கதை சொன்னவர் கதை/குட்டிக் கதைகள் கூறியவர்

நகரத்தின் மத்தியிலே ஒரு மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தில் அடிக்கடி ஏதேனும் வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒருநாள், ஒரு கோமாளி அந்த மண்டபத்தில் பற்பல வித்தைகளைச் செய்து காட்டிக்கொண்டிருந்தான். மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“இப்போது நான் பண்றியைப் போல் கத்தப் போகிறேன்” என்று கூறிவிட்டு, அந்தக் கோமாளி கீழே குனிந்தான். ‘ஈக், பீக், சக், பீக்’ என்று கத்தினான். அவன் கத்தியதைக் கேட்டதும், சிலர், “அடடா! அசல் பன்றி மாதிரியே கத்துகிறானே!” என்று வியந்தனர். மற்றவர்களும், “ஆமாம், ஆமாம். நிஜப் பன்றி கத்துவது போலவே கத்துகிறான்!” என்று ஆமோதித்தனர். அப்புறம் கேட்கவேண்டுமா ? எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீண்டும் மீண்டும் அதே வித்தையைச் செய்து காட்டச் சொன்னர்கள். கோமாளியும் திரும்பத் திரும்ப அதே மாதிரி கத்திக் கொண்டேயிருந்தான்.

அப்போது, அந்தக் கூட்டத்தில் ஒரு குடியானவன் இருந்தான். அவனுக்குப் பன்றியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் திடீரென்று இடத்தைவிட்டு எழுந்தான். நேராக மேடைக்குச் சென்றான்.

“சபையோர்களே, இந்தக் கோமாளி பன்றியைப் போலவா கத்துகிறார்? இல்லவே இல்லை. எந்தப் பன்றியும் இப்படிக் கத்தாது. அசல் பன்றியைப் போல் இதே மண்டபத்தில் நாளைக்கு கான் கத்திக் காட்டுகிறேன்” என்று சென்றான்.

சபையோர் கூச்சலிட்டுக் குடியானவனை அவமானப்படுத்த முயன்றார்கள். குடியானவன் விட வில்லை. “நாளை இதே நேரத்தில் இந்தக் கோமாளியும் வரட்டும். நானும் வருகிறேன். இருவரும் இதே வித்தையைச் செய்து காட்டுகிறோம். அப்போதுதான் உண்மையான பன்றி எப்படிக் கத்தும் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றான்.

சபையோருக்குக் குடியானவனுடைய பேச்சிலே அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ‘ஏதோ பைத்தியம் உளறுகிறது’ என்று நினைத்தார்கள். ஆயினும், “சரி, காளை பார்க்கலாம்” என்றார்கள்.

மறுநாள் அந்த மண்டபத்தில் எள் விழக்கூட இடமில்லை. மேடையில் முதலிலே கோமாளி வந்தான். அவன் வங்து நின்றதுமே சபையோர் அவனுக்குக் குதூகல வரவேற்பு அளித்து ஆரவாரம் செய்தனர். அவன் பன்றிபோல் கத்த ஆரம்பித்தான். “ஆஹா! எப்படிக் கத்துகிறான் பன்றி கூட இவனிடம் பிச்சை வாங்க வேண்டும்!” என்றார்கள் சிலர்.

“”அந்தக் குடியானவனுக்குப் பொறாமை அதிகம். இதைவிடத் திறமையாகச் செய்ய முடியுமா?” என்றார்கள் வேறு சிலர்.

கோமாளி கத்தி முடிந்ததும், குடியானவன் மேடைக்கு வந்தான். உடம்பைப் போர்வையால் போர்த்துக்கொண்டு, அவன் மேடையில் வந்து நின்றதும், எல்லோரும் கைகொட்டிக் கேலி செய்தார்கள். ஆனாலும், குடியானவன் கவலைப்படவில்லை. நன்றாகக் கீழே குனிந்து கொண்டான். மறுவிநாடி, ‘ஈக், பீக், ஈக், பீக்’ என்ற குரல் பலமாகக் கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டதும், சபையோர் ஏளனமாகச் சிரித்தார்கள். “”பன்றி இப்படியா கத்தும்? ஏமாற்றப் பார்க்கிறான்” என்றார்கள்.

“உள்ளே போ, உள்ளே போ” என்று கூச்ச லிட்டார்கள்.

