விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Seesiva!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--பாலாஜி (பேசலாம் வாங்க!) 23:50, 19 பெப்ரவரி 2017 (UTC)

அடுத்தப்பக்கம்

தொகு

திரு. சிவகார்த்திகேயன் அவர்களே விக்கிமூலத்தில் தங்கள் தொகுப்புகளை பார்ப்பதில் மகிழ்ச்சி. ஏதேனும் உதவி அல்லது ஐயம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம். மெய்ப்பு பார்க்கும் பொழுது ஒவ்வொரு பக்கதின் முடிவிலும் "அடுத்த பக்கம்" என்ற இணைப்பு கொடுக்க தேவையில்லை. பக்கதின் மேலே "பக்கம்" என்ற இடத்திற்கு அருகில் அடுத்தபக்கம் மற்றும் முந்தைய பக்கம் செல்வதற்கான அம்புக்குறி உள்ளது. நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 00:24, 20 பெப்ரவரி 2017 (UTC)

மெய்ப்பு பார்க்கப்பட்டவை

தொகு

ஒரு பக்கதில் மெய்ப்பு செய்யும் பொழுது வடிவமைப்பு, மேற்கோள் குறிகள், எழுத்துப்பிழைகள் அனைத்தும் திருத்திய பிறகே "மெய்ப்பு பார்க்கப்பட்டவை" என்ற குறிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு உதவி:புதிதாக_தொடங்குபவர்களுக்கான_மெய்ப்பு_வழிகாட்டி#பக்க_நிலைமை இப்பக்கத்தினை பார்க்கவும். எடுத்துக்காட்டுக்காக தாங்கள் அண்மையில் பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/269 என்ற பக்கத்தை மெய்ப்பு செய்யும் பொழுது அதனை மஞ்சளாக் மாற்றியுள்ளீர்கள். ஆனால் அதில் நிறைய பிழைகள் இருந்தன. அதன் பிறகு சரிசெய்த மாற்றங்களை இங்கு பார்க்கலாம். தங்களுக்கு வடிவமைப்பு முதலிய மாற்றங்கள் செய்ய தெரியவில்லை, சந்தேகமாக உள்ளது, செய்ய விருப்பமில்லை போன்ற காரணங்கள் இருந்தால் பரவாயில்லை. எழுத்து பிழை மட்டும் செய்தால் கூட போதும். ஆனால் மஞ்சளாக மாற்றவேண்டாம். சிவப்பிலேயே விட்டுவிடுங்கள். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு அப்பக்கத்தினை மெய்ப்பு செய்ய வேண்டும் என்று தெரிய வரும். மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி. -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 04:25, 6 ஜனவரி 2019 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Seesiva&oldid=1463458" இலிருந்து மீள்விக்கப்பட்டது