குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/8 முதல் 9 வயது குழந்தைகளுக்கு


6. 8 முதல் 9 வயது குழந்தைகளுக்கு

1. இயற்கையான இயக்கங்கள் (Free Movements)

1.1. தாண்டும் பயிற்சிகள் (Jumps)

காக்கை தாண்டல் : முழங்கால்களில் கைகளை வைத்துக்கொண்டு, தாண்டித் தாண்டிச் செல்லுதல்.

தவளைத் தாண்டல் : தரையில் கைகளை ஊன்றி, தத்தித் தத்தித் தாண்டிச் செல்லுதல்.

நின்று கொண்டிருந்து, பிறகு முன்புறமாகக் குனிந்து, தாவுதல்.

நின்ற நிலையிலிருந்து, முன்புறமாகத் தாண்டிக் குதித்தல்.

உயரமாக ஒரு பொருளைத் தொங்கவிட்டு, அதைத் துள்ளித் துள்ளித் தாண்டி தொடவிடுதல்.

சி 4

1 அடி உயரத்தில் கயிறை அல்லது குச்சியைப் பிடிக்கச் செய்து, ஒருவர் ஒருவராக ஓடி வந்து தாண்டுதல். (முன்புறமாக ஓடி வந்து)

1 அடி உயரத்தில் கயிறு பிடிக்கச் செய்து, பக்கவாட்டில் ஓடி வந்து தாண்டுதல்.

3 தப்படிகள் ஓடி வந்து, பிறகுத் தாவிக் குதித்து, குனிந்து உட்காருதல்.

கயிறு தாண்டிக் குதிப்பது போல, (Skipping) கைகளை சுழற்றித் தாண்டல்.

கம்பளிப் பூச்சி நடப்பது போல, முன்புறமாகக் கைகளை ஊன்றி, முழங்காலில் நின்று, கைகள் இருக்குமிடத்தில் கால்கள் வந்த பிறகு, கைகளை முன்புறமாக நகர்த்தி நடத்தல்.

கரடி நடப்பது போல நடத்தல்.

நண்டு நடப்பது போல நடத்தல்.

1.2. பிடித்தல், எறிதல், உதைத்தல், தூக்குதல் போன்ற பயிற்சிகள்.

பந்தைத் தூக்கி உயரே எறிதல், உயரத்திலிருந்து வருவதைப் பிடித்தல்.

பந்தைத் தரையில் துள்ளவிட்டு, மேலே வரும் போது பிடித்தல். பந்தைத் தட்டித் துள்ளவிட்டு, மேலே வந்ததும், மீண்டும் தட்டுதல்.

பந்தைக் கையால் குத்தி, மேலே போகச் செய்தல்.

பந்தைத் தரையில் வேகமாக மோதி, அது மேலே போய் வரும் போது, தாவிப் பிடித்தல்.

பந்தை கையால் குத்தி மேலே போகவிட்டு, பிறகு பந்து கிழே விழுந்து, தரையில் மோதி மேலே எழும்போது பிடித்தல்.

ஒருவர் எறிகிற பந்தை, ஒரு கையால் பிடித்தல், முதலில் வலது கையால் பிடித்தல், பிறகு, இடது கையால் பிடித்தல்.

தூரமாக நிற்கிற ஒருவருக்குப் பந்தைத் தூக்கி எறிதல்.

அவ்வாறு மற்றவர் தனக்கு எறிகிற பந்தைப் பிடித்தல்.

பலூன் போல கனமில்லாத பந்தைக் காலால் உதைத்தல்.

பலூன் பந்தை, தலையில் மோதித் தள்ளுதல்.

2. தாள லயப் பயிற்சிகள் (Rhythmic Exercises)

தாளலயப் பயிற்சிகளும், செயல் முறைகளும், நல்ல நெகிழ்ச்சி நிறைந்த உடலமைப்பை வளர்த்து விடுகின்றன. சமநிலையான (Balance) இயக்கமும், அந்த ஒவ்வொரு இயக்கத்திலும் அழகும், லயமான அமைப்பும், இதமான தோற்றச் செழிப்பும் உள்ளதாக உடலை மெருகேற்றி விடுகிறது.

தாளலயப் பயிற்சிகளில் கிராமிய நடனமும் (folk dance) ஒன்று.

சிறுமிகள் கிராமிய நடனத்தில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமானதாகும்.

அவர்கள் வாழ்கிற நாட்டில் உலவுகிற ஒரு கிராமிய நடனமும், மற்றும் தேசிய அளவில் ஒரு நாட்டின் கிராமிய நடனமும் கற்றுக் கொள்கிற வாய்ப்பை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

2.1. தமிழ்நாட்டு கிராமிய நடனங்கள் (Folk dance)

1. ஒயில் ஆட்டம்.

