மழலை அமுதம்/புது நாள்
புத்தம் புதுநாள் பிறந்தது பார்
புதிய நற்பணிகள் செய்திடுவாய்
இத்தனை நாள் வீணாய்க் கழித்தது போல்
இதனையும் வீணாய்க் கழிப்பாயோ?
சத்தமில்லாமல் ஒருநாள் தோன்றும்
சத்தமிலாமல் அது மறைந்திடுமே
எத்தனை வருந்தி அழைத்தாலும்
இதுநாள் மீண்டும் வருமோ சொல்?