யிருக்க அவற்றை ஆரியர் முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கை பற்றி ஒன்றாயிணைத்ததால், சில புதுக் கருத்துக்களைக் கொள்ள வேண்டியதாயிற்று. அவை யாவன

அரன் = தேவன். இப்பெயரின் வரலாறு பின்னர்க் கூறப் படும்,

(1) சிவ பெருமானுக்கு அழிப்பும் திருமாலுக்குக் காப்பும் தொழிலாக வகுத்தல்,

தீ போல்பவன் சிவன் என்றும் மேகம் போல்பவன் திருமால் என்றுங் கொண்டமையால், முறையே அவற்றின் தொழிலான அழிப்பும் காப்பும் அவ்விருவர்க்கும் கூறப்பட்டன. தீ ஆண்டன்மையும் நீர் பெண்டன்மையுங் குறித்தற்கேற்றல் காண்க:

(2) அரியரன் (ஹரிஹரன் அல்லது சங்கர நாராயணன்) என்ற வடிவம் அமைத்தல்.

(3) திருமாலை மலைமகளுக்கு அண்ணன் என்றல்:

இவ்விருவர் நிறமும் கருமை யென்பதையும் நோக்குக. கருமை, நீலம், பசுமை என்னும் மூன்றும் ஒன்றாகவே கொள்ளப்படும்:

(4) பிரமன் திருமானின் மகன் எனல்,

இம்முறை காட்டற்கே, பிரமனுக்குத் திருமாலின் திருவுந்தித் தொடர்பு கூறப்பட்டது.

திருமாலியராய்த் தெரிகின்ற தொல்காப்பியர் காலத்திலிருந்து திருமால் தனித் தெய்வமாகப் பிரித்துக் கூறப்பட்டு, அதிலிருந்து திருமாலியமே சிறந்து வருகின்றது என்பதற்குச் சான்றுகள் :

(1) தொல்காப்பியம் :

i. 'மாயோன் மேய' என்ற நூற்பாவில் மாயோனை முற்கூறுதல்.

ii. “மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ”

என்று மன்னர்க்குத் திருமாலை உவமை கூறல்.

(2) திருக்குறள்.

i. “தாமரைக் கண்ணான்“ என்றும். “அடியளந்தான் தா அயதெல்லா மொருங்கு“ என்றும், திருமாலை விதப்பாய்ச் சுட்டல்:

ii. “தேவிற்றிருமால்“ என்று கவிசாகரப் பெருந் தேவனார் கூறல் (திருவள்ளுவ வெண்பாமாலை).

(3) சிலப்பதிகாரம் : திருமாலைப்பற்றிய பகுதிகளை மிகச் சிறப்பாய்க் கூறல்.

(4) தமிழ் தெடுங்கணக்கு அரி ஓம் நம என்று தொடங் கியதால் ஆரிவரியெனப்படுதல்.

(5) இதுபோது சில சைவரும் இராமம் நாமம் அணிதல்.

சிவன் திருமால் என்னும் தமிழத் தெய்வங்களோடு, முறையே ருத்திரன் விஷ்ணு என்னும் ஆரிய தெய்வங்களை இணைத்து விட்டனர் ஆரியர். ஆரியர்க்கு ருத்திரன் புயற் காற்றுத் தெய்வமும் விஷ்ணு சூரியத் தெய்வமுமாகும்,

காளிக்குச் சிறந்த இருப்பிடம் சுடலையாதலானும், பேய் கட்குத் துணங்கைக் கூத்து உரிய தாதலானும், காளியின் கணவனான சிவ பெருமான் சுடலையாடி யெனப்பட்டார்.

சிவபெருமானுடைய முத்தொழிலையே திருக்கூத்தாக உருவகித்தனர் உயர்ந்தோர்.

சைவம்[7] பற்றிய சில தமிழ்க் குறியீட்டுப் பொருள்கள்

ஆனைந்து (பஞ்ச கவ்யம்) :

ஆனைத்தை (துடிசைகிழார் அ. சிதம்பரனார் செந்தமிழ்ச் செல்வியிற் கூறுகிறபடி) பால் தயிர் வெண்ணெய் மோர் நெய் என்று கொள்ளுவதே பொருத்தமாயிருக்கிறது. ஆனைத்தைப் பஞ்ச கவ்யம் என்று மொழிபெயர்த்துக் கூறினதுடன், பால், தயிர், நெய், கோமூத்திரம் சாணம் என்று பிறழக் கறி விட்டனர் ஆரியர்.

திருநீறு :

சிவபெருமான் தம்மை யடைந்தவரின் தீவினையை எரித்து விடுகிறார் என்னுங் கருத்துப்பற்றியதே, திருநீற்றுப் பூச்சாகத் தெரிகின்றது. நீறு = சுண்ணம், பொடி: பூதி யென்பது நீற்றின் மறுபெயர். பூழ்தி (புழுதி) - பூதி. ஒ. நோ. போழ்து (பொழுது)-போது. பூ =பொடி, தூள். பூதியை 'வி' என்னும் முன்னொட்டுச் சேர்த்து, விபூதியென்று வடசொல்லாக்கினர்.

உருத்திராக்கம் :

உருத்திர+ அக்கம் = உருத்திராக்கம்.