2. கும்மி.

3. கோலாட்டம்

கிராமிய நடனங்கள் இடத்துக்கு இடம் வேறுபட்டு விளங்குவதால், அந்தந்த வட்டாரப்பகுதியில் உள்ள ஆசிரியப் பெருமக்கள், அங்கே பழகுகிறவற்றைப் பயிற்றுவிக்கவும்.

3. பாவனைகள்: போலிக் குரலெழுப்புதல், கதை நாடகங்கள் 3.1 பாவனைகள் (Imitations):

6 முதல் 8 வயதுக் காரர்களுக்கு கற்பித்த - யானை, தவளை, முயல், சிங்கம், ரயில், மோட்டார் கார், துணி துவைப்போர், ரிக்ஷாக்காரன், போன்ற பாவனைகளை மீண்டும் கற்பித்திட வேண்டும்.

பிச்சைக்காரன், வயதான கிழவன் கிழவி; சிப்பாய் அல்லது இராணுவ வீரன்; டாக்டர் போன்றவர்களின் நடை உடை பாவனைகள்;

எருமை, குரங்கு, படகு தள்ளுதல் போன்று பாவனைகளைக் கற்பிக்கவும்.

3.2. போலிக்குரல் எழுப்புதல் (Mimetics)

குதிரை கனைத்தல், நாய் குரைத்தல், பூனைக் கத்தல், வாத்துச்சத்தம், கரடிக் கத்தல், யானை பிளிறல், குதிரை வண்டி ஒடும் சத்தம், மாதா கோயில் மணி அடித்தல், வீதியில் விலை கூறி விற்பவர் போல குரல் எழுப்புவதை நினைவுகொள்க.

இனி, புதிய போலிக் குரல்களையும் போதிக்கவும். பறவைகள் போல; கரடி, ஒட்டகம், ஆட்டுக்குட்டி, சிங்கம், மாவரைக்கும் எந்திரம், பஸ், மோட்டாள் காள், போன்றவையின் ஒலியை பிரதிபலிக்கும் போலிக் குரல்களைப் பயிற்றுவிக்கவும்.

3.3. கதை நாடகங்கள் (Story-plays)

முன்னர் கற்பித்த கதை நாடகங்களைக் கவனத்திற்குக் கொண்டு வந்து, பிறகு புதிய கதை நாடகங்களைக் கற்றுத் தரவும்.

முதலையும் குரங்கும் (Monkey and crocodile)

நரியும் கொக்கும் (Fox and crane)

எலியும் தவளையும் (Frog and Rat)

சிங்கமும் சுண்டெலியும் (Lion and mice)

குறிப்பு : ஆசிரியர் எளில் நவராஜ் செல்லையா எழுதிய தெய்வமலர் எனும் கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளையும் பின்பற்றிக் கொள்ளலாம்.

4. சிறுபரப்பு விளையாட்டுக்கள் (Small area games)

4.1. சிரிப்பூட்டும் சிலை (Comic Tag)

விளையாட வந்திருக்கும் மாணவ மாணவிகளில், ஒரு வரை , விரட்டித் தொடுபவராக (it) தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

அவர் மற்றவர்களின் முன்னே வந்து நின்று, சிரிப்பூட்டுகின்ற பாவனை ஒன்றை செய்து காட்ட வேண்டும் (உதாரணம்): வாயைப் பிளந்து, நாக்கை வெளியே நீட்டி, கைகளை ஒரு புறமாக ஒதுக்கி நின்று, பார்ப்பவருக்கு சிரிப்பு ஏற்படுத்தும்படியான ஒரு பாவனையைக் காட்டுதல்.

ஆசிரியர் விசில் மூலம் சைகை கொடுத்தவுடன் எல்லா மாணவர்களும் முன்பு காட்டிய பாவனையுடன் சிலை போல நிற்க வேண்டும். சிலைபோல் நிற்க இயலாமல் தடுமாறுகிறவராகப் பார்த்து, பாவனை காட்டியவர் தொட முயல்வார்.

அவ்வாறு யார் தொடப்படுகிறாரோ, அவரே அடுத்த தொடுபவராக மாற வேண்டும். அவர் ஒரு புதிய பாவனையைக் காட்டிட, மற்றவர்கள் பின்பற்ற, அவர் தொட முயல, ஆட்டம் இப்படியே தொடரும்.

4.2. நிழலாட்டம் (Shadow Tag)

நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும்போது தான் இந்த ஆட்டத்தை ஆட வேண்டும்.

ஆட்டக்காரர்களில் ശെഖബ. விரட்டித் தொடுபவராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டம் தொடங்குகிறது. விரட்டித் தொடுபவர், இதில் ஆளை ஒடிப் போய் தொடக்கூடாது.