குடியானவன் இந்தக் கூச்சலுக்கெல்லாம் பயந்து விடவில்லை. உள்ளே போகவும் இல்லை. திரும்பத் திரும்ப அதே மாதிரி சப்தம் கேட்கவே, சபையோர் ஒரேயடியாகக் கூச்சலிட்டனர்.

கடைசியாக, குடியானவன் மேலே போர்த்தியிருந்த போர்வையை எடுத்துக் கீழே எறிந்தான். அப்போது அவனுடைய கக்கத்திலே ஒரு சிறிய பன்றி இருந்தது. அந்தப் பன்றியைத் தூக்கி சடையோரிடம் காட்டினான்.

“சபையோரே, இவ்வளவு நேரமாகக் கத்தியது நானல்ல; இதோ இந்தப் பன்றிதான்! இதன் காதைப் பிடித்துத் திருகித் திருகித்தான், நான் இதைக் கத்தும்படி செய்தேன். இந்த உண்மைப் பன்றியைக் காட்டிலும், உங்களுடைய கோமாளி

என்பதை உணராமல், போலியையே உண்மை என்று சிலர் நம்பி விடுவார்கள். அப்படி மதி மயங்குவோருக்காகக் கூறப்பட்டதே இந்தக் கதை. இதைக் கூறியவர் யார் தெரியுமா? அவர்தாம் ஈசாப்.

ஈசாப் கதைகள் உலகப் புகழ் பெற்றவை. குழந்தைகள் முதல் ‘குடுகுடு’ கிழவர்கள் வரை எல்லோரும் படித்துச் சுவைக்கலாம். ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’, ‘சிங்கமும் சுண்டெலியும்’, ‘நரியும் திராட்சையும்’ போன்ற கதைகளை உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள குழந்தைகள் கூட அறிவார்கள். கிறிஸ்தவ வேதமான பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்கள் படித்து வருபவை ஈசாப் கதைகளே!

ஈசாப் முந்நூறுக்கு மேற்பட்ட கதைகளைக் கூறியிருக்கிறார். எல்லாம் குட்டிக் குட்டிக் கதைகளாகவே இருக்கும். நமது பஞ்சதந்திர கதைகளைப் போலவே பெரும்பாலான கதைகள் மிருகக் கதைகளாயிருக்கும்; அல்லது பறவைக் கதைகளாயிருக்கும். மேலே கடறப்பட்டது போல், சிறிது நீளமாகவும், மனிதர்களைப் பற்றியும் அவர் சொன்ன கதைகள் மிகவும் குறைவுதான்.

இப்போது பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் நாம் பல கதைகளைப் படிக்கிறோம். ஆனால், ஈசாப் காலத்தில் பத்திரிகையும் கிடையாது; புத்தகமும் கிடையாது. அவர் இந்தக் கதைகளை எதிலுமே எழுதி வைக்கவில்லை.

அவர் தெருவிலே போய்க்கொண்டிருப்பார். அப்போது இருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். உடனே, சண்டை போடாதபடி அவர்களைத் தடுப்பார். அங்கேயே அழகான குட்டிக் கதை ஒன்றையும் கூறுவார். கதையைக் கேட்டதும், சண்டை போட்ட இருவருடைய கோபமும் பறந்துவிடும்; சண்டை போட்டது தவறு என்று அவர்கள் உணருவார்கள்.

இதேபோல் அவர், கதைகளைக் கூறிக் கூறி, நாட்டில் கடந்த கலகங்கள், சண்டைகள் முதலியவற்றை யெல்லாம் அடக்கியிருக்கிறார். அரசர்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பல விரோதங்களைத் தீர்த்து வைத்திருக்கிறார். அவ்வப்போது அவர் கூறி வந்த கதைகளை அவர் காலத்தில் இருந்தவர்களும், பின்னால் வந்தவர்களும், வாய் மொழியாகக் கூறி வந்தார்கள்.

அவர் இந்தக் கதைகளை எந்த மொழியில் கூறினார். தமிழிலா? இல்லை. ஆங்கிலத்திலா? அதுவும் இல்லை. கிரேக்க மொழியில்தான் கூறி வந்தார்; ஆம், அவருடைய தாய்மொழி அதுதான். அவருடைய தாய்காடும் கிரேக்க நாடுதான்!