உருத்திரன் என்று சிவபெருமானுக்கொரு பெயர் தமிழிலேயே யிருந்தது. உருத்தல் = சினத்தல், தோன்றுதல். உரும்=நெருப்பு, சினம், இடி. உருமி=புமுங்கு. உருமம்= உச்சிவேளை. உருப்பக அழல் (புறம். 25). உரு என்ற சொல் முதலாவது நெருப்பையும் பின்பு சிவத்தையுங் குறித்தது. ஓ. நோ, அழல் - இழலுதல் =சினத்தல், கனல் -கனலுதல் = சினத்தல், சினம் நெருப்பின் தன்மையுடையது. “சினம்....... சுடும்“ (குறள். 306). நெருப்பின் தன்மை ஒளியா தலாலும், ஒளியால் பொருள்களின் வடிவந் தோன்றுதலாலும், உரு என்னும் சொல் வடிவம் குறித்தது. “சுவையொளி” என்னுங் குறளில், காட்சியை அல்லது வடிவத்தை ஒளியென்றது காண்க.

'உரு+உ = உருவு. உருவு + அம் = உருவம்.
உருவு-உருபு (வேற்றுமை வடிவம்).
உரு. உருப்படி என்னுஞ் சொற்கள், எத் துணையோ பொருள்களில் உலகவழக்கில் வழங்குகின்றன.

உரு என்னுஞ் சொல்லின் வரலாறு மிக முக்கியமானது. இது இந்நூலின் மூன்றாம் படலத்தில் விரிவாகக் கூறப்படும். உருவம் என்னுந் தமிழ்ச் சொல்லே, வடமொழியில் ரூப என்று திரியும். இது வட நூலார் கூற்றையொட்டிப் பல்கலைக்கழக அகர முதலியிற் றலை மாறிக் கூறப்பட்டுள்ளது.

சிவன் நெருப்பின் தன்மையும் அழிப்புத் தொழிலும் உடையவராதலின், உருத்திரன் எனப்பட்டார். உரு + திரம் - உருத்திரம் (ருத்ரம்-வ.) சினம். திரம் ஒரு தொழிற் பெயர் ஈறு, உருத்திரத்தையுடையவன் உருத்திரன். உருத்திரன் என்னும் தமிழ்ப் பெயரையே, ருத்ர என்னும் ஆரிய வடிவில் சினக்குறிப்புத் தோன்றுங் கடுங்காற்றிற்குப் பெயராயிட்டனர் ஆரியர் என்க.

அக்கம் = கூலம் (தானியம்), மணி, அக்கம் - அக்கு. அக்கஞ் சுருக்கேல் என்றார் ஔவையார், கூலம் மணியென்றும் பொருள்படுவதை, நென்மணியென்னும் வழக்காலறிக.

“கொக்கிறகக்கம்” (திருப்பு, 416.)

உருத்திரன் பற்றி யணியப்படும் அக்கம் உருத்திராக்கம். நீட்டற் புணர்ச்சி (தீர்க்க சந்தி)யும், மரூஉ முறையில், தமிழுக்குச் சிறுபான்மை யுண்டென்பதை, மராடி, குளாம்பல், எனாது, குணாது என்னும் வழக்குகளால் உணர்க. 'உருத்திராக்கத்தின் சிறப்புப் பண்பை , பூத எநூலும் (Physics) நிலைத்திணை நூலும் (Botany) அறிந்தவர் ஆராய்ந்து கூற வேண்டும்.

உருத்திராக்கத்தை ருத்திராக்ஷம் என்று திரித்து, ருத்திரனின் கண்ணிலிருந்து தோன்றியதாக ஒரு கதை கட்டினர் ஆரியப் பழைமையா, இங்ஙனம் கூறுவதற்குக் காரணம், ரா (Ra) என்னும் (சூரியத்) தெய்வத்தின் கண்ணீரே மழையென்றும், அதிலிருந்து பயிர்பச்சைகள் தோன்றுகின்றன வென்றும், பண்டை யெகிப்தில் வழங்கிய ஒரு பழைமைத் கொள்கையை, மேலையாசியாவி லிருந்தபோது ஆரியர் கேட்டறிந்ததேயென்று தோன்றுகின்றது.

பிற்காலத்தில், ருத்திராக்ஷம் வட நூற் பொருளை யொட்டிக் கண்மணியென மொழிபெயர்க்கப்பட்டது.

ஓ(ம்) குரு, தீக்கை (தீக்ஷா) என்பனவும் தமிழ்ச் சொற்க ளாகவே தோன்றுகின் றன, ஓங்காரத்திற்கு இன்றும் தமிழ் வரிவடிவமே எழுதப்படுவதையும், உரு என்னும் சொல் போன்றே குரு என்னும் சொல்லும், வெப்பம், தோற்றம் சிவப்பு என்று பொருள் படுவதையும், தீக்கை என்பது குரு பருவான்மாவின் மலத்தைக் காண்டல் தீண்டல் முதலிய வற்றால் தீத்து (எரித்து) விடுதலைக் குறித்தலையும் நோக்குக.

ஓ-ஓங்காரம். ஒ. நோ. ரீ-ரீங்காரம்.

ஓ = அ + உ என்று வடமொழிப் புணர்ச்சிப்படி பிரித்தது பிற்காலம். ஆசிரியன் என்பதன் பொருளைத் தழுவி, குரு என்பதில், கு= குற்சிதம், ரு= ருத்திரன் என்று கூறுவது, News என்பது North Eest West South என்னும் நாற்றிசைச் செய்தி குறிப்பது என்று அப்பெயர்க்குக் காரணம் கூறுவது போன்றதே.

