விக்கிமூலம் பேச்சு:கலைஞர் நூற்றாண்டு எழுத்தாக்கத் திட்டம்

திட்ட செலவு குறித்த ஐயங்கள்

தொகு

விரிவான முன்மொழிவு. இருப்பினும் செலவு குறித்த ஐயத்தைத் தெளிவு படுத்துக. ஏறத்தாழ பாதி செலவு //தொழில்நுட்ப உதவி, மின் சான்றிதழ் முதலிய இதரச் செலவுகள்///74000// என்பதால், இது குறித்து அறிய விரும்புகிறேன். இதற்கு முன் நடந்த எழுத்துணரியாக்கம் சீர் செய்த போட்டிகளில் பின்பற்றப் பட்ட தொழினுட்பங்களும், இதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை அறிய விரும்புகிறேன். மேலும், இத்தகைய தொழினுட்பங்கள் கட்டற்ற அணுக்கத்தில் வெளியிடப்பட வேண்டும். ஏனெனில், ஓப்பிட்டு அளவில் இது போன்ற பெரிய தொகை பிற மொழி விக்கிமூலத்தில் செலவிடப்பட்டிருந்தால், அவர்களிடமும் கேட்கலாம். போட்டி விதிகள் மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும். எனவே, விதிகள் முக்கியம். விதிகள் மீறப்பட்டிருப்பதை அறிய கருவிகள் துணைப்புரிய வேண்டும் என்றே எண்ணுகிறேன். பிறரின் எண்ணமறிய ஆவல். இந்தியாவிற்கே இது முன்மாதிரியான திட்டமாக விளங்க இத்தகைய எண்ணங்கள் மிகவும அவசியமென்றே எண்ணுகிறேன். Info-farmer (பேச்சு) 15:15, 1 அக்டோபர் 2024 (UTC)Reply

@Balajijagadesh உங்கள் எண்ணங்களை மேற்கூறிய செலவினங்கள் குறித்து அறிய விரும்புகிறேன். தெளிவான செலவுகள் குறித்து திட்டம் இருப்பின் அதனைக் குறைக்க ஏதுவாக இருக்கும். Info-farmer (பேச்சு) 00:56, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

மூல நூல்கள்

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழத்தின் மின்னூலக இணையதளத்தில் கலைஞர் நூல்கள் மின்வடிவத்தில்(pdf) பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்ற சூழலில் அதில் விடுபட்ட புதிய நூல்களைத் தனியாக மின்னாக்கம் செய்து அதனை எழுத்தாக்கத் திட்டத்தில் இணைக்கும் முயற்சி உள்ளதா?

இக்கேள்வியின் நோக்கம் அரசு தரப்பில் கலைஞர் எழுத்துக்களுக்கான தனித்த இணையப்பக்கம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்ணாதுரை, வ.உ.சி [1]ஆகியோருக்கான இணையப்பக்கங்கள் உருவாக்கப்பட்டதைப் போன்றே கலைஞர் நூல்கள் இணையப்பக்கம் உருவாக்கப் பணிகள் நடைபெறுகிறது என்னும் தகவல் தெரிவிக்க மட்டுமே.

திட்ட முன்மொழிவுப்படி எழுத்தாக்கத் திட்டத்தினை செயல்படுத்த ஊக்கப் பரிசு என்னும் தலைப்பில் கூடுதல் ரூபாய் சேர்க்கலாம். தொழில்நுட்ப உதவி என்னும் தலைப்பில் தொகைக் குறைவு செய்யலாம். [குறிப்பு: பி.டி.எப்.(pdf) நூல்கள்- தமிழ் இணையக் கல்விக்கழத்தின் மின்னூலக இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் / இலவச பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இண்டிக் ஓ.சி.ஆர். (indic ocr) & கூகுள் ஓசிஆர் (Google ocr) வழியாக எழுத்துணரி செய்துகொள்ளலாம். விக்கிமூல bot கணக்குகள் வழியாகச் செய்யலாம்.] --TVA ARUN (பேச்சு) 06:47, 4 அக்டோபர் 2024 (UTC)Reply

போட்டி குறித்த சில கருத்துகள் :

