பக்கம்:நற்றிணை 1.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடப்பெற்ற தலைவர்கள்

429


பாடியுள்ளனர். இவனுடைய போர்மறம் இச்செய்யுளாற் பாராட்டப் பெறுகின்றது.

ஓரி 6, 52

கொல்லிக்கு இறைவன்; கடையெழு வள்ளல்களுள் ஒருவன். சேரமானின் பொருட்டாக மலையமான் திருமுடிக் காரியால் கொல்லப்பட்டவன் நற்றிணை ஆறாஞ் செய்யுளுள் பரணரும், 52ஆம் செய்யுளுள் பாலத்தனாரும் இவனது சிறப்பைப் பாடியுள்ளனர்.

கிள்ளி 141

சல்லியங் குமரனாராற் போற்றப்படும் இவன் சோழர் குடியிற்பிறந்து அம்பர்ப் பகுதிக்கண் தலைவனாக விளங்கியவனாவான். இவனுடைய போராற்றல் இச் செய்யுளுள் எடுத்துப் பாராட்டப் பெறுகின்றது.

குட்டுவன் 14, 105

இவன் சேரர் மரபினன்; குட்ட நாட்டைச் சார்ந்தவனாதலின் இப்பெயர் பெற்றனன். 14ஆம் செய்யுளுள் இவனது அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினை மாமூலனார் கூறுகின்றனர். முடத்திருமாறன் இவனது குடவரையை 150ஆம் செய்யுளுள் பாராட்டுகின்றனர்.

கொங்கர் 10

கொங்கு நாட்டுப் பகுதியினர். இவரைப் பழையன் பணிவித்தமை இச்செய்யுளுட் கூறப்பெற்றிருக்கின்றது. கொங்கு அந்நாளில் தனியாட்சி பெற்றிருந்தது என்பதனையும் இதனால் அறியலாம்.

கொல்லிப்பாவை 185, 192

கொல்லி மலையிடத்தே தெய்வத்தச்சனால் நிறுமிக்கப் பெற்றதாக உரைக்கப்படும் தெய்வப்பாவை. கண்டாரைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலுடையது இதுவென்பர். 'பூதம் புணர்த்த புதிதியல் பாவை' என, இதனை நற்றிணையின் 192ஆம் செய்யுள் கூறுகின்றது.

செம்பியன் 14

சோழன்; இவன் குட்டுவனது அகப்பாவை அழித்த செய்தியை மாமுகனார் இச்செய்யுளுட் கூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/430&oldid=1731204" இலிருந்து மீள்விக்கப்பட்டது