குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


குழந்தைகளுக்கான
உடற்பயிற்சியும்
விளையாட்டும்

பல்கலைப் பேரறிஞர்

தேசிய விருது பெற்ற நூலாசிரியர்

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

M.A. M.P.Ed., Ph.D.L.tt. D.Ed. FUWAI


ராஜ்மோகன் பதிப்பகம்

"லில்லி பவனம்"

8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு,

தி.நகர், சென்னை - 600 017.

தொலைபேசி - 24332696


நூல் விபர அட்டவணை


நூலின் பெயர் : குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்
மொழி  : தமிழ்
பொருள்  : உடற்பயிற்சி
ஆசிரியர்  : டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
                     (1937-2001)
முதல் பதிப்பு  : பிப்ரவரி - 1988
இரண்டாம் பதிப்பு  : டிசம்பர் - 1993
மூன்றாம் பதிப்பு  : டிசம்பர் - 2008
நூலின் அளவு  : கிரவுன்
படிகள்  : 6000 படிகள்
தாள்  : வெள்ளை - 60 GSM
பக்கங்கள்  : 264
நூல்கட்டுமானம்: பேப்பர் அட்டைக்கட்டு



விலை  : ரூ. 100-00



உரிமை  : பதிப்பகத்தாருக்கு
தயாரிப்பு  : ஆர். ஆடம்சாக்ரட்டீஸ்
வெளியிட்டோர் : ராஜ்மோகன் பதிப்பகம்
              8, போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு
              தி. நகர், சென்னை -600 017,
              தொலைபேசி : 4332696
அச்சிட்டோர்  : கலர்விங்ஸ்
              சென்னை -600 005.

முன்னுரை

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் என்று, இந்த நூலுக்குப் பெயர் தந்திருக்கிறேன்.

6 வயது முதல் 11 வயது குழந்தைகளுக்கு அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு உதவும் வகையில் இந்த நூலை எழுதியிருக்கிறேன். ஐந்திலே குழந்தைகளை வளைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது உறுப்புகளை செழிக்கத் தூண்டும்.

இந்தக் கருத்தில் தான் , ஐந்திலே வளையவேண்டும். இல்லாவிடில் ஐம்பதில் வளையாது என்று ஒரு பொன்மொழியை, நன்மொழியை, நமது முன்னோர்கள் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

Catch them young என்பது நமது மாநில அரசின் , மைய அரசின் மகத்தானக் கொள்கையாக விளங்குகிறது. குழந்தைகளைப் பிடிக்க, பயிற்சியளிக்க, கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வந்திருக்கின்றன.

ஆரம்பப் பள்ளிகளில்தான், குழந்தைகள் படிக்கின்றார்கள். அங்கே, உடற்பயிற்சி அளிக்க, விளையாட்டுக்களைத் திட்டமிட்டுக் கற்றுதர, உடற்கல்வி ஆசிரியர்கள் யாரும் இல்லை, விளையாடும் இடங்கள் போதிய அளவு இல்லை. தரும் பாடதிட்டமும் உரிய முறையில் இல்லை.

குழந்தைகளுக்கு கற்றுத் தர உதவுகின்ற விளையாட்டுத் துறை நூல்களும் தமிழில் இல்லை. இந்தக் குறையைப் போக்க, முதல் நூலாக, புதிய அமைப்பாக, இந்த நூல் வெளிவருகிறது.

அகில இந்திய அளவில், அறிஞர்கள் கூடி, கலந்துரையாடி, தயாரித்துத்தந்துள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மகிழ்ந்து விளையாட, கூடி உறவாட, சிரித்துமகிழ, சிறந்து திகழ, இந்த நூலில் கூறப்பட்டுள்ள உடற்பயிற்சி களும், விளையாட்டுகளும் நன்கு உதவும்.

ஒவ்வொரு ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கும், இந்த நூல் உற்ற துணையாக உதவும்.

தங்கள் பிள்ளைகளை தகுதியுள்ள முறைகளில் வளர்க்க விரும்புகிற பெற்றோர்களுக்கு, இந்நூல் வழிகாட்டியாக உதவும். வரப்பிரசாதமாக விளங்கும்.

வருங்காலத் தமிழகம் வளங்கொழிக்க, குழந்தைகள் எழுச்சியுறும் இனிய நிலையை என் மனக்கண்ணால் பார்த்து மகிழ்வடைகிறேன்.

வளமோடு குழந்தைகள் வளர வாழ்த்துகிறேன். பெருமையுடன் உதவுகின்ற ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் பாராட்டி மகிழ்கிறேன்.

அன்புடன்

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா


  • முதல் பதிப்பின்போது ஆசிரியர் எழுதிய முன்னுரை அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

- பதிப்பகத்தார்

பதிப்புரை

விளையாட்டுத்துறையில் அதிகமான நூல்களை தமிழ் உலகிற்கு தந்து புதிய துறையை உருவாக்கியவர் என்ற பெருமை டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா அவர்களுக்கு உண்டு.

ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெறவேண்டும் என்று விரும்பாத இந்தியர் இல்லை. உரிய முயற்சிகளை எடுப்பதில் யாரும் அக்கரை காட்ட வில்லை. என்பது தான் உண்மை நிலை.

இன்றும் பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களோ உடற்பயிற்சி ஆசிரயர்களோ இல்லை என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.

தொலை நோக்குத் திட்டங்களினால் மட்டுமே தங்கப்பதக்கம் கனவு நனவாகும் என்பது கண்கூடாகத் தெரியும் நிலை. இன்றைய சிறுவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமது இளைஞர்கள் ஒலிம்பிக்பந்தயங்களில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் எடுத்த முதல் முயற்சி தான் இந்நூல். சிறியவர்களுக்கு உரிய உடற்பயிற்சிகளையும் விளையாட்டுக்களையும் முறையாக உரிய ஆசிரியர்களின் மூலமாக கற்பித்து ஆர்வத்தைத் தூண்டவேண்டும். படிப்படியாக உரிய பயிற்சிகளை அதிகப்படுத்தி சிறுவர்களின் விளையாட்டுத்திறனை அதிகப்படுத்தி அவர்களைப் போட்டிகளில் பங்கு பெற செய்யவேண்டும்.

முறையான பயிற்சியும், முனைப்பான தொடர் நடவடிக்கையும் மேற் கொண்டு இளம் தலைமுறையினருக்கு பயிற்சி அளித்தால், வெற்றிப் பதக்கம் கனவு உண்மையாகும்.

முதல் நடவடிக்கையாக, சிறுவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அந்த முயற்சிக்கு பெரும் துணைபுரிய இந்நூல் உதவும் என்பது எங்களின் அசைக்கக முடியாத நம்பிக்கை.

1988, 1993 ஆண்டுகளில் வெளிவந்து தற்போது அடுத்த பதிப்பாக தற்போது மீண்டும் வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறோம்.

விளையாட்டுத்துறை நூல்களையே வெளியிட்டு வரும் எங்கள் பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவு தரும் அனைவருக்கும் எங்கள் நன்றி.


தங்கள் அன்புள்ள

31.12.2008 ஆர் ஆடம் சாக்ரட்டீஸ்

பதிப்பாளர்

பொருளடக்கம்