கிரேக்க நாட்டில், கிறிஸ்து பிறப்பதற்கு 260 ஆண்டுகளுக்கு முன்னர் ஈசாப் பிறந்தார் எனத் தெரிகிறது. ஆனால், அவர் கிரேக்க நாட்டில் எந்த ஊரில் பிறந்தார் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. கிரேக்க மகாகவி ஹோமரைப் போலவே, ஈசாப் பிறந்த ஊரும் இன்னும் ஆராய்ச்சிக்கு உரியதாகவே இருக்கிறது. எங்கள் ஊரில்தான் பிறந்தார். ‘எங்கள் ஊரில்தான் பிறந்தார்’ என்று இப்போது ஆறு ஊர்க்காரர்கள் பெருமையாகக் கூறி வருகிறார்கள். ஒருவர் எப்படி ஆறு ஊர்களிலும் பிறந்திருக்க முடியும்? சில ஆராய்ச்சியாளர்கள், ‘சாமோஸ்’ என்ற ஊரில் தான் ஈசாப் பிறந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஈசாப் ஆரம்பத்தில் ஓர் அடிமையாகவே இருந்தார். ஆயினும் அதிக காலம் அப்படி இருக்கவில்லை. அவரது கெட்டிக்காரத்தனத்தையும், குட்டிக் கதை சொல்லும் திறத்தையும் கண்டு அவருடைய எஜமானர் அவருக்கு விடுதலை அளித்து விட்டார்.

மனிதர்களுக்கு மனிதர்களைப் பற்றிய கதை களையே கூறினால், அவர்கள் கோபம் அடையலாம் அல்லவா? அதனால்தான் ஈசாப் மிருகங்களையும், பறவைகளையும் பாத்திரங்களாக வைத்தே பெரும் பாலான கதைகளைக் கூறி வந்தார். அவர் கூறிய கதைகளே ஈசாப் இறந்த முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 'பாப்ரியஸ்' என்ற கிரேக்க ஆசிரியர் ஒருவர் முதல் முதலாகத் தொகுத்து எழுதி வைத்தார். பிறகு லத்தீன், பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் இந்தக் கதைகளைக் கூறி வந்தார்கள்.

பிரெஞ்சிலிருந்து முதல்முதலாக ஆங்கிலத்தில் இந்தக் கதைகளை மொழி பெயர்த்து 1845-ஆம் ஆண்டில் புத்தகமாக வெளியிட்டார்கள். இங்கிலாந்தில் முதல்முதலாக அச்சு இயந்திரத்தை அமைத்த காக்ஸ்டன் என்பவரே அப்புத்தகத்தை அச்சிட்டவர் ! அதன் ஒரு பிரதி இப்போதுகூட பிரிட்டிஷ் மியூசியத்தில் கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறதாம் !

ஈசாப் சொன்ன கதைகளைத் தவிர, ஈசாப்பைப் பற்றிய கதைகள் பல உள்ளன. அவரது புத்தி நுட்பத்தையும், தெளிவான சிந்தனையையும், மக்களிடத்திலே அவர் கொண்டிருந்த மாசற்ற அன்பையும் விளக்கக் கூடியவை அந்தக் கதைகள்.

ஈசாப் அடிமையாயிருந்தபோது, அவருடைய எஜமானர் தம் நண்பர்களிடம் ஒரு பந்தயம் கட்டினார். "சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் நான் ஒரே நாளில் குடித்துப் பொட்டலாக்கி விடுவேன். அப்படிச் செய்யாவிடில், என் சொத்து முழுவதும் உங்களுக்குச் சொந்தம்” என்று குடிவெறியில் கூறிவிட்டார்.

ஆனால், மயக்கம் தெளிந்ததும், தாம் கூறியது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தார். “இப்போது என்ன செய்வது ?” என்று அடிமையாயிருந்த ஈசாப்பைக் கேட்டார்.

ஈசாப் ஒரு நல்ல யோசனை கூறினர். அதன்படி சமுத்திரத்திலுள்ள நீரைக் குடிக்க எஜமானர் ஈசாப்புடன் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றார்கள்.

சமுத்திரக் கரைக்குப் போனதும், ஈசாப் அங்கு நின்றவர்களைப் பார்த்து, “பெரியோர்களே, எங்கள் எஜமானர் சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் குடிக்கத் தயார்தான். அவர் சமுத்திரத்திலுள்ள நீரைமட்டுமே குடிப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது பல ஆறுகளிலிருந்தும் நீர் வந்து சமுத்திரத்தில் விழுந்து கொண்டே இருக்கின்றதே! குடிக்கக் குடிக்கத் தண்ணீர் வந்து விழுந்து கொண்டே இருந்தால், எப்படிக் குடித்துப் பொட்டலாக்குவது? ஆகையால் முதலில் ஆற்று நீர் சமுத்திரத்தில் விழாதபடி, எல்லா ஆறுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். நிறுத்தியவுடனே, என் எஜமானர் சொன்னபடி செய்து காட்டுவார்” என்றார்.