மதம்பற்றிய சில பொதுச்சொற்கள்

மாயை:

மாய்= ஐ=மாயை. ஓ. தோ, சாய்+ஐ= சாயை= நிழல். மாய்+ அம் = மாயம். மாயை மாயம் என்பவை, அழிவு, மயக்கம் என்னும் பொருளன. ' மாயமாய்க் காணோம்' மாயவித்தை என்னும் வழக்குகளை நோக்குக. மாயை சாயை என்னும் தமிழ்ச்சொற்களை மாயா சாயா என்று கோர வீறாக்கினவனவானே வடசொல்லாகக் கூறுவது நகைப்பிற்சிடமானதே.

மதந்தழுவிய சில கருத்துக்கள்

வீடு :

ஆன்மாவுக்குத் துன்பத்தை நீக்குவதும் நிலையான இருப்புமாகிய துறக்கவுலகைப் போல, பெயின்மழைத் துன்பத்தை விலக்குவதும் நிலையாகத் தங்கற் குரியது மானது என்னுங் கருத்தில், இல்லத்தை வீடென்றனர் முன்னோர்.

விடு—வீ=(பிறவி நரகத் துன்பத்தினின்றும்) விடுதலை துறக்கம். உலகப்பற்றைத் துறந்து பெறுவது துறக்கம்.

ஏழுலகம் :

பண்டை ஞாலம் ஏழு தீவுகளாய் அல்லது கண்டங்களாயிருந்தமையின், ஞாலத்தைச் சேர்த்து மேல் ஏழுலகம் அமைந்திருப்பதாக முன்னோர் கொண்டதாகத் தெரிகின்றது. இனி எழுகோள்களினின்றும் ஏழுலகவுணர்ச்சி யுண்டானதாகவும் கொள்ளலாம்.

ஏழுலகத்தைக் குறிப்பதற்கே, எழுநிலை மாடமும் எழுநிலைக் கோபுரமும் எடுத்தனர் என்க.

எழு தீவுகளையுஞ் சுற்றியுள்ள கடல்களை எழுகடல் என்றனர் முன்னோர். ஒ. நோ. Indian Ocean (from Mount Atlas, in the north west of Africa) எழுகடல்களை நன்னீர், உவர் நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பவற்றால் நிறைந்ததாகப் பிறழக்கூறினர் ஆரியப்பழைமையர்.

எழுபிறப்பு :

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக ஆறும், தேவர் பிறப்பொன்றுமாக, உயிரடைவது ஏழ் பிறப்பென்று தமிழர் கொண்டனர். இவற்றைத் தேவர் மாந்தர் விலங்கு பறவை நீர்வாழ்வன ஊர்வன நிலைத்திணை என, வேறொரு வகையா யெண்ணியதுடன், மாந்தர்க்குள்ளேயே சூத்திரன் வைசியன் க்ஷத்திரியன் பிராமணன் என முறையே உயர்ந்த நால்வகைப் பிறப்புள்ளதாகவும், பிராமணப்பிறப்பு ஒரு விரிவுளர்ச்சி (Evolution) யெனவும் கூறினர் ஆரியப் பார்ப்பனர்.

பிறப்பாலுயர்வு தாழ்வு வகுப்பது (இந்திய) ஆரியக் கொள்கை; தமிழர் கொள்கையன்று. பிரமாவே மக்களை நாற்குலமாகப் படைத்தாரென்றால், ஏனை நாடுகளில் ஏன் அங்கனம் படைக்கவில்லை? இந்தியாவில் மட்டும் ஏன் படைக்க வேண்டும்? அதிலும் தமிழரை ஏன் படைக்கவில்லை? இந்துக்கள் கிறித்தவரும் இஸ்லாமியருமானவுடன் ஏன் பிரமாவின் படைப்பு அவர்களைத் தாக்குவதில்லை? இதனால், பிறப்பாற் சிறப்புக்கொள்கை ஆரியராற் புகுத்தப் பட்ட தந்நலக்கருத்தேயன்றி வேறன்றென்க. இந்தியாவின் ஒற்றுமையைக் கெடுப்பது இதைப்போன்று வேறொன்று மில்லை. அயல்நாடு சென்றால் கண்திறக்குமென்ற கருத்துப் பற்றியே, இடைக்காலத்தில் இந்தியர் அயல் நாடு செல்வது ஆரியத்தால் தடுக்கப்பட்டிருந்ததென்க,

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” குறள்-972.)

என்றார் திருவள்ளுவர்,

மக்கள் வரவரப் பெருகி வருதலையும், அதனாற் குலமும் பெருகி வருதலையும், ஒருகாலத்தில் குலமேயில்லா திருந்ததையும் நோக்குக. கபிலரகவலையுங் காண்க:

முப்படிவம் (திரிமூர்த்தம்) :

மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம் பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன் பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத் தொழிலும் கூறப் பட்டன. பின்பு படைப்புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப்பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.

இதே,

”தோற்றிய திதியே யொடுங்கிமலத் துள தா
மந்த மாதி யென்மனார் புலவர்”

என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.

பிராமணர் தென்னாட்டிற்கு வந்த பின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குல முதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில் வழிபாடேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.

பிராமணரின் குல முதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரம தாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குக்களாலும், வீர மகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாலைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும்.

திருமால் முகில் வடிவினராதலின், மேகத்தைச் சமுத்திரமென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வரவரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப்பட்டார் போலும், ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலை மகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப் பெயராற் கூறினரேயன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின்:

பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான், அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபலனாதலின், ' உலகக் சுருமான்' (விசுவகர்மா) எனப்பட்டான். 'உலக விடைகழி' என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், சுருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே .

உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்னும் பெயருண்டு ஓ. நோ. Gr. architekton-archi, chief, and tekton, a builder. E. architect.

ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் சுருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும், உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.

பிராமணர் தம் குல முதல்வராகிய பிரமனைப்படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர் மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தத பிற்காலமாதலின், பிரமாவை நான் முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவு பற்றியேயிருத்தல் வேண்டும்,

அறுமுறை வாழ்த்து

பாடாண் பொருள் புகழ்ச்சி, வாழ்த்து, வழுத்து என மூவகைப்படும். புகழ்ச்சியாவது ஒருவரைச் சிறப்பித்துக் கூறல் ; வாழ்த்தாவது ஒருவரை நீடு வாழ்கவென்றல்; வழுத்தாவது ஒரு தெய்வத்தைப் பராவுதல்.

'அமரர் கண் மூடியும் அறுவகை யானும்' (புறத். 21) என்பதால், வாழ்த்தப்படுபொருள் ஆறென்றார் தொல்காப்பியர், "அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்" என்று கூறினர் நச்சினார்க்கினியர். இவற்றுள், பார்ப்பார் முற்காலத்துக்கேற்காமையின், அவர்க்குப் பதிலாய்க் கூறத் தக்கது அறமேயாகும்.

"கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

என்பது தொல்காப்பிய நூற்பா (புறத்: 27).

இதில் 'கொடி நிலை கந்தழி வள்ளி" என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கூறினர். அவற்றுள் மு. இராகவையங்கார் அவர்கள் கூறியதே உண்மையான பொருளாகும். அது 'அவை முறையே வான் நீத்தார் அறன் என்பன' என்பது.

"முதலன மூன்றும்" என்றதனால் முன்னாற் கூறப்பட்ட முதன் மூன்று பொருளும் என்றும், "வடுநீங்கு சிறப்பின்" என்றதனால், அவை மிகுந்த சிறப்புடையவை என்றும், "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்பதனால், அவை கடவுள் வாழ்த்தொடு சேர்த்து வருமென்றும் பொருள் படுவதாலும்,"முதவன மூன்றும்" என்ற சுட்டு, " அமரர் கண் முடியும் அறுவகையைத் தவிர வேறொன்றையும் தழுவ முடியாமையாலும், "கொடி நிலை சுந்தழி வள்ளி" என்ற மூன்றற்கும் ஐயங்கார் அவர்கள் கூறிய பொருள் "அமரர்கண் முடியும் அறுவகை" யில் மூன்றாயமைதலானும். இதற்குச் சிறந்த பழத்தமிழ் நூலாகிய திருக்குறட் பாயிரம் காட்டா யிருத்தலானும், வேறோருரைக்கு இடமில்லை யென்க.

"கடவுள் வாழ்த்து" என்னும் பெயரும், அதன் பின் "கொடி நிலை கந்தழி வள்ளி" என்ற முறையும். திருக்குறட் பாயிரத்தில் அமைந்திருப்பதை நோக்குக

இது மதி நுட்பத்தாலறியும் பொதுச் செய்தியாதலின், பார்ப்பார் தமிழ் மொழிக்கதிசாரியா கார் என்று யான் முற்கூறியதற்கு முரணாகாதென்க.

தமிழுக்கு இது போது தொண்டு செய்து வருவாருள், தலைமை யானவருள் ஒருவர் மு. இராகவையங்கார் அவர்கள் ஆவார்கள். அவர்கள் எழுதிய நூல்களுள், தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாஸனத் தமிழ்க்கவி சரிதம் என்பவை மிக மிகப் போற்றற்குரியன,

நூல்களை உள்ளபடி அச்சிடுவதினும் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவது சிறந்தது. ஐயங்கார் அவர்கள் நூல்களில் உள்ள சில தமிழொடு முரண் கருத்துக்கட்கு, மூன்னோரான பார்ப்பாரும் தமிழருமே காரணராவர்.

அறிவ (சித்த) மதம்

'அறிவன் தேயம்' என்று தொல்காப்பியத்திற் கூறியிருப்பதால், உருவ வணக்கத்தை (Idolatry) யொழித்த உயர்ந்த அறிவ மதமும் பண்டைத் தமிழகத்திலிருந்தமையுணரப்படும். பிற்காலத்திலிருந்த பதினெண்ணறிவரும் தமிழரே. சுடவுள் என்ற பெயர் எல்லாவற்றையும் கடந்த முழுமுதற்கடவுளைக் குறித்தல் காண்க:

வடமொழிப் பழைமை நற்பொருள்கள் பல
தென்னாட்டுச் செய்திகளேயாதல்

சதாபத பிராமணம், பாரதம், பாகவதம், அக்கினி புராணம், மச்ச புராணம் என்பவை தென்னாட்டுக் கடல்கோட் செய்தியைக் கூறுகின்றன.

திருமாலின் ஆமைத்திருவிறக்கம் :

"பாண்டி நாட்டைச் சூழ்ந்த கடல்களில், மிகப் பெரிய ஆமைகள் வாழ்கின்றன. அவற்றின் ஓடுகள் வீடுகளுக்கு முகடு போட உதவுகின்றன. ஓர் ஓட்டின் நீளம் 15 முழம். அதனடியில் பலர் நின்று வெயிலுக்குத் தப்பமுடியும் என்று மெகஸ்தனிஸ் கூறுகிறார்.[8] இது முன்னோர் கூற்றைக் கொண்டு கூறியதே.