ஓடுபவர்களின் நிழலைத்தான் விரட்டி மிதிக்க வேண்டும். தப்பி ஓடுபவர்களில், யாருடைய நிழல் 'அவரால்' மிதிக்கப்படுகிறதோ, அவரே அடுத்த விரட்டுபவராக மாற, ஆட்டம் மீண்டும் தொடரும்.

தப்பி ஒடுவோர்கள் நிழல் எங்கு, எவ்வளவு தூரம் விழுகிறது என்பதை அறிந்து கொண்டு, உடலை முறுக்கி, வளைத்து, குனிந்து நிழலைக் குறைத்தும் மாற்றியும் ஆடினால், ஆடுவோருக்கும் காண்பவருக்கும் ஆட்டம் கவர்ச்சியாகத் தோன்றும்.

4.3. தொடு பார்க்கலாம் (Object tag)

விளையாட வந்திருப்பவர்களில் ஒருவரை 'அவராகத்' (it) தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.

விரட்டித் தொடுபவர் தொட வந்தால் ஏதாவது ஒரு பொருளைத் தொட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்பதாகத் தீர்மானித்து, முதலிலேயே மாணவர்களுக்குச் சொல்லி விட வேண்டும்.

ஆசிரியரின் விசில் ஒலிக்குப்பிறகு, குழந்தைகளை விரட்டித் தொடுபவர் தொட முயற்சிப்பார். அவரிடம் தொடப்படாமல் இருப்பதற்காக குழந்தைகளும் ஒடுவாள்கள்.

இனி வேகமாகவும் ஓட முடியாது. தொடுபவரிடம் தப்பிக்கவும் முடியாது என்ற நிலை வருகிற போது, முன்னர் கூறிய பொருள் ஒன்றைத் தொட்டுக் கொண்டு நின்றால், தொடுபவர் தொடாமல் விட்டுவிடுவார். ஓடியவரும் தப்பித்துக்கொள்வார்.

தப்பி ஓட முடியாமலும், பொருளைத் தொடாமலும் இருப்பவர் தொடப்பட அவர் அடுத்த விரட்டுபவராக மாற, ஆட்டம் தொடரும்.

4.4. தலைவரைக் காப்பாற்று (Save the Leader)

விளையாட வந்திருப்பவர்களில் ஒருவரைத் தலைவராகவும், அவருக்குத் தொண்டர்களாக 4 பேர்களையும், முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆட்டம் தொடங்கிய உடனே, மீதியுள்ள மற்ற ஆட்டக்காரர்கள் எல்லோரும், தலைவரை விரட்டித் தொட முயல வேண்டும்.

தன்னை யாரும் தொட்டு விடாமல் இருப்பதற்காக, தலைவர் ஆடுகளம் முழுவதுமாக ஓடுவார். அவரைக் காப்பாற்ற, மற்ற நான்கு தொண்டர்களும் ஓடுவார்கள்.

இனி ஓட முடியாது என்று களைத்துப்போன தலைவர், என்னைக் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுக் கத்தியவுடன், நான்கு தொண்டர்களும் ஓடி வந்து, அவரைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு, தொட வருகிற மற்றவர்களைத் தூரமாகத் தள்ளிவிட்டு, தங்கள் தலைவரை யாரும் தொடமுடியாதபடி, தடுப்பார்கள்.

இனி தடுக்க முடியாது என்ற நிலை வந்தவுடன், தலைவரும் தொடப்படுவார் என்ற கட்டம் ஏற்பட்டவுடன், தலைவர் தன் தலை மீது கை வைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து விட வேண்டும். அப்பொழுது யார் தொட்டாலும் தலைவர் அவுட் ஆகமாட்டார்.

இவ்வாறு இரண்டுமுறை, தலை மீது கை வைத்துக்கொண்டு தலைவர் உட்கார்ந்து கொண்டு தப்பித்து விடலாம்.

மூன்றாவது முறை, இப்படி தலை மீது கை வைத்துத் தப்பிக்க முயல்கிற பொழுது, அவர் ஆட்டம் இழந்து விடுகிறார்.

பிறகு புதிய தலைவரையும், புதிய தொண்டர்களையும் தேர்ந்தெடுத்தவுடன், ஆட்டம் மீண்டும் தொடரும்.

4.5 பூனையும் எலியும் (Blind cat and blind rat)

விளையாட வந்திருப்பவர்களில் ஒருவரை பூனையாகவும், இன்னொருவரை எலியாகவும், தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்ற விளையாட்டுக்காரர்களை கைகோர்த்துக் கொண்டு வட்டமாக நிற்கச் செய்த பிறகு, பூனையின் கண்களையும், எலியின் கண்களையும் கர்ச்சீப்பால் கட்டி விட்டு, எலியை வட்டத்திற்குள்ளும், பூனையை வட்டத்திற்கு வெளியிலும் நிற்கச் செய்த பிறகு, ஆட்டம் தொடருகிறது.

