பயனர்:Info-farmer/2021/contributionsAll/january

2021 ஆம் ஆண்டில், எனது பங்களிப்புகள்: சனவரி - பெப்ரவரி - மார்ச்சு - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்

  1. யாவாகிரிப்டு (Javascript) பயிற்சி : விக்கிமூலத்தில் ஒரு தனிநபர், இந்த நிரலாக்கத்தை, பிறரைப் பாதிக்க வழிமுறையிலும், விரும்புபவர் பிறரின் அந்நிரலாக்கத்தினை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்? என்பதும், இருக்கும் நிரலை எப்படி மாற்றி சோதிக்க வேண்டும் என்பதும் எடுக்கப்பட்டது. இப்பயிற்சி இம்முறை விக்கிமூலப் பெண் பயனருக்கு அளிக்கப்பட்டது. அவர் கட்டற்ற மென்பொருள் விழிப்புணர்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

காண்க:பயனர்:Keerthichandran/FloatingbuttonextraToolbar.js https://ta.wikisource.org/s/9pyh

  1. ஒரு முழுமையான நூலுக்குத் தேவையான விக்கிக் குறியீடுகள் இடப்பட்டு, புதிய பயனருக்கும், ஏற்கனவே இருக்கும் பயனருக்கும் கொடுத்து சோதிக்கப்பட்டது. காண்க ஆலமரத்தடி: தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதஐயர்.
  2. மேலடி 1000 பக்கங்களுக்கும் மேல் (பைத்தான்) நூல்களுக்கு இடப்பட்டு சரிபார்க்கப்பட்டன.
  3. மேனகா 1 நூல்(339 பக்கங்கள்) மேலடியும், சில விக்கிக்குறியீடுகளும் இடப்பட்டு தந்தமையால், அப்பங்களிப்பு எளிமையாகி, பயனர் டாக்டர். பெஞ்சமின் தொடர்ந்து விரைந்து செய்தார். அதனால் அவர் தொடர்ந்து பங்களிக்கிறார். https://ta.wikisource.org/s/9pan
  4. நூல்களைப் பதிவிறக்கும் பொழுது, வரும் இயல்பிருப்பான படத்தினை அனைத்தும் மொழிகளுக்கும் மாற்ற வழு பதியப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. காண்க:https://phabricator.wikimedia.org/T272763
  5. பொருளடக்கப் பகுதியில் இட வேண்டிய விக்கிக்குறியீடுகளை எளிமையாக்க அடிப்படை பைத்தான் நிரல் முதற்கட்ட சோதனையில் வெற்றிகரமாக அமைந்தது. 64 உட்பிரிவுகள் உள்ள நூற்பக்கம்
  6. பிபிசி பெண் வீரங்கனைகளுக்கான 50 கட்டுரைகளை உருவாக்கி வருகிறது. இந்திய பத்திரிக்கையியல் மாணவர்களை வைத்து எழுதி, தமிழ் விக்கிப்பீடியரை மதிப்புரை செய்யச்சொல்லுகிறது. இதில் பாலின இடைவெளி (Gender gap) நீக்க, இந்த கூட்டுப்பணியில் இலங்கையைச் சார்ந்த பயனர் பாத்திமா இணைக்கப்பட்டு தனிநபர்பயிற்சி தரப்பட்டது.
  7. 1000க்கும் மேற்பட்ட பக்கங்களில், இருக்கும் தேவையற்ற குறியீடுகள் தலைப்பில் நீக்கப்பட்டன.
  8. பொதுவகத்தில் உரிமம் குறித்த இடர்கள், 30 (OTRS) நூல்களில் களையப்பட்டன.
  9. பொதுவகத்தில், 200க்கும் மேற்பட்ட கோப்புகள் துப்புரவு செய்யப்பட்டன. மேலும், ஏற்காடு இளங்கோவு என்ற பயனர்க்கு 100க்கும் மேற்பட்ட கோப்புகளில் உரிய பகுப்பு இடப்பட்டன.
  10. விக்சனரியில் எரிதம் உருவாக்கும் 10 க்கும் மேற்பட்ட பயனர்கள் தடுக்கப்பட்டனர். அவர்கள் உருவாக்கிய 20க்கு மேற்பட்ட பக்கங்கள் அழிக்கப்பட்டன.
  11. சேலத்தில் வசிக்கும் விபத்தில் கால்களை இழந்த நண்பரின்(பயனர்:Kumarkaliannan) கணினியில் இருந்த இடர்கள் களையப்பட்டு, அவர் தொடர்ந்து அகரமுதலி நூல்களை மேம்படுத்த அறிமுகவுரை அளிக்கப்பட்டது.
  12. தமிழ் விக்கிமூலப் பயிலரங்கு, சென்னை ஜெயின்(ssss) மகளிர் கல்லூரியில் எட்டு நாள்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் விக்கியர்களையும், அக்கல்லூரி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து, அறிமுகப் பயிலரங்கிலேயே இரண்டு நூல்கள் (ஏறத்தாழ 210 பக்கங்கள்) முழுமையாக்கப்பட்டன. இதன் முழுவிவரம் கீழே காணவும்.
  13. https://github.com/Dineshkarthik/wiki-user-contributions/issues/12