உடனே வேடிக்கை பார்க்க அங்கு வந்திருந்தவர்கள், “ஆமாம், ஆமாம். அதுதான் சரி” என்றார்கள்.

பந்தயம் போட்டவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வெட்கத்துடன் திரும்பி விட்டனர்.

இப்படி அவர் பல சந்தர்ப்பங்களில் எஜமானரைக் காப்பாற்றியிருக்கிறார். அதனால்தான் அவருக்கு விரைவில் விடுதலை கிடைத்தது.

அவர் அடிமையாக இருந்தபோது மற்றொரு நிகழ்ச்சி நடந்தது.

ஒருநாள் அவருடைய எஜமானர் வெளியூருக்குப் புறப்பட்டார். சாமான்களைத் துாக்கி வருவதற்காகத் தம்முடன் சில அடிமைகளையும் அவர் அழைத்துச் செல்வது வழக்கம்.

அன்று எடுத்துச் செல்ல வேண்டிய சாமான்களை ஈசாப் ஒருமுறை பார்த்தார். பிறகு, மற்ற அடிமைகளைப் பார்த்து, “எனக்கு அதிக கனமில்லாத சுமையைத் தரவேண்டும்” என்று கேட்டார்.

ஈசாப்பிடம் மற்ற அடிமைகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. ஆகையால் “சரி, உனக்கு வேண்டிய சாமானை எடுத்துக் கொள்” என்றார்கள்.

உடனே ஈசாப் அங்கிருந்த பெரிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டார். அந்தக் கூடை நிறைய ரொட்டிகள் இருந்தன. அவ்வளவு பெரிய கூடையை ஈசாப் தூக்கிக் கொண்டதும், மற்ற அடிமைகள் சிரித்தார்கள்.

“என்னப்பா இது ! கனமில்லாத சுமையாக வேண்டுமென்று கேட்டாய். இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று கேட்டார்கள்.

ஈசாப் அப்போது எதுவும் கூறவில்லை.

ஆனால், ஈசாப் முட்டாளல்ல என்பதை அவருடைய நண்பர்கள் வெகு சீக்கிரத்திலே தெரிந்து கொண்டார்கள். ஈசாப் வைத்திருந்த கூடையிலிருந்த ரொட்டிகளை வேளா வேளைக்கு அவர்கள் எடுத்துத் தின்று வந்ததால், கனம் குறைந்து கொண்டே வந்தது. செல்ல வேண்டிய ஊரை நெருங்கும் போது ஈசாப் வெறும் கூடையுடன் ஆனந்தமாக கடந்து சென்றார், ஆனால் மற்ற வர்கள் அப்படிச் செல்லவில்லை. போகப் போக, சுமையைத் தூக்க முடியாமல் அவர்கள் அயர்ந்து விட்டார்கள்,

அப்போதுதான் மற்றவர்களுக்கு ஈசாப்பின் புத்திசாலித்தனம் தெரிந்தது!

ஈசாப் இருந்த ஊரின் நடுவே ஒரு குளம் இருந்தது. எல்லோரும் அதில்தான் குளிப்பார்கள்.

ஒருநாள் ஈசாப்பின் எஜமானர், ஈசாப்பை அழைத்து, “நான் குளிக்க வேண்டும். குளத்திலே கூட்டம் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்து வா” என்று உத்தரவிட்டார். -

ஈசாப் உடனே சென்று பார்த்தார். அந்தக் குளத்திற்குச் செல்லும் வழியிலே குறுக்காக ஒரு பெரிய கல் கிடங்தது, குளிக்கச் சென்றவர்களில் சிலர் அதைத் தாண்டிக் கொண்டு சென்றார்கள்; சிலர் கல் தடுக்கிக் கீழே விழுந்து, பிறகு எழுந்து சென்றார்கள். ஆனால், ஒருவர்கூட அதை அப்புறப் படுத்தவில்லை. -

ஈசாப் இந்தக் காட்சியைச் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு வந்த தார் ஒருவர். அவர் அந்தக் கல்லைத் துக்கி ஒரமா கப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார்.

ஈசாப் உடனே தம் எஜமானரிடம் சென்று, "குளத்தில் ஒரே ஒரு மனிதர்தான் குளித்துக் கொண்டிருக்கிறார்" என்று சொன்னார்.