இப்போது, குருட்டுப் பூனை, குருட்டு எலியைப் பிடிக்க வேண்டும்.

எலியாக இருப்பவர், தன் இருப்பிடத்தைக் குறிப்பதற்காக, ஏதாவது சத்தம் செய்யலாம். பூனையானவள், அந்த சத்தத்தைக் கேட்டு எலியைப் போய் பிடிக்க வேண்டும்.

எலியைப் பிடித்தால் பூனை வென்றது. இல்லையென்றால் பூனை தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பிறகு, வேறு இருவர் தோந்தெடுக்கப்பட, விளையாட்டு மீண்டும் தொடரும்.

5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)

முன்னர் கற்றுத்தந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளைத் தொடர்ந்து, பின்வரும் பயிற்சிகளைப் போதிக்கவும்.

5.1 முயல் குதிப்பது போல, குதித்து நிற்கும் பாவனை.

முயல் போல சரியாகக் குதித்து நின்று உட்காருதல் (Sitting);

அப்படியே எழுந்து நிற்றல் (Standing)

முன்புறமாக வளைந்து கொள்ளுதல் (Folding)

அப்படியே முன்புறமாக கைகளை நீட்டிவிடுதல். (Stretching)

5.2 இரண்டு கால்களையும் அகலமாக விரித்து வைத்து, முதலில் நிற்க வேண்டும்.

விசில் அடித்தவுடன், அகலமாக இருந்தபடியே, அப்படியே முன்புறமாகக் குதித்து, அசையாமல் உட்காரவும். பிறகு எழுந்து நின்று, மீண்டும் முன்புறமாகக் குதித்து உட்காரவும்.

முடிந்தால், பின்புறமாகக் குதித்து வந்து உட்காரவும்.

5.3. முன்புறக் குட்டிக் கரணம் (Forward Roll)

a. படத்தில் உள்ளது போல முதலில் உட்காரவும்.

b. கைகளை தரையில் ஊன்றி, அவற்றின் நடுவில் தலையை ஊன்ற வேண்டும்.

C. உடலை முன்புறமாகத் தள்ளி, முதுகுப்புறம் தரையில் படுவது போல, விழவும். (தலை தரையில் படக் கூடாது)

d. குட்டிக்கரணம் அடித்து மேலே வரும் பொழுது, இரண்டு கைகளாலும், கணுக்கால்களை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளவும்.

e. சரியான சமநிலைக்கு வருகிற வரையில், காலைப் பிடித்திருக்கும் இறுக்கத்தை விடாமல், பிடித்திருக்க வேண்டும்.

குறிப்பு: கால்களை அகலமாக வைத்திருப்பதுடன், குதிகால்கள் பின்புறப்பகுதிக்கு (Buttocks) பக்கமாக இருப்பது போல் வைத்துக்கொள்ளவும்.


5.4 பின்புறக் குட்டிக்கரணம் (Backward Roll)

படம் பார்த்து செய்யவும்

a. முதலில் விறைப்பாக, நிமிர்ந்து நிற்க வேண்டும்.

b. உட்கார்ந்து, குதிகால்களின் பக்கத்தில் கைகள் இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும்.

C. உள்ளங்கை மேற்புறமாக வந்து, வேகமாகக் கைகளை, தலைக்குப் பின்புறமாக உள்ள தரையில் ஊன்ற வேண்டும்.

d. பின்புறக் குட்டிக்கரணம் அடிக்கிறபோது, முழங்கால்கள் மார்புக்கு அருகில் வருவது போல் வைத்துக் கொள்ள வேண்டும்.

Є. இப்போது, உடலின் எடையானது கைகளுக்கு வரும். அப்பொழுது கழுத்துப் பகுதிக்கு உடல் எடையின் சுமை விழாதவாறு, வேகமாக வந்துவிட வேண்டும்.

5.5. வண்டிச் சக்கரக் கரணம் (Cart wheel)

a. சிறிதளவு தூரத்திலிருந்து ஓடி வந்து, பக்க வாட்டிற்குத் திரும்பிக் கொள்ள வேண்டும்.

b. பிறகு, உள்ளங்கையால் தரையில் ஊன்ற, போதிய இடைவெளி கைகளுக்கு இருப்பது போல் ஊன்ற வேண்டும்.


c. d. கால்களை, வண்டிச்சக்கரத்தின் உள் ஆரங்கள் சுழல்வது போல, சுழற்றிக்கொண்டு வரவும்.

e. நேராக நோக்கோட்டில் போவது போல சுழன்று வந்து பிறகு நிமிர்ந்து நிற்கவும்.