தடம் பதித்த விக்கிமூலப் பயிலரங்கு மூலம் : https://ta.wikisource.org/s/9ob8

கணியம் அறக்கட்டளை, கட்டற்ற தமிழ் வளங்களை இணையத்தில் வளர்த்து வருகிறது. அவற்றிற்காகப் பல முன்னெடுப்புப் பணிகளைச் செய்கிறது. அவற்றில் ஒன்றாக இந்த ஆண்டு கொரோனோ நோய்த்தொற்று காரணமாக, இணையத்தின் வழியே, விக்கிமூலப் பயிலரங்கு நடத்த முயற்சி எடுத்தது. மூன்றாம் முயற்சிக்குப் பின்னர், 26 டிசம்பர் 2020 முதல் 4 சனவரி2021 வரை தொடர் பயிலரங்குகளை, சென்னையிலுள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையுடன் இணைந்து நடத்தியது. வழக்கமாக இது போன்ற செய்முறைப் பயிலரங்கானது, கல்லூரி வளாகத்தில் நேரில் நடத்துவதே வழக்கம். பெருந்தொற்றுக் காலமென்பதால், இணையத்தின் வழி நடத்தப்பட்டது. விக்கிமூலம் திட்ட வரலாற்றில் இணையத்தின் வழி நடத்தும், முழு முதல் விக்கிமூலப் பயிலரங்காக இது அமைந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இணையத்தின் வழி செய்முறை வகுப்புகளை, புதியவர்களுக்கு எடுத்துரைப்பது கடினம். ஆனால், இப்பயிலரங்கில் இரண்டு நூல்கள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதுவரை விக்கிமூலப் பயிலரங்குகளில் எந்த ஒரு நூலும் முழுமையாக முடிக்கப்பட்டதில்லை. இரண்டு நூல்களை இனிதே முடிக்க ஒருங்கிணைப்புப் பணிகளை, சிறப்பாகச் செய்த, அக்கல்லூரிப் பேராசிரியைகளான திருமதி. நா. உமா மகேஸ்வரி, திருமதி. த.வாசுகி, திருமதி. முனைவர் ம.ராணி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

விக்கிமூல பயிற்றுநர்களாக தகவலுழவன், அருளரசன், முனைவர் இராசேந்திரன், இந்துசுத்தான் கல்லூரி முனைவர் சத்தியராசு, இலங்கையில் இருந்து பாத்திமா ஆகியோர் பணியாற்றினர்.

முடிக்கப்பட்ட இரண்டு நூல்கள்:

  1. நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்(https://ta.wikisource.org/s/9of3) 106 பக்கங்கள்
  2. கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்(https://ta.wikisource.org/s/9omu) 123 பக்கங்கள்

பயிற்சி முறைகள்:

  • முதலில் எழுத்துப்பிழைகள் களையப்பட்டன.
  • இட வேண்டிய விக்கிக்குறியீடுகளுக்காக, பத்துக்கும் மேற்பட்ட, ஓரிரு நிமிட திரைப்பதிவுகள் தரப்பட்டன.

பயிற்சி நேரங்கள்: ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுது 2 முதல் 4 வரை கூகுள் மீட் (Google Meet) வழியாகப் பயிற்சிகள் நடைபெற்றன. அத்துடன், 30 நிமிட செய்முறை பயிற்சி நடைபெற்றது. மேலும், விரும்பும் மாணவிகளுக்கு, கல்லூரி அல்லாத நேரங்களில் தனிநபர் விளக்கங்கள், சூம்(zoom), செட்சீ(Jitsi) வழியாகவும், அலைப்பேசி வழியாகவும் நடைபெறுகின்றன.

உணரந்தவை : நூல்கள் பலவகைப்படும். ஆண்டுகள் வேறுபடும் பொழுது அச்சுவடிவமும் வேறுபடுகின்றன. அதனால் விக்கிமூலத்தில் இடவேண்டிய விக்கிக்குறியீடுகளும் வேறுபடுகின்றன. மாணவிகளின் திறனுக்கு ஏற்ப நூல்களை நாம் சரியாகத் தேர்ந்தெடுத்து, அதற்கு ஒப்ப திரைப்பதிவுகளை உருவாக்கிக் கொடுத்தால், மாணவிகள் விரைவாக மெய்ப்பு கண்டு, எழுத்து வடிவ மின் நூல்களை, படவடிவ மின்னூல்களில் இருந்து உருவாக்குகின்றனர். இவ்வாறு பல கல்லூரிகளிலும் எடுத்தால், தமிழ் தரவகம் வளர்ந்து, தமிழ் மொழிக்குரிய பலவித கணியநுட்பங்களை உருவாக்க ஏதுவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Info-farmer/2021/contributionsAll/january&oldid=1353024" இலிருந்து மீள்விக்கப்பட்டது