மழலை அமுதம்/நாட்டுப்பணி
நாட்டுப் பணியே நல்லதோர் பணியாம்
வீட்டுக் கொருவராய் விட்டால் போதும்
மேன்மைகள் எல்லாம் பெற்றிடலாகும்
சாதிப் பிரிவுகள் பலபல சொல்லி
சண்டைகள் செய்வார் சில முடர்
ஆதியில் எங்கே சாதியிருந்தது?
அறியாமையினால் இங்கே வளர்ந்தது
போதும் போதும் சாதிப் பிரிவினல்
வேதனை துன்பம் அடிமையும் தாழ்ச்சியும்
விளைந்தது போதும் போதும் போதும்
சாதியும் ஒன்றே சமயமும் ஒன்றே
நீதியும் ஒன்றே நேர்மையே வழியாம்
அத்தன் காந்தி அருள்வதைக் கேட்பீர்
அன்பும் அஹிம்சையும் அவை இருகண்கள்
இன்பமாய் உலகினில் இருந்திடலாகும்
போரும் பகைமையும் போயொழிந்திடுக
தேசத் தந்தை காந்தி மகாத்மா
தினமும் அருளிய நல்லுரை கொள்வோம்
அனைவரும் ஒன்றாய் அன்பினில் ஓங்குவோம்
வாழிய வாழிய வாழ்க மஹாத்மா
வாழிய அறங்கள் வாழிய வாய்மை
வாழிய வாழிய வாழ்க பல்லாண்டே.