6. தனிப்போர் விளையாட்டுக்கள் (3556ii(Simple Combatives)

6-8 வயது குழந்தைகளுக்கு கற்றுத்தந்ததை மீண்டும் செய்திட வைத்து, உற்சாகப்படுத்தவும்

புதிய தனிப் போர்களை இனி, கற்றுத் தரவும்.

6.1. வாத்துச் சண்டை (Drake Fight)

Drake என்றால் வாத்து என்று அர்த்தம்

சி 5

சண்டையிடுங்கள் என்று கூறியவுடன், அவர்கள் எதிரியை நோக்கி, முன்புறமாக நடந்து வந்து, எதிரியை மோத வேண்டும்.

எதிரியை தோள்களால் மோதலாம். பக்க வாட்டில் மோதிக் கீழே தள்ளலாம். பின்புறமாகவும் மோதலாம்.

இந்த மோதலில், கணுக்கால்களின் பிடியை, யார் விட்டு விடுகின்றாரோ, அல்லது யார் கீழே விழுந்து விடுகிறாரோ, அவர் தோற்றுவராகிறார்.

சண்டையிட இரண்டு பேர்களை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களை இரண்டு அடி தூரத்தில் முதலில் இருக்கும்படி, நிற்கச் செய்ய வேண்டும்.

குனிந்து அவர்களது கால்களை அவர்களது கைகளால் நன்கு இறுகப்பற்றிக் கொண்டு தயாரக நிற்க வேண்டும்.

குறிப்பு: எந்தக் காரணத்தைக் கொண்டும், கணுக்கால்களைப் பிடித்துள்ள பிடியை, விட்டு விடவே கூடாது. கணுக்கால்களைப் பற்றிப் பிடித்தபடி தான், சண்டை போட வேண்டும்.

6.2 கோழிச் சண்டை (Cock Fight)

இரண்டு கோழிகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டு, 5 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றையும் போட்டு வைக்கவும்.

கோழியாக இருக்கும் இருவரும், காலை உயர்த்திக் கொண்டு ஒரு காலில் நின்று, பின் புறமாகக் கைகளை முதுகுப்புறத்துக்கு கொண்டு போய், ஒரு உள்ளங்கையால் மற்ற கையின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்துக்கொண்டு நிற்கவும்.

இது தான், கோழியாக நிற்கும் முறை.

சண்டையிடுங்கள் என்று கூறியவுடன், இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டும். சண்டையிடுகிற போது, ஒற்றைக் காலுடன், முதுகுப்புறம் கட்டிக் கொண்ட கைகளுடன் தான் போட்டியிட வேண்டும்.

சண்டையின் நோக்கம், எதிராளியை வட்டத்திற்கு வெளியே போகுமாறு இடித்துத் தள்ள வேண்டும்.

வட்டத்திற்கு வெளியே போனவர் அல்லது உயர்த்தியிருந்த ஒரு காலை தரையில் ஊன்றியவர். அல்லது கட்டியிருந்த கைப்பிடியை விட்டுவிட்டவர், போட்டியில் தோற்றவராகிறார்.

6.3 நொண்டி வாத்துச் சண்டை (Lame Duck Fight)

இரண்டு பேர், நொண்டி வாத்துக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

3 அல்லது 5 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

நொண்டி வாத்தாக இருக்கும் நிலை.

வாத்தாக இருப்பவர், தனது இடது காலை முன்புறமாக நீட்டி, இரண்டு கைகளாலும் இடது காலைக் (குனிந்து) பிடித்துக் கொண்டு, தமது வலது காலில் மட்டுமே, நிற்க வேண்டும்.

சண்டை போடுங்கள் என்று சைகை கிடைத்தவுடன், அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதி, இடித்துத் தள்ளி, (வாத்து நிலையிலிருந்து இரண்டு கால்களையும் தரையில் ஊன்றிக் கொள்ளுமாறு, தள்ளிவிட வேண்டும். அல்லது வட்டத்திற்கு வெளியே போய் விழுமாறு தள்ளி விட வேண்டும்.

முதலில் தரையில் விழுந்து விட்டவர்; அல்லது இடது காலிலிருந்து கைகளின் பிடியை விட்டு விட்டவர். தோற்றவராகக் கருதப்படுவார்.

இவ்வாறு மூன்று முறை அல்லது 5 முறை சண்டையிடச் செய்து, அதில் அதிக முறை வெல்கிறவரே, வென்றவராவார்.