தென்கடலில் நில நடுக்கத்தால் தத்தளித்த ஒரு மலைத் தீவையே, ஆமையுடன் இணைத்து, திருப்பாற்கடல் கடைந்த கதையைக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது.

இராமாயணத்தில் முக்கியமான பகுதி தென்னாட்டுச் செய்தியே.

தெய்வமாக்கிக் கூறியவர், சிறந்த அல்லது பெரிய அரசரைத் தெய்வ வால்மீகியைவிடக் சும்பரே இராமனைமிகுதியும்மாக வணங்குவது பண்டை வழக்கம், திருமலை நாய்க்கர் இறந்த பின்பு அவர்க்குக் கோயில் எடுத்து வழிபட்டனர். [9] திருமாலைப்போல அரசரும் காப்புத் தொழிலையுடைமையின், அவரைத் திருமாலாகக் கூறுவது தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கம் என்பதை, 'பூலை நிலை' என்பதாலறியலாம். 'முச்சக்கரமும்' என்னும் வெண்பா கரிகாலனைத் திருமாலாகக் கூறுவதையும், அரசர் நாடும் வெற்றியும் அடைவதை நில மகளையும் வயமகளையும் மணப்பதாக மெய்க்கீர்த்தி மாலைகள் கூறுவதையும், திருவுடையரசரைக் காணின் திருமாலைக் கண்டேனென்னும் என்னும் திவ்வியப் பனுவற் கூற்றையும் நோக்குக.

இராமன் தவஞ் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திரனைக் கொன்றும், கண்ணன் நால்வகைக் குலமும் பிரமாவின் படைப்பேயேன்று கூறியும், பிராமணீயத்தை வளர்த்ததினால் மிகப் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. [10]

கந்தபுராணத்தில், கந்தன் பிறப்புத் தவிர, மற்றைய வெல்லாம் (பெரும்பாலும்) தென்னாட்டுச் செய்திகளே,

பஞ்சதந்திரக் கதைகனிற் பல தென்னாட்டில் வழங்கியவை,

ஹாலாஸ்ய மான்மியம், உபமன்யு பக்த விலாசம் முதலி யவையும் பல தலப் பழைமைகளும் தென்னாட்டுச் செய்தி களைக் கூறுபவை.

அடி முடி தேடிய கதை திருவண்ணாமலையில் தோன்றியது.

முப்புரம் எரித்த கதை வடவிலங்கையில் தோன்றியது. மாந்தையிலிருந்த முக்கோட்டைகள் நிலநடுக்கத்தாலோ எரிமலையாலோ பன்முறை அழிந்து போயின. ஒரழிவு பௌத்த மதம் இலங்கையிற் புகுந்த பின் நிகழ்ந்தது. அதுவரை சைவமே அங்கு வழங்கிவந்தது. அதனால் திருமால் புத்தவடிவு கொண்டு தாரகாட்சன் முதலிய மூவரைப் பௌத்தராக்கி, பின்பு சிவ பெருமானால் அவர்க்கு அழிவு நேர்வித்ததாகக் கதை கட்டப் பட்டது. (கதிரைமலைப்பள்ளைக் காண்க.)

ஜனமேஜயன் கதை மைசூர் நாட்டில் தோன்றியது.[11]

பண்டைக்காலத்தில், திருமாலியர்க்குத் திருவரங்கமும் சைவர்க்குத் தில்லையுமே சிறந்த திருத்தலங்களாகவிருந்தன, அதனால் அவற்றிற்குக் கோயில் என்றே பெயர்.

கங்கை நாட்டிலிருந்த பார்ப்பனர் தென்னாட்டிற்குக் குமரியாட வத்தனர்.

இராகனன் பெயர்க்க முயன்றதாகக் கூறும் கயிலை யாழ்ப்பாணத்திலுள்ளதே.

பதினெண் கணத்தாருள், பெரும்பாலார் தென்னாட்டிற்கேயுரியவர்.

சோழ மரபின் முன்னோருள் ஒருவனான சிபி அயோத்தியில் ஆண்டதாகக் கூறப்படுகின்றான். இதனால், வட நாட்டுச்குரிய திங்கள் மரபினரின் முன்னோர் தென்னாட்டாரே என்று தெரிகின்றது.

எண்டிசைத் தலைவர்

கிழக்கில் வேந்தன் (இந்திரன்);

இந்திரன் என்று பழைமை நூல் கூறுவது பலவிடத்தில் கடாரத்தரசனையே. இந்திரன் யானைக்கு வெள்ளை நிறமும் ஐராவதம் என்னும் பெயரும் கூறப்படுவதையும், கடாரத்திலுள்ள ஐராவுதி என்றும் ஆற்றுப் பாங்கரில் வெண்புகர் யானை வதிவதாகக் கூறப்படுவதையும், இலங்கையிலிருந்த அரக்கரும் அசுரரும் அடிக்கடி இந்திரனை வென்றதாகக் கூறுவதையும், கடாரம் கிழக்கிலிருப்பதையும், இந்திரன் கடலைப் பாண்டி தாட்டின் மேல் வரவிட்ட கதையையும், மேகம் கீழ் கடலில் தோன்றிக் கொண்டல் என்று பெயர் பெறுவதையும், கடாரமும் மலேயாவும் இன்றும் ஆடல்பாடல்களிற் சிறந்திருப்பதையும், தேவருலகிற்கு நாகலோகம் என்றொரு பெயரிருப்பதையும் நோக்குக.

எண்டிசைத் தலைவருள், அரசரெல்லாம் ஒருகாலத்தில் ஒரு தலைமுறையில் தத்தமக்குரிய திசையிலுள்ள நாடுகளை ஆண்டு கொண்டிருந்தவரே. கடாரத்தரசனுக்கு இந்திரன் என்று பட்டப்பெயரிருந்திருக்கலாம்.

