கால்டுவெல் ஒப்பிலக்கணம்/027-033

கிரியர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



க. திராவிடப் பெருங்குழு


இந்கியப் பெருநாட்டிலுள்ள மக்கட் டொகுதியை ஆராய்ச்சிமுறையில் வகுத்து, இனம் பிரித்துப் பொது வியல்பு சிறப்பியல்புகளை வரையறை செய்ய முயன்ற ஆராய்ச்சி யறிஞர்கள் அஃது எழுவகைத்தாய குழுஉக்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும் என்று முடிவுகட்டினர். அவை வருமாறு:—

(1) துருக்க-ஐரானியர் (2) இங்கிய-ஆரியர் (3) சித்தியக் திராவிடர் (4) ஆரியத் திராவிடர் அல்லது இந்துஸ்தானி (5) மங்கோலியத் திராவிடர் அல்லது வங்காளி (6) மங்கோலாய்ட் (7) திராவிடர்.[1]

இவ்வேழனுள் இறுதியவராயுள்ள திராவிடர் என்ற குழுவினர் ஒரு காலத்தில் இலங்கைத்தீவு தொட்டுக் கங்கையாற்று வெளிகள் வரையிற் பரவி வாழ்ந்துவந்திருந்தனர் என்று பொதுவாகத் தெரிகிறது. சிறப்பாகச் சென்னை மண்டிலத்திலும், ஐதராபாத் பகுதியிலும், மத்திய மண்டிலங்ளிலும்[2], சோட்டாநாகபுரியிலும் [3] அவர்கள் பெருந்தொகுதியினராக நிறைந்து வாழ்ந்திருந்தார்கள் என்று அறியக் கிடக்கின்றது. இப்பெருங் குழுவினரின் குழுஉச் சிறப்பியல்புகளை இக்காலத்தில் மலையாள நாட்டிலுள்ள பணியர்[4]களிடத்திலும், சோட்டாகாகபுரியிலுள்ள சந்தாளர்களிடத்திலுங் [5] காணலாம். திராவிடக் குழுவினர் உயரத்திற் குறைந்த உருவினர்களே ; ஏனைய இனத்தினரை நோக்க இவர்களைக் குள்ளர்கள் என்றே கூறலாம். நிறமோ திர்ந்த கறுப்பில்லா விட்டாலும் கறுப்பென்றுதான் கூறல்வேண்டும். இவர்களுடைய தலைமயிர் கறுத்துச் செழித்துவளர்ந்து சுருளும் பண்புடையது. கரிய கண்கள் ; நீண்ட தலை ; மூக்கோ முனையகன்றும், அடிப்பகுதி சிறுபான்மை எடுப்பில்லாது தட்டையாகவும் இருக்கும் ; முன்னங்கைகள் சற்று நீண்டனவாகவே யிருக்கும்.

இந்தியாவிலுள்ள மற்றெக் குழுவினரையும் நோக்க, இக்குழுவினரே தொன்மை மிகுந்த பழங்குடிகள் என்று அறியக் கிடக்கின்றது. நிலநூலார்[6] மிகவுந் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறும் மலைப்பகுதிகளிலும், மேடான நிலப்பகுதிகளிலும், மற்றும் விந்தியமலை முதல் கன்னியாகுமரி வரையிற் பரந்து கிடக்கும் நிலப்பகுதியிற் பற்பல விடங்களிலும் இக் குழுவினர் காணப்படுகின்றனர். தென்னிந்தியாவின் கீழ்க்கரை மேற்கரையாகிய இருகரைகளிலும் தொடர்ந்து வளர்ந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி, மேற்குக் தொடர்ச்சியென்ற மலைகள் இாண்டிலும் வாழ்வோரெல்லாம் திராவிடர்களே , அவ்வாறே வடக்கே அராவலி மலைகளிலும், [7] இராஜமஹால் [8] மலைநாடுகளிலும் வாழ்வோரும் திராவிடர்களேயாவர். இடையிடை நேர்ந்த ஆரியர்கலப்பினுலும், மங்கோலியர்கலப்பினுலும், இக் குழுவினர் தம் குழுச் சிறப்பியல்புகளிற் பலவற்றை இக்காலை யிழந்திருக் கின்றனர்; எனினும் ஆராயப்புகுவோரால் எளிதில் வேறு பிரித்துக் காணக்கூடிய சிறப்பியல்புகள் வாய்ந்தவர்களாகவே இன்னும் இருக்கின்றனர்.