6.4 குச்சிபிடிச் சண்டை (Stick Wrestle)

இரண்டு போட்டியாளர்களும் தரையில் உட்கார்ந்து கொண்டு அதாவது, இருவரும் நீட்டியிருக்கிற (கால்களின்) பாதங்களை, இரண்டு பேரும் உதைத்துக் கொண்டு இருப்பது போல முதலில் உட்காரவும்.

அவர்கள் இருவரும் 3 அடி நீளமுள்ள குச்சி (Stick) ஒன்றை, பற்றிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் உதைத்துக் கொண்டு இருக்கும் பகுதிக்கு மேற்புறமாகக் குச்சியைப் பிடித்து கொண்டுள்ள நிலையில், இருவரும் வலிந்து இழுக்க வேண்டும்.

உட்கார்ந்து கொண்டு இழுக்கின்ற எதிரியை தரைவிட்டு மேலே கிளம்புமாறு இழுத்து விடுபவரே, வெற்றி பெற்றவராவார்.

இது நின்று இழுக்கும் போட்டியாகும்

தரையை விட்டு மேலே வந்து விட்டாலும் குச்சிப்பிடியை விட்டு விட்டாலும், அப்படிச்செய்தவர் தோற்றவராகிறார்.

6.5. கரளா கட்டையைத் தள்ளு (Knock over the club)

இரண்டு போட்டியாளர்களையும் 4 அடி விட்ட முள்ள வட்டம் ஒன்றிற்குள் நிற்கச் செய்து விட வேண்டும்.

அவர்கள் நிற்கின்ற தூரத்திற்கு நடுவிலே, ஒரு இந்திய கரளா கட்டையை (Indian club) நிறுத்தி வைத்துவிட்டு, சண்டையைத் தொடங்கச் செய்ய வேண்டும்.

நிற்கின்ற இருவரும் சண்டையைத் தொடங்குவதற்கு முன்னால், ஒருவரின் தோள்களை மற்றவர்; நன்றாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பிடியை சண்டையின் கடைசி நேரம் வரை விட்டு விடவே கூடாது.

சைகை கிடைத்து சண்டை ஆரம்பமானதும், எதிராளி இருவரும் தோள்களின் பிடியை விட்டு விடாமல், எதிரியை முன்புறமாகத் தள்ளலாம். ஒருவரை ஒருவர் சுழற்றி விடலாம். பக்கவாட்டில் தள்ளலாம்.

இந்தப் போட்டியின் போது, நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் கரளா கட்டையை வீழ்த்தி விடாமல் இருக்க வேண்டும்.

யார் அந்தக் கரளாக் கட்டையின் மேல் மோதி, கீழே விழுமாறு வீழ்த்தி விடுகிறாரோ, அவர் தோற்றவராகி விடுகிறார்.

தடுமாறி கால்களினால் கட்டையை வீழ்த்துவது போல, எதிரியை இழுத்து மடக்கித் தள்ளும் போட்டியாளரே வெற்றி பெற முடியும் என்பதால், இந்த நோக்கத்தோடு எதிரியுடன் சண்டைபோட வேண்டும்.

7. உடல் நலம் (Health)

7.1. தன்னுடல் சுகாதாரம்

பல் துலக்குதல், சரியாக முடி வாருதல், கைகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், நகம் வெட்டி நன்றாக வைத்திருத்தல் போன்றவற்றை, முன் கற்றுத் தந்தோம்.

அவற்றுடன், இன்னும் கொஞ்சம் விளக்கமாக, உடல் நலப் பழக்கங்களைக் கற்றுத்தருவோம்.

பல துலக்கும் போது, பற்பசை, பிரஷ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அல்லது மென்மையான பற்பொடியை; மென்மையான குச்சிகளான ஆலம் விழுது, கருவேலங்குச்சி, போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழி.

முடியை சீவிக் கொள்கிற சீப்பினை, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பற்களில் அழுக்குத் தேங்கி விடுமாறு வைக்கக்கூடாது.

தலைமுடி சிக்கல் இல்லாமல் இருக்க, தினம் குளிக்க வேண்டும். சரியாக எண்ணெய் தடவ வேண்டும்.

குளிப்பது மிகவும் அவசியம். உடலில் வருகிற வியர்வையில், தூசிகள் படிந்து அழுக்காகி விடுவதைப் போக்கவே, தினம் குளிக்க வேண்டும். தினம் குளிக்காவிட்டால், தேகம் நாறத் தொடங்கி விடும்.

குளித்த பிறகு உடம்பைத் துடைக்கப் பயன்படுகிற துண்டானது சுத்தமாக இருக்க வேண்டும். துவைத்த சுத்தமான ஆடைகளையே, குளித்த பிறகு அணிந்து கொள்ள வேண்டும்.