தென் கிழக்கில் தீ (அக்கினி)

ஜாவாவிலிருந்து பிலிப்பைன் தீவுவரையும், இன்றும் பல விடத்தில் எரிமலைகள் எரிந்து கொண்டிருப்பதைத் திணை நூலிற் காண்க.

தெற்கில் கூற்றுவன் (யமன்)

இவனைப்பற்றி முன்னர்க் கூறப்பட்டது. மறத்திற் சிறந்த எருமைக்கடா[12] மறலிக்கு ஊர்தியாகக் கூறப்பட்டது.

தென்மேற்கில் அரக்கன் (திருதி).

தென்னாப்பிரிக்க மக்களையும் பண்டு தமிழகமும் ஆப்பிரிக்காவும் இணைந்திருந்ததையும் நோக்குக.

மேற்கில் வாரணன (வருணன்),

வங்காளக்குடாவிலிருந்த நிலங்கட்கு முந்தி, அரபிக்கடலிலிருந்த நிலம் அமிழ்ந்து போனதால், மேற்கில் வாரணன் குறிக்கப்பட்டான்,

வடமேற்கில் காற்று (வாயு).

இது ஒரு கால் சகாராப் பாலை நிலக் காற்றாயிருக்கலாம்.

வடக்கில் குபேரன்.

இவன் இராவணன் காலத்தவன், இல் விருவரும் முறையே இலங்கையிலிருந்த இயக்கர் (யக்ஷர்), அரக்கர் (ராக்ஷஸர்) என்னும் குலங்கட்குத் தலைவர். இவ்விருவர்க்கும் போர் நிகழ்ந்தது. இராவணன் குபேரனை வென்று அவன் ஊர்தி (புஷ்பக விமானம்) யையும் கவர்ந்து கொண்டான். பின்பு குபேரன் வடதிசைக்குப் போய் ஒரு நாட்டையாண்டான். ஈழத்தில் பொன்னும் மூத்தும் ஏராளமாயகப்பட்டமையின், அவன் ஒரு பெருஞ் செல்வனாய்ப் பல கருவூலங்களை யுடையவனாயிருந்தான்,

வடகிழக்கில் ஈசானன்.

ஈசானன் ஒரு சில வடிவாகக் கூறப்படுகின்றான். இது மலைமகளின் கூறாகக் கருதப்படும் தடாதகைப் பிராட்டி, வடகிழக்குத் திசையிலிருந்த சோமசுந்தரனைக் கலியாணஞ் செய்ததினாலேயே.

இதுகாறும் கூறியவற்றால், இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே யென்பதும், "ஆரியர் நாகரிகத்தில் திராவிடராக, திராவிடர் மொழியில் ஆரியரானார்" என்று கில்பெர்ட் சிலேற்றர் (Gilbert Slater) கூறுவது சரியே என்பதும் அறிந்து கொள்க.

நாகர்:

நாகர் என்பார் முதன் முதல் நாக வணக்கங்கொண்டிருந்த கீழ்த்திசை நாட்டார். இன்றும் கீழ் நாடுகள் பாந்தளும் நச்சுப் பாம்பும் நிறைந்தவை.

"கீழ்நில மருங்கினாக நா டாளு
மிருவர் மன்னவர்" (9 : 54, 55)

என்பது மணிமேகலை,

நாகநாட்டு மாந்தரும் அரசரும் நாக இலச்சினையுடை யவராயும், நாகவுருவை அல்லது படத்தைத் தவையிலணிந்த பராயுமிருந்தனர். சிவபெருமான் நாகத்தைத் தலையிலணிந்த தாகக் கூறியது, புல்லிய வணக்கத்தையுடைய நாகரைச் சைவராக்குவதற்குச் சூழ்ந்த சிறந்த வழியே. பௌத்த மதம் பிற்காலத்து வந்தது.

சாவகம் (ஜாவா) நாகநாடென்றும் அதன் தலைநகர் நாகபுரம் என்றும் கூறப்பட்டன, இன்றும் நாகர்கோவில், நாகபட்டினம், நாகூர், நாகபுரம் (Nagpur), சின்ன நாகபுரம் (Cheta Nagpur) முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே இருத்தல் காண்க.

அனுமான் கடல் தாண்டும் போது நாகரைக் கண்டா (னென்றும், மைத்நாகமலையில் தங்கினானென்றும், வீமன் துரியோதனனால் கங்கை லமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும், சூரவாதித்த சோழன் கிழக்கே சென்று நாககன்னியை மணந்தாவொன்றும் கூறியிருத்தல் காண்க.

நாகர் அல்லது கீழ்த்திசை நாட்டார் நாகரிகரும் அநாகரிகருமாக இருதிறத்தினர். அநாகரிகர் நக்கவாரம் (Nicobar) முதலிய தீவுகளில் வாழ்பவராயும், அம்மணராயும், தரவூனுண்ணிகளாயு மிருந்தனர்.

"சாதுவனென்போன் தகவில னாகி...
நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மைய னாயினள்...

நக்க சாரணர் நயமிலர் தோன்றி...
ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும்"

என்னும் மணிமேகலை (16 : 4- 59) யடிகளைக் காண்க:

தக்கம் — அம்மணம்.

