வாழ்க்கை விநோதம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

வாழ்க்கை விநோதம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

வாழ்க்கை

விநோதம்

[நகைச்சுவைக் கட்டுரைகள்]


அழ. வள்ளியப்பா


பழனியப்பா பிரதர்ஸ்

சென்னை-14 திருச்சி-2 சேலம்-1

பதிப்புரை

நண்பர் வள்ளியப்பாவின் முதல் புத்தகம் 'மலரும் உள்ளம். இது குழந்தைகளுக்காக வெளியிடப்பட்டது: இதற்குத் தமிழ்நாட்டில் எங்கும் நல்ல ஆதரவும், வரவேற்பும் இருந்து வருகின்றது. "வாழ்க்கை விநோதம்' இவரது இரண்டாவது புத்தகம்.

சாதாரண வாழ்வில் கானும் விநோதங்களைத்தான், ஆசிரியர் இதில் நகைச்சுவை ததும்பச் சித்திரித்திருக்கிறார். இயற்கையாகவே நகைச்சுவை மிளிரப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்கும் இவர், இப்புத்தகத்தின் மூலமாகத் தமிழ் நாட்டு நண்பர்கள் அனை வரையுமே மகிழ்விக்க முன்வந்துள்ளார்.

இதை வெளியிட அனுமதி தந்த ஆசிரியர் அவர்கட்கும் நல்ல ஆதர வளித்துவரும் அன்பர்கட்கும் எங்கள் நன்றி.


பழனியப்பா சகோதரர்கள்


முதற்பதிப்பின்
முன்னுரை

எனக்கு நீண்ட நாளாக ஒர் ஆசையிருந்தது. தமிழ்நாட்டின் பிரபல நகைச் சுவை எழுத்தாளர்கள் சிலர் இருக் கிறார்களே, அவர்களேப்போல் நாமும் எழுதவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

“அடேயப்பா, இது நம்மால் முடிகிற காரியமா !” என்று நினைத்துக் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்து பார்த் தேன்.

ஆனால், ஆசை என்னை விடவில்லை. “என்ன ஐயா, புத்தர் பெருமானாலே என்னைத் துரத்த முடியவில்லையே ? ‘துன்பத்துக்குக் காரணம் ஆசை. ஆசையை அறவே ஒழிக்கவேண்டும்’ என்று எவ்வளவோ பிரசாரம் செய்து தான் பார்த்தார்; அவரால் முடிந்ததா? உம்மால் எப்படி முடியப் போகிறது? உம், கட்டிய கையைத் தளர்த்திப் பேனாவைக் கையில் எடுத்து, எழுத ஆரம்பியும். பயப்படாதீர்!” என்று அபயம்  அளித்து அடிக்கடி தூண்டவும் ஆரம்பித்துவிட்டது.

நாள் ஆக ஆக, அந்த ஆசையின் சீடனாகிவிட்டேன் ! அப்புறம் நான் எழுதிய விஷயங்கள்தான் இதில் காட்சி அளிக்கின்றன.

‘சக்தி’யிலும், ‘தொழிலாளர் உலக’த்திலும், 1940-லிருந்து (யுத்த காலத்தில்) எழுதப்பட்டவைகளே இதில் பாதியை நிரப்புகின்றன, மற்றவை யெல்லாம் இதுவரை அச்சு வாகனம் ஏறாதவை.

இப்புத்தகம், பொழுது போக்குக்கு உபயோகமாகும் என்று நம்புகிறேன்.

இதை வெளியிட முன்வந்த நண்பர் செ. மெ. பழனியப்ப செட்டியாரவர்களுக்கு எனது நன்றி.

அழ. வள்ளியப்பா

இராயவரம்

26–7–’45

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_விநோதம்&oldid=1711952" இலிருந்து மீள்விக்கப்பட்டது