முடியரசன் தமிழ் வழிபாடு/033-049
கற்பவர் நெஞ்சில் எல்லாம்
களிப்பினை ஊட்டும் தாயே!
முற்படும் மொழிகட் கெல்லாம்
மூத்தவள் எனினும் நின்னைப்
பற்றிய இளமை குன்றாப்
பைந்தமிழ் அன்னாய் என்று
சொற்றிடல் தவிர வேறு
பற்றுகள் இல்லேன் அம்மா!
[புதியதொரு விதி செய்வோம்]