தொகு

இந்திய அளவில் நாம் முன்னெடுத்த பணிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட பிறமொழித் தரவுகள் வேகமாக முன்னேறிவரும் நிலையில் நாமும் இந்த எழுத்தாக்கத் திட்டத்தினை முன்னெடுப்பது சிறந்த முடிவு. பல்வகை வழிகளில் பல தரவுகள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அ.) இந்திய அளவில் நாம் நடத்திய முந்தைய மெய்ப்பு போட்டிகளில் உள்ள விதிகளை நடைமுறைப்படுத்தும் அதே சூழலில் ஊதா, மஞ்சள் குறியீடுகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும். காரணம் பிறமொழி நுட்பவல்லுநர்கள் இதைவைத்து நம்மை மொத்த புள்ளிகள் அடிப்படையில் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது.
ஆ.) மேலே கூறியபடி போட்டிகளில் பல நிறைவுறா நூல்கள், பக்கங்கள் உள்ளன. அதைத் தவிர்க்க நடுவர்கள் உதவ வேண்டும்.
இ.) போட்டிக்குப் பின் அல்லது போட்டியின் ஒரு பிரிவாக இறுதி பகுதியாக துப்புரவு நிலை அமைக்கப்படுதல் அவசியம். இது உருவாக்கப்பட்ட தரவுகளின் தரத்தினை சர்வதேச அளவில் தமிழ் மொழி தரவுகளின் தரத்தினை உயர்த்தும். --TVA ARUN (பேச்சு) 06:47, 4 அக்டோபர் 2024 (UTC)Reply

சிறப்பு விதி

தொகு

இத்திட்டத்திற்குப் பரவலான பங்களிப்பை ஊக்கப்படுத்தும் முகத்தான், கீழ்க் காணும் விதியையும் அறிமுகப்படுத்தலாம்.

ஒருவரே மீண்டும், மீண்டும் முதல் மூன்று பரிசுகளில் ஏதாவது ஒன்றினை வெல்வதைத் தடுக்கும் வகையிலும் மற்றவர்களுக்கும் முதல் மூன்று பரிசுகளில் ஏதாவது ஒன்றை வெல்லும் வாய்ப்பை வழங்கும் பொருட்டும், முதல் மாதம்: முதல் மூன்று பரிசுகளில் ஏதாவது ஒன்றைப் பெறுபவர், அடுத்த இரு மாதங்களுக்கு, அம்மூன்று இடங்களுக்கும் கருதப்பட மாட்டார். எனினும், ஆறுதல் பரிசுக்குத் தகுதியும், மற்றும் “மூன்று மாதங்களுக்கான சிறப்புப் போட்டியில்” கலந்து கொள்ளும் உரிமையும் பெறுவார்.

அதே போன்று, இரண்டாம் மாதம், முதல் மூன்று இடங்களில், ஏதாவது ஒன்றைப் பெறுபவர், மூன்றாம் மாதத்துக்கு, அம்மூன்று இடங்களுக்கும் கருத்தில் கொள்ளப்பட மாட்டார். எனினும், ஆறுதல் பரிசுக்குத் தகுதியும், மற்றும் மூன்று மாதங்களுக்கான சிறப்புப் போட்டியில் கலந்து கொள்ளும் உரிமையும் பெறுவார்.

இவ்விதியினால், போட்டியில் பங்கேற்கும் ஒருவர் பெறும் அதிக பட்சப் பரிசுத் தொகை ரூபாய். 17,000/- [ஏதாவது ஒரு மாதம் முதல் பரிசான ரூபாய் 5,000/-, மற்ற இரு மாதங்களில் ஆறுதல் பரிசு ரூபாய். 1,000/-, மற்றும் சிறப்பு முதல் பரிசாக ரூபாய் 10,000/- ஆக மொத்தம் ரூபாய். 17,000/-] என்ற வரம்புக்குள் இருக்கும். இந்த விதி இல்லாத பட்சத்தில் ஒருவர் பெறக் கூடிய அதிக பட்சப் பரிசுத் தொகை ரூபாய். 25,000/- [மூன்று மாதங்களிலும் முதல் பரிசான ரூபாய் 5,000/-, மற்றும் சிறப்பு முதல் பரிசாக ரூபாய். 10,000/- ஆக மொத்தம் ரூபாய்.25,000/-] என மாறும்.

In short, unique candidates only will be considered for the first three places for all the three months. However, all 9 of them are eligible for any of the prizes at the end of three months “Special consolidation contest”.

--TI_Buhari (பேச்சு) 02:15, 7 அக்டோபர் 2024 (UTC)Reply

Return to the project page "கலைஞர் நூற்றாண்டு எழுத்தாக்கத் திட்டம்".