விக்கிமூலம்:கலைஞர் நூற்றாண்டு எழுத்தாக்கத் திட்டம்

கலைஞர் மு. கருணாநிதி - தமிழ்நாடு அரசின் நாட்டுடைமை நூலுக்கான அரசாணை,
22 ஆகத்து 2024

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தம் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த, பன்முக ஆளுமை, “கலைஞர்” என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் பிறந்த நூற்றாண்டு நினைவை முன்னிட்டு, அவரது படைப்புகளை எழுத்தாக்கம் செய்யும் அரிய முயற்சி தொடங்கப்படவுள்ளது. இந்த முயற்சியின் முக்கியத்துவத்தையும், அதன் தாக்கத்தையும் உணர்ந்து, அதற்கு ஆதரவளிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

கலைஞரின் எழுத்துக்கள் - ஒரு மாபெரும் அறிவுக் களஞ்சியம்

தொகு

கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்கங்களை உள்ளடக்கியுள்ளன. இவை தமிழ் மொழி, இலக்கியம், சமூகம், அரசியல், வரலாறு, கலை எனப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பன்முக அறிவுக் களஞ்சியங்கள். ஆனால், இந்த அரிய படைப்புகள் தற்போது வெறும் ஒளிவருடப்பட்ட (scanned) படிமங்களாக மட்டுமே உள்ளன. இதுவே, படிமங்களாக இல்லாமல் கணினி உரைகளாக இருந்தால் அவற்றின் பயன்பாட்டையும், அணுகல் தன்மையையும் பெரிதும் அதிகரிக்கும்.

கலைஞர் கருணாநிதியின் படைப்புகளை எழுத்தாக்கம் செய்வது என்பது வெறும் தொழில் நுட்ப முயற்சி மட்டுமல்லாது, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் அறிவுச் செல்வத்தை பாதுகாக்கும் ஒரு முக்கியமான கலாச்சார முயற்சியாகும். இம்முயற்சிக்கு ஆதரவளிப்பது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாகும். இது தமிழ் மொழியின் எதிர்காலத்திற்கும், பின் வரும் தலைமுறைக்கும் நாம் விட்டுச் செல்லும் அரிய கொடையாக அமையும். கலைஞரின் எழுத்துகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து, அவர்களை உயர்ந்த சாதனைகளை நோக்கி வழி நடத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

எழுத்தாவணப் போட்டி

தொகு

இந்த ஆண்டு கலைஞர் பிறந்து நூற்றாண்டுகள் ஆவதால், கலைஞரின் படைப்புகளை மெய்ப்புச் செய்து எழுத்தாக்கம் செய்வதின் முக்கியதுவத்தின் காரணமாக நூறு நாள் போட்டி ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் அதிகமாக மெய்ப்பு செய்யும் பயனர்களுக்கு பரிசுகளும், போட்டியில் நடுவர்களாகச் செயல்படுபவர்களுக்கு கௌரவத் தொகையும் வழங்கப்படும். மேலும் மொத்தமாக நூறு நாட்கள் முடிவில், அதிகப் பக்கம் மெய்ப்பு செய்த மூவருக்குச் சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.

விதிகள்

தொகு

இது குறித்து விக்கிமூலம் பேச்சு:கலைஞர் நூற்றாண்டு எழுத்தாக்கத் திட்டம் என்ற இணைப்பில் உரையாடப்படுகிறது. பிறகு, தமிழ் விக்கிமூலத்தாரின் ஒருமித்த எண்ணம் (community consensus) பின்பற்றப்பட்டு, இப்போட்டி நடைபெறும். எனவே, இப்போட்டி சிறப்பாகவும், முன்மாதிரியாவும் இருக்க, உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.

  • விதி 1 :  ஆசிரியர்:மு. கருணாநிதி/நூற்பட்டியல் அட்டவணைவைகளுக்கு மட்டுமே, பிழைத் திருத்தம் போட்டி நடைபெறும். பிற எழுத்தாளர்களின் நூல்கள் இப்போட்டியில் இல்லை.
  • விதி 2 : மேலடி, கீழடி அதற்கான பெட்டியில் இடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • விதி 3 : அச்சுப்பக்கத்தில் இருக்கும், ஒரு சொல்லானது, வாக்கியத்தின் முடிவில் பாதியும், அடுத்த வாக்கியத்தில் மீதியும் பிரிந்து இருந்தால் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
    • எடுத்துக்காட்டு: பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/74 என்ற பக்கத்தில் இருந்து கீழ்கண்ட தரவுகள் காட்டப்பட்டுள்ளன.

மாற்றுக் கட்சியினரைத் தாக்கும் எழுத்தையும் பேச்
சையும், மாற்றுக் கட்சியினரே ரசிக்க வேண்டும். வெளிப்
படையாக இல்லாவிட்டாலும் ரகசியமாகவாவது அவர்
கள் அதனை ரசிக்கும் அளவுக்கு எழுதிட வேண்டும் - பேசிட
வேண்டும்!

என்ற அச்சானது கீழுள்ள தடிமனான சொற்கள் போன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தரவுகள் கணினி சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்பட, இவ்விதி முக்கியமானது ஆகும்.

