முடியரசன் தமிழ் வழிபாடு/032-049
பாடிக்கொண் டேயிருப்பேன் - என்
- பைந்தமிழைச் செந்தமிழை நான்
-பாடிக்
ஓடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி
- ஒடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை
-பாடிக்
கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும்
- கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும் போதும்
இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும்
- எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன்
-பாடிக்
பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப்
- பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி
முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை
- மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப்
-பாடிக்
[தாய்மொழி காப்போம்]