திராவிடர்கள் என்றால் உழைப்பாளிகள் அல்லது தொழிலாளிகள் என்றே பொருள் கொள்ளலாம் ; என்ன ? மெய் வருந்திப் பாடுபட்டுப் பொருளீட்டி, வாழ்வது அவர்களுக்கே சிறப்பாக உரித்தாகலின். வடகோடியிலுள்ள அஸ்ஸாம்[9] நாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் மாக்களைப் போல் உழைக்க வேண்டுமானலுஞ் சரி ; வங்காளத்தைச் சேர்ந்த சதுப்பு நிலங்களில் [10] மாடுபோலுழைத்துச் சாகுபடி செய்ய வேண்டுமானலுஞ் சரி ; கல்கத்தா, இரங்கோன், சிங்கப்பூர் போன்ற தலைநகரங்களில் தெருப்பெருக்கிக்[11] குப்பை கொட்ட வேண்டுமானலுஞ்சரி; மற்றித்தகைய உடல் வருத்தும் கீழ்த்தாமான வேலைகள் எவையாயினுஞ்சரியே, அவற்றிற் கெல்லாம் ஈடுகொடுத்துப் பாடுபடுபவர்கள் திராவிடர்களே. கரிய நிறம் வாய்ந்து, திண்ணிய உடற்கட்டுடனும், தட்டையா யகன்று நீக்ரோவர்தம் [12] மூக்குகளை யொத்த மூக்குகளோடுங் காணப்பட்டு மெய்வருந்திப் பாடுபடுவதே தொழிலாகக் கொண்டு வந்திருந்தவர்களெல்லாம் திராவிடர்களே என்று எளிதிற் கூறிவிடலாம்.

குழுவரையறை துணிதலியலாது

குழுவின ஆராய்ச்சியையே அடிப்படையாகக் கொண்டு மேற்பிரித்துக் காட்டியவாறு ஏழு இனத்தினராகவோ அதற்குக் கூடுதற்குறைவான தொகையுள்ள இனத்தினராகவோ பிரித்தும், இந்தியம் பெருநாட்டின் இன்னின்ன பகுதிகளில் இன்னின்ன இனத்தார்தான் வாழ்ந்துவந்தனர் என்று வரையறுத்துங் கூறுதல் என்பது இயலாது. சென்னைப் பகுதியிலுள்ளவர்களெல்லாம் திராவிடர்களென்ருே, அன்றி, வங்காளத்திலுள்ளவர்க ளெல்லாம் மங்கோலியத் திராவிடர்களென்றே நூல் பிடித்ததுபோல் வகுத்துக் கூறிவிடத்துணிதல் அறியாமையேயாகும். பண்டு தொட்டே இந்திய நாட்டின் வடபகுதியிலிருப்போர் தென்பகுதிக்கும், மேலைப் பகுதியிலுள்ளோர் கீழைப்பகுதிக்கும் சென்று குடியேறியமை வரலாற்றுண்மையாகும். இவ்வாறு இடம் பெயர்ந்து சென்றோர் வணிகர்களாகவோ, விறல் மன்னர்களாகவோ, நிலக்கிழவர்களாகவோ, இன்றேல், பூசாரிகளாகவோ குடிபுகுந்துறைந்து தம் குழுஉச் சிறப்புகளில் தலையாயவற்றை வழுவ விடாமற் காத்துப் பெருமையாகவும், இயன்றவரையில் தனியாகவுமே வாழ்ந்துவர முயன்றுவந்துளர். எனினும், ஆங்காங்கு ஒருசிலர் தம் குழுஉச்சிறப்பியல்புகளை அறவேயொழித்து, குடியேறிய நாட்டினரோடு பல்லாற்றானும் ஒற்றுமைப்பட்டு வாழ்ந்துவந்திருத்தலுங் கூடும். ஆகவே, மேற்கண்ட பிரிவுவகை ஆராய்ச்சிக்கருவியாகக் கொண்ட பொதுப்படையான அளவு கோலேயாகும்.

  1. 1. Turko-Iranian, Indo-Aryan, Scytho-Dravidian, Aryo-Dravidian or Hindustani, Mongolo-Dravidian or Bengali, Mongoloid, Dravidian.
  2. 2. Central Provinces.
  3. 3. Chota-Nagpur.
  4. 4. Paniyans.
  5. 5. Santals,
  6. 1. Geologists.
  7. 2. •Aravallis.
  8. 3. Rajmahal.
  9. Assam.
  10. Swamps.
  11. Scavenging.
  12. Negroes