சாவகம் முதலிய நாட்டிலுள்ளவர் நாகரிகராயிருந்தனர். நாக நாட்டின் ஒரு பகுதி இன்பத்திற்குச் சிறந்திருந்தமையால், அது தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலை தகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் பிறவின் பங் கட்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது.

நடுமாகணத்தி (Central Provinces) லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாக நாட்டாரே. வங்காளக் குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்து போனபின், அவற்றினின் றும் எஞ்சினோர் இந்தியாவின் கீழ்ப்பாகங்களிற் குடியேறினர் என்க

முண்டரின் முன்னோர் நாகர் என்பதற்குச் சான்றுகள்

(1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Peninsula) வரையும், ஒரேவகையான கற்கருவிகள் அகப்படுவதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.[13]

(2) முண்டாமொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் மொழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான் குமேர் (Mon - Khmer) மொழிகளும் ஓரின மென்று கொள்ளும்படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.[14]

மான்குமேர், முண்டா , திராவிடம் என்னும் முக் குடும்ப மொழிகளும் பின்வருபவற்றில் ஒத்திருக்கின்றன.

i; சொன் முதலில் ஒரு மெய்க்குமேல் வராமை

ii, சொல்லின் ஈற்றில் அரையொலிப்பு மெய்கள்.

iii. மூவிடப்பெயர்களிற் சில, பெயர்களுடன் சேர்ந்து கிழமைப்பொருள்தரல்.

vi. பல சொற்கள் :—

முண்டா மான்கு மேர் தமிழ்
தம் தமர் (துளை)
மூ முஹ் மூக்கு
புரு ப்ரி பொறை (மலை)
பீர் ப்ரி மரம்
ஜம் செள சப்பு (உண்)
மரன் முரண் (பெரிய)
ஹா ஆம்
நி நெ இன் (இந்த)
நொ நொ அன் (அந்த)

தமிழில், சொற்களின் ஈற்றில் மெய்கள் அரையொலிப்பா யொலித்தல் கொச்சை வழக்கு.

இன் என்னுஞ் சொல், இலக்கணப் போலியாய் எழுத்து முறைமாறி நி என்றாகும். அகர இகரங்கள் முறையே ஒகர எகரங்கட்கினம்.

குரங்கு, கொண்டை, பரவு (படவு), இரும் (கருப்பு), பெட்டி மூக்க (முகம்) ஏகு, பொஹொ (புகை) முதலிய பல தமிழ்ச் சொற்கள் மலேயத் தீவுக் கூட்டத்தில் வழங்குகின்றன

கீழ்வருபவை முண்டா மொழியினத்தின் சிறப்பியல்புகளாகப் பண்டிதர் கிரையர்சன் குறிப்பிடுகின்றார்:-

(1) ஒரே சொல் பல சொல்வகை (Parts of Speech) யாக வழங்கல்
(2) ஆண் பெண் என்ற சொற்கள் பெயரோடு சேர்ந்து முறையே ஆண்பாலும் பெண்பாலு முணர்த்தல்.
(3) 6-ஆம் வேற்றுமை பெயரெச்சமாயிருத்தல்.
(4) முன்னிலையை உளப்படுத்துவதும் படுத்தாததுமான இரு தன்மைப் பன்மைப் பெயர்களிருத்தல்
(5) இருந்து என்று பொருள்படும் (5 ஆம் வேற்றுமை) உருபு ஒப்புப் பொருளை யுணர்த்தல்.

(6) தொடர்புப்பதிற்பெயர்களும் (Relative Pronouns)
    தொடர்பு வினையெச்சங்களும் இல்லாமை

இவை தமிழுக்கும் உரியவாதல் காண்க.

மான்குமேர் மொழியினம் ஓரசை நிலை (Monosyllabic) யதாகவும், முண்டாமொழியினம் பல்லசை நிலை (Polysyllabic) யதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் முன்னதன் முன்மை யுணரப்படும்: |

ஆத்திரேலிய மொழிகட்கும் தமிழுக்கும் உள்ள ஒப்புமை.[15]

(1) சகர வேறுபாடுகளும் மூச்சொலிகளு மில்லாமை:

(2) பின்னொட்டுச் சொற்களாலேயே பெரும்பாலும் புதுச்சொற்கள் ஆக்கப்படல்,

(3) ஆத்திரேலிய மொழிகளில் உயர்திணைப் பெயர் களும் அஃறிணைப் பெயர்களும் வேறு படுக்கப் படாமை,

முதுபழந் தமிழிலும் இங்ஙனமே யிருந்தது.

கா : மண்வெட்டி, விறகு வெட்டி: சலிப்பான் (சல்லடை)

(4) 'அர்' பன்மை வீறாயிருத்தல்;

தமிழர், முண்டர், நாகர், ஆத்திரேலியர் என்பவர் பண்டு திரினத்தாராயிருந்ததாகத் தெரிகின்றது.

இலங்கையில் பண்டு வழங்கியது தமிழென்றும், ஈழ நாட்டரசர்க்கு முடிநாகர் என்ற பேர் இருந்ததென்றும், முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் 'செந்தமிழ்'ச் சுவடிகை (Magazine) யில் எழுதியிருப்பது பொருத்தமானதே.

ஆத்திரேலியர் திராவிடரைப் பலவகையில் ஒத்திருப்பதாக மாத்தனூலார் கூறுகின்றனர்.