காலையில் பிறகு உடம்பைத் துடைக் கப் பயன்படுகிற துண்டானது சுத்தமாக இருக்க வேண்டும். துவைத்த சுத்தமான ஆடைகளையே, குளித்த பிறகு அணிந்து கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்தவுடன், மலம் கழிக்கும் பழக்கத்தை வற்புறுத்திக் கற்றுத்தர வேண்டும். முறையாக மலம் கழிக்காவிட்டால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளையும், மலச்சிக்கல் ஏற்பட்டு, உடல் நலம் கெட்டுப் போகும் என்பதையும் விளக்கி, காலையில் எழுந்ததும் காலைக் கடனை நிறைவேற்றுகிற காரியத்தையே முதலில் செய்து முடிக்க வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல வேண்டும்.

மலம் சரியாகக் கழிக்காவிட்டால், உடல் மந்தப்பட்டுப் போவதுடன், மனநிலையிலும் எழுச்சியில்லாமல் போய், கற்கவும், ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்பதைக் கூறி, அவர்களின் தன்னுடல் சுகாதாரப் பழக்க வழக்கங்களில் தினசரி கவனம் செலுத்தியாக வேண்டும்.

7.2 சுற்றுப்புறச் சுகாதாரம் (Environmental Hygiene)

நாம் வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் பகுதியையே, சுற்றுப்புறம் என்கிறோம்.

சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகள் சுகாதாரமாக இருந்தால், அது எல்லோருக்கும் சுகம் அளிப்பதாக

இருக்கும். இல்லாவிடில், நோய்களைக் கொண்டு வந்து நிறைத்துத் தள்ளிவிடும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, நல்ல சுகம் தரும் சுகாதாரமாகும்.

1. தூய்மையான காற்று

2. நல்ல சூரிய வெளிச்சம்

3. அசுத்தமற்ற, பாதுகாக்கப்பட்டக் குடிநீர்

4. சரிசமநிலையான சத்துணவு

5. சுத்தமான சுற்றுப்புறம், வீட்டிற்கு உள்ளும் வெளியிலும்

6. நல்ல தூய்மையான பழக்க வழக்கங்கள்

7. ஒழுக்கமுள்ள நடத்தை

8. தினந்தோறும் உடற்பயிற்சி

9. மனமகிழ்வு தரும் பொழுதுபோக்கு அம்சங்கள்.

10.நேரத்திற்கு உறங்கச் செல்லுதல், நல்ல உறக்கம்.

இப்படிப்பட்ட கருத்துக்களை, மாணவர்களுக்கு விளக்கமாகச் சொல்லி, வற்புறுத்தி நடந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

7.3. பாதுகாப்பு விதிமுறைகள் (Safety Rules)

7.3.1. வீட்டில் பாதுகாப்பு முறைகள்

வீட்டிலே நிகழும் விபத்துக்களை, மூன்று வகையாகப் பிரிக்கலாம். வழுக்கி விழுதல்; எதிலாவது மோதி இடறி விழுதல், தீக்காயம் படுதல்.

தனக்கு எட்டாத பொருளை எடுக்க முயன்று நிலை மாறி விழுதல்.

ஏணியில் ஏறி இறங்கும் பொழுது தடுமாறி விடுதல்.

மாடிப்படியில் ஏறி இறங்கும்போது வழுக்கி விழுதல்.

தண்ணீர் தரையில் நடக்கும்போது சறுக்கி விழுதல்.

வீட்டில் கோணி, பாய் மாட்டிக் கொண்டு, அவசரத்தில் விழுதல்.

தூக்க முடியாத சுமையைத் தூக்கி, தடுமாறி விழுதல்.

அதுபோலவே, குளியலறையில் பாசி படிந்த தரையில் வழுக்கி விழுதல்.

தீயிடம் கவனமாக இருக்காது, அசட்டைத்தனம் செய்து, அகப்பட்டுக்கொண்டு காயம் படுதல்.

ஸ்டவ் எரியும் போது, கவிழ்ந்து தீக்காயம் அடைதல்.

குழந்தைகள் தீப்பெட்டியுடன் விளையாடும் போது தீ விபத்து ஏற்படுதல்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையெல்லாம் விளக்கி, பாதுகாப்புடன் வாழச் செய்யுமாறு, குழந்தைகளை எச்சரிக்கை செய்து, வழிகாட்ட வேண்டும்.

7.3.2. சாலைகளில் பாதுகாப்பு (Roads)

சாலைகளில் நடக்கும் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள், கவனமின்மை, அவசரம், தனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைக்கனம்.

எச்சரிக்கையுடன் நடந்து சென்றாலும், வாகனத்தை ஓட்டினாலும், சாலைகளில் விபத்து நேராமல் காத்துக் கொள்ளலாம்.

