பாடப்பெற்ற தலைவர்கள்
431
வெற்றிகொண்டவன். இவனை மாங்குடி மருதனார் இச் செய்யுளுட் பாடுகின்றனர்.
புல்லி 14
கள்வர் கோமானாகிய இவன் வேங்கடமலைப் பகுதிக்குத் தலைவனாக விளங்கியவன். கல்லாடனாரும் மாமூலனாரும் பாராட்டிய சிறப்பினன். இச் செய்யுள் இவனது கடத்தற்கரிய வேங்கடமலைக் காட்டைப் பற்றிக் கூறுகின்றது.
பூழியர் 192
பூழிநாட்டைச் சார்ந்தவர் இவர். இவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்ந்துவந்த இனத்தவராகப் பெரும்பாலும் விளங்கி வந்தார்கள். இவர்களுடைய ஆட்டு மந்தை பற்றிய செய்தியை இச் செய்யுளுள் காண்கிறோம்.
பெரியன் 131
பொறையாற்றுப் பெரியன் என்பவன் இவன். இவன் சோழநாட்டுப் பொறையாறு என்னும் கடற்கரை ஊர்க்குத் தலைவனாக விளங்கினான். இவனுடைய வள்ளன்மை பற்றியும் இவனூரின் வளத்தைப் பற்றியும் உலோச்சனார் இச் செய்யுளுட் கூறுகின்றனர்.
மலையமாநாடு என்னும் திருக்கோவலூர்ப் பகுதியை ஆண்டுவந்த வள்ளல் இவன். மலையமான் திருமுடிக்காரி எனவும் இவனைக் கூறுவர். இவனது பேராண்மை அந்நாளிற் பெரிதும் போற்றப் பெற்றதாக விளங்கியது. இவன் எவர் பக்கம் துணைநிற்கின்றனனோ அவரே வெற்றிபெறுவர் என்று சான்றோர் கூறுகின்றனர். 77 ஆவது செய்யுளுள் இவனது போராண்மையைக் கபிலரும், 100 ஆவது செய்யுளுள் பரணரும் பாடுகின்றனர். 170 ஆவது செய்யுள் ஆரியப்படையை இவன் வெற்றிகொண்ட சிறப்பை உரைக்கின்றது. இவன் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாக விளங்கியவனும் ஆவான்.
மழவர் 52
சேலத்துப் பகுதியில் வாழ்ந்துவந்த மறவர்குடியினர் இவர். தகடூர் அதியமான் இவர்களது தலைவனாகக்