"சரி, நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்” என்று கூறி, எஜமானர் புறப்பட்டார்.

குளத்தங்கரைக்குச் சென்றதும், அங்கு ஏராளமானவர்கள் குளித்துக் கொண்டிருப்பதை எஜமானர் கண்டார். உடனே அவருக்கு ஈசாப்பின் மீது கோபம் கோபமாக வந்தது. வேகமாக வீட்டுக்குத் திரும்பினார். "ஏ ஈசாப், உனக்கு என்ன, கண் பொட்டையா ? குளத்தில் எத்தனை பேர் குளிக்கிறார்கள் ? ஒரே ஒருவர்தான் குளிக்கிறார் என்றாயே!” என்று சீறினர்.

"ஆமாம் எஜமானரே. அவர் ஒருவர்தான் மனிதர் : வழியிலே கிடந்த கல்லை. அப்புறப் படுத்தி, மற்றவர்களை விழாமல் காப்பாற்றிய அவர் ஒருவர்தான் மனிதர்"என்றார் ஈசாப்.

தடுக்கி விழ வைக்கும் கல்லைக் கண்டும், பேசாமல் சென்று குளித்துக் கொண்டிருந்தார்களே, அவர்களை மனிதர்கள் என்று சொல்ல விரும்பவில்லை ஈசாப் ! இதையறிந்த எஜமானர் ஈசாப்பின் உயர்ந்த எண்ணத்தை மிகவும் பாராட்டினார். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு ஈசாப்பிடம் அதிக மரியாதை உண்டு. அவர்கள் தங்களது சபைகளுக்கு ஈசாப்பை சகல மரியாதைகளுடன் வரவேற்று உபசரிப்பார்கள். ஈசாப் மக்களுக்குள்ள குறைகளை அரசர்களிடம் கூறுவார். மக்களுக்காக அரசர்களுடன் வாதாடுவார். அவரது முயற்சியால் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன.

மக்களின் நலம் கருதி வாழ்ந்த ஈசாப்பிற்கு, கடைசியில் மக்களாலேயே மரணம் ஏற்பட்டது என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கைச் சரிதம் நமக்கு அப்படித்தான் கூறுகிறது.

ஒரு சமயம் டெல்பி என்ற இடத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தைப் போக்க, மக்களுக்கு நிறையத் தங்கம் கொடுக்கலாம் என்று நினைத்தான் கிரோசஸ் என்ற அரசன்.

உடனே அவன் ஈசாப்பை அழைத்து வரச் செய்தான். அவரிடம் ஏராளமான தங்கக் காசுகளைக் கொடுத்தான். அவற்றைப் பஞ்சத்தால் அவதிப்படும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கச் சொன்னான்.

ஈசாப் தங்கக் காசுகளுடன் அந்தப் பிரதேசத்திற்குச் சென்றார். அரசனின் விருப்பப்படி அவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க முயன்றார். ஆனால், சில பேராசைக்காரர்கள் எல்லாவற்றையும் தங்களிடமே கொடுத்து விடும்படி நிர்ப்பந்தப்படுத்தினார்கள். ஈசாப் எவ்வளவோ சமாதானம் கூறிப் பார்த்தார்; அவர்கள் கேட்கவில்லை. ‘பொன் முட்டையிடும் வாத்து’ கதையைக் கூட அப்போதுதான் கூறினாராம். என்ன சொல்லியும், அவர்கள் இணங்கவில்லை. கலகம் செய்யத் தொடங்கினர்கள்.

வேறு வழியின்றி, ஈசாப் தங்கக் காசுகளை அந்த அரசனுக்கே திருப்பி அனுப்பி விட்டார். இதனால், கோபம் கொண்ட அந்தப் பேராசைக்காரர்கள் ஈசாப்பைப் பிடித்துச் செங்குத்தான ஒரு மலைக்குக் கொண்டு சென்றார்கள். மலையின் உச்சியிலிருந்து அவரைக் கீழே உருட்டி விட்டார்கள் அந்தப் பாவிகள்! உலகத்துக்காக உழைத்த உத்தமரின் உயிர் பிரிந்து விட்டது !

ஈசாப்பின் கருத்துக்கள் சாகா வரம் பெற்றவை. அவரது கதைகள் இக்காலத்துக்கு மட்டுமல்ல; எக்காலத்துக்கும் பயன் தரக் கூடியவை.