தமிழர் நீக்கிரோவர்க்கும் ஆரியர்க்கும்
இடைப்பட்டோராதல்

இதற்குச் சான்றுகள் :

(1) கடாரத்தில் முதன் முதல் இராக்கதர் (Monsters) வாழ்ந்தனர் என்னும் ஒரு வழக்குண்மையாலும், நக்கவாரத்தில் நரவூனுண்ணிகனிருந்தமை மணிமேகலையிற் கூறப்படுவதாலும், இலங்கைக்குத் தெற்கே அசுரர் என்னும் ஓர் இராக்கத வகுப்பாரிருத்தமை கந்தபுராணத்தாலறியப்படுவதாலும், தென்மேற்குத் திசைத்தலைவனாக நிருதியென்றோர் அரக்கன் குறிக்கப்படுவதாலும், இன்றும் தென்மேற்கிலுள்ள ஆப்பிரீக்கர் அரக்கவினமாயிருப்பதாலும், பண்டு தமிழகத்தின் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மாந்தனின் 2 ஆவது நிலையினரான நீக்கிரோவர் வாழ்ந்தனர் என்பது அறியப்படும். இராக்கதர் இரவில் செல்லுபவர், இதையே நிசாசரர் என்று மொழி பெயர்த்துக்கொண்டனர் ஆரியர். அரக்கர் அழிப்பவர்.

(3) உடலமைப்புப்பற்றிய மாந்தன் நிலைகளுள், முதலாவது விலங்கு போல்வது; இரண்டாவது பண்டை நீக்கிரோவரது; மூன்றாவது திராவிடரது, நாலாவது ஆரியரது.

தமிழர் உடலமைப்பில் ஒரு வலத்த கருநீசிய(Melanesian) அல்லது இந்தோ-ஆப்பிரிக்கக் கூறுள்ளதாகப் பண்டிதர் லோகன் (Dr. Logan) கூறுகின்றார்.[16]

மாந்தன் நிலைகள், தொழிற்படி, முறையே உண்ணும் மாந்தன் {Man the Eater) உழைக்கும் மாத்தன் (Man the Worker), எண்ணும் மாந்தன் (Man the Thinker) புதுப்புனை மாந்தன் (Man the Inventor) என நான்கு. அவற்றுள் இடை மூன்றும் திராவிடர் அடைந்தவை; இறுதியது ஆரியரது.

மாந்தனை நிறம்பற்றிக் காலமுறைப்படி முறையே கருமாந்தன், செங்கருமாந்தன், செம்மாந்தன், பொன்மாந்தன், வெண்மாந்தன் என ஐவகையாக வகுக்கலாம். அவற்றுள் முதல் மூன்று நிறங்கள் திராவிடருடையன.

மாந்தன் மூக்கு முதலிலிருந்து வரவர ஒடுங்கி வந்திருக்கின்றது. நீக்கிரோவர் மூக்கு அகன்றும் திராவிடரது நடு நிகர்த்தாயும், ஆரியரது ஒடுங்கியு மிருக்கும்.

“சரியான திராவிடனுடைய மூக்கின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விழுக்காட்டளவு (proportion), நீக்கி ரோவின் மூக்கிற்குள்ளது போன்றேயிருக்கிறது.”

“இந்தியாவிற்கு வெளியே திராவிட வரணமில்லை.”

“திராவிடரின் முகம் (தலை) வழக்கமாக வாலவடிவாயுளது. ஆனால், பிற இயல்புகளிலெல்லாம் அது ஆரியத்திற்கு நேர்மாறாயுள்ளது” என்று கிரையர்சன் வரைகின்றார்.

தமிழருள் அல்லது திராவிடருள் தாழ்த்தப்பட்டோரான ஒரு பகுதியாரை, ஆதிதிராவிடர் என்று பிரிப்பது தவறாகும். வெயிலில் உழைப்பதாலும், நாகரிக வாழ்க்கையும் சிறந்தவுணவும் இல்லாமை யாலுமே, அவர் அங்ஙனமிருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோருன் இரண்டு மூன்று தலைமுறையாய் நாகரிகமானவர் மேலோரைப் போலிருத்தலையும், பிறந்தவுடன் ஒரு பறைக் குழந்தையைப் பார்ப்பனக்குடியிலும், ஒரு பார்ப்பனக் குழந்தையைப் பறைக் குடியிலும் விட்டு வளர்க்க உருவம் மாறுபடுவதையும் நோக்குக.


  1. Child Hood of the world.
  2. காந்தளூர்-மேல்கரையில் ஓர் ஊர்.
  3. ஈழம் - இலங்கை
  4. நக்கவாரம் --Nicobar
  5. கடாரம்-பர்மா
  6. The Funeral Tent of an Egyptian Queen. p. 96.
  7. சிவநெறியைச் சைவம் என்றது திரிபாகுபெயர் (தத்தி தாந்தம்). இவ்வியல்பு தமிழுக்குஞ் சிறுபான்மை யுண்டென்பதைப் பைத்தியம் என்னுஞ் சொல்லானுணர்க பித்து (gall - bladder)பித்தம் (Bile)-- பைத்தியம் (insanity).
  8. Foreign Notices of South India, p. 42.
  9. History of the Nayaks of Madura. p. 146.
  10. இக்காலத்தில் வரணாசிரமத்தைத் தாங்கும் திருவாளர் காந்தியை, மகாத்மா வென்றும் முனிவர் என்றுங் கூறுதல் காண்க.
  11. Illustrated Weekly of India Oct. 33. 1938, p. 22,
  12. 1.All About Animals, pp. 54, 55.
  13. L. S. 1. Intro. p. 1.
  14. L. S. 1. pp. 10, 15.
  15. L S. 1. p. 14.
  16. L, S.I.p.14. t Caldwell's Comparative Grammar pp. 560. 561.