சாலைகளில் நடந்து செல்லும் போது, இடது பக்கமாக நடைபாதையிலே நடந்து செல்லுதல்.

சாலையைக் கடக்கும்போது, போலீஸ்காரர் காட்டும் சைகையின்படி நடந்து கொள்ளுதல்.

கற்பனையோ கனவோ காணாமல், பாதையைப் பார்த்து நடத்தல்.

நண்பர்களுடன் போகும் போது, அரட்டை அடிக்காமல், பாதையில் முன்னும் பின்னும் வருபவர்களைப் பார்த்து, எச்சரிக்கையுடன் நடத்தல்.

ஓடுகின்ற கார்களை, வண்டிகளைத் தொடக்கூடாது.

சாலையில் விளக்கு எரியும் நேரம் பாத்துக் கடத்தல்.

சாலையின் குறுக்கே போகும் போது, அவசரப்படாமல், ஓடாமல், பதட்டப்படாமல், சுற்றும் முற்றும் பார்த்து நடத்தல்

அதுபோல; சைக்கிளில் செல்வோரும் எச்சரிக்கையாகப் போக வேண்டும்.

7.3.3. ஆடுகளங்களில் பாதுகாப்பு (Playgrounds)

ஆடுகளங்களில் பள்ளம் மேடு இருக்கும். பார்த்து விளையாட வேண்டும்.

கண்ணாடித் துண்டுகள், முட்கள், கற்கள், கூரிய கட்டைகள் கிடந்தால், அவற்றை எடுத்து வெளியே எறிந்துவிட வேண்டும். அவை கிடந்தால், நமக்கென்ன என்று இருக்கக்கூடாது.

பெரியவர்கள் ஆடுகின்ற விளையாட்டையெல்லாம் சிறுவர்கள் ஆடக்கூடாது. குழந்தைகளால் என்ன முடியுமோ, அந்த விளையாட்டைத் தான் ஆடவேண்டும்.

பெரியத் தனமாக விளையாட்டையெல்லாம் ஆடக்கூடாது.

மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால், அதைக் கழற்றி விட்டுத் தான் ஆட வேண்டும். கண்ணாடியுடன் ஆடுவது நல்ல தல்ல.

விளையாட்டு உதவிப் பொருட்கள் பழுதாகி இருந்தால், அதை எடுத்து விளையாடக்கூடாது.

சிறந்த பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டு தான் ஆட வேண்டும்.

விளையாடும் நேரங்களில், மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் விளையாடவேண்டும் என்று குழந்தைகளைத் தூண்டவேண்டும்.

7.3.4 விபத்தும் முதலுதவியும் (Accidents and first Aid)

விளையாடும் பொழுதோ அல்லது வகுப்பில் இருக்கும் பொழுதோ காயம் பட்டாலும் அல்லது விபத்து நேர்ந்தாலும், உடனே அதை ஆசிரியர்களிடமோ அல்லது பெரியவர்களிடமோ சென்று சொல்லுகிற பழக்கத்தை, பண்பாட்டைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

விபத்து நடந்து விடுகிறபொழுது, காலதாமதப்படுத்தக் கூடாது. அதற்காக, அவர்களே முதலுதவி செய்யவும் முயற்சிக்கக் கூடாது.

விபத்து நடைபெறுகிறபொழுது, கலங்கிப் போய்விடாமல், எப்படி நடந்து கொள்ள வேண்டும்

என்பதையெல்லாம், ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு நன்குக் கற்பித்துவிட வேண்டும்.

7.3.5. புகையும் பகையும்

புகையிலையை உபயோகப்படுத்துவது, சிகரட் புகைப்பது எல்லாம், உடலுக்குக் கேடு தரும் என்பதை, குழந்தைகளுக்கு கட்டாயமாக சொல்லித் தர வேண்டும்.

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் ஒரு புறத்தில் ஒரு சிகரெட்டை வைத்து, மறுபுறத்தில் பஞ்சை வைத்து அடைத்துவிட்டு; சிகரெட்டைக் கொளுத்திப் புகைக்க வைத்துவிட்டால், அதிலிருந்து வரும் புகை பஞ்சில் பட, அதில் நிகோடின் என்ற கொடிய சத்து, மஞ்சள் வடிவத்தில் பதிந்திருப்பதைக் காட்டி, அந்த நிகோடின் உடலுக்கு எப்படியெல்லாம் கெடுதல் செய்கிறது என்பதைக் (பரிசோதனை மூலமாக) காட்ட வேண்டும்.

குறிப்பு: சிகரெட் புகைய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்கள் சிகரெட்டை வாயில் வைத்து, புகைத்துக் காட்டக்கூடாது.

புகைத்தல் பொல்லாங்கு விளைவிக்கும் என்ற கருத்தை, அவர்கள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.