மாற்றுக் கட்சியினரைத் தாக்கும் எழுத்தையும் பேச்சையும், மாற்றுக் கட்சியினரே ரசிக்க வேண்டும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ரகசியமாகவாவது அவர்கள் அதனை ரசிக்கும் அளவுக்கு எழுதிட வேண்டும் - பேசிட வேண்டும்!

எனவே, ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்தினையும் முதலில் பாருங்கள். அதனைச் சீர்செய்த பின்பு, பிற எழுத்துப் பிழைகள் நீக்குங்கள்.
  • விதி 4 : மெய்ப்பு செய்த பக்கங்கள் எழுத்துப் பிழையின்றி, இயன்ற வரை வடிவக் குறைபாடின்றி இருத்தல் வேண்டும்.
  • விதி 5 : சரியாகச் செய்யாமல் இருக்கும் நிலையில், பக்க நிலை மாற்றப்பட்டிருந்தால் எதிர்மறை மதிப்பெண்.
  • விதி 6 : பரிசுக்கு தகுதியாக குறைந்தது 50 பக்கங்களாவது முழுவதும் சரியாக மெய்ப்பு செய்ய வேண்டும்.
  • விதி 7 : நடுவர்களின் முடிவே, இறுதியானதாக இருக்கும்.
  • விதி 8 : பரிசுத் தொகை பணத்தொகையாக அல்லாமல், அத்தொகை மதிப்புள்ள சீட்டாகவோ, வேறு வடிவிலோ வழங்கப்படும்.

பரிசு மதிப்பீடு

தொகு
எண் பரிசுகள் முதல் மாதம் இரண்டாம் மாதம் மூன்றாம் மாதம் மூன்று மாத கால முடிவில் சிறப்புப் பரிசு
1 முதல் பரிசு 5000 5000 5000 10000
2 இரண்டாம் பரிசு 4000 4000 4000 8000
3 மூன்றாம் பரிசு 3000 3000 3000 6000
4 ஊக்கப் பரிசு 1000 1000 1000
5 ஊக்கப் பரிசு 1000 1000 1000
6 ஊக்கப் பரிசு 1000 1000 1000
7 ஊக்கப் பரிசு 1000 1000 1000
8 ஊக்கப் பரிசு 1000 1000 1000
9 ஊக்கப் பரிசு 1000 1000 1000
10 ஊக்கப் பரிசு 1000 1000 1000
11 ஊக்கப் பரிசு 1000 1000 1000
12 ஊக்கப் பரிசு 1000 1000 1000
13 ஊக்கப் பரிசு 1000 1000 1000
14 ஊக்கப் பரிசு 1000 1000 1000
15 ஊக்கப் பரிசு 1000 1000 1000
16 நடுவர் கௌரவத் தொகை 1 5000 5000 5000
17 நடுவர் கௌரவத் தொகை 2 5000 5000 5000
மொத்தம் 34000 34000 34000 24000
தொழில்நுட்ப உதவி, மின் சான்றிதழ் முதலிய இதரச் செலவுகள் 74000 ??? இது குறித்து முடிவாக இல்லை. இங்கு உரையாடப்படுகிறது
மொத்தக் கூட்டுத்தொகை 200000

நிதியுதவி

தொகு

இத்திட்டத்திற்கு மேற்கண்ட நிதியுதவி தேவைப்படுகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பு செய்பவர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ், நிதியுதவியாளரின் பெயருடன் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள்

தொகு
  1. -- Balajijagadesh (பேச்சு) 18:46, 28 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  2. -- TI Buhari (பேச்சு) 19:35, 28 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]
  3. -- கு. அருளரசன் (பேச்சு) 10:29, 30 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

மேம்பாடு வேண்டுபவர்கள்

தொகு
  1. பல போட்டிகள் நடந்துள்ளன. காண்க: பகுப்பு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4 அவற்றை விட, இப்போட்டி சிறப்பாக அமைய, விதிகள் இன்னும் தெளிவாக, எடுத்துக்காட்டுகளுடன் இருக்க வேண்டும். இறுதியாக அவ்விதிகள் சமூக ஒப்புதல் பெறப்பட வேண்டும். --Info-farmer (பேச்சு) 02:28, 8 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  2. கலந்துரையாடி விதிகளை மேம்படுத்தி நடத்துதல் வேண்டும்.--TVA ARUN (பேச்சு) 06:12, 15 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  3. எனது முன்மொழிவுகள்
  • ஒரு பக்கத்தில் மூன்று பிழைகளுக்கு மேல் இருந்தால் அப்பக்கத்திற்கு மதிப்பெண்கள் அளிக்ககூடாது. இதனால் தரமற்ற பக்கங்களை குறைக்கலாம்.
  • போட்டிக்கு முன் மெய்ப்பு பார்க்க விக்கிமூல பயிலரங்கை இணைய வழியாக நடத்தலாம். புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • பலர் ஒரு நூலை மெய்ப்பு செய்வதால் வடிவமைப்புகள் மாறுபடலாம். எடுத்துகாட்டாக அத்தியாய தலைப்பிற்கு ஒருவர் larger வார்ப்புரு இட்டால் இன்னொருவர் மற்றைய தலைப்பிற்கு x-larger இடுவார். இதனால் மின்னூல் நேர்த்தியாக இருக்காது. இதை சரி செய்வதற்கு நூல்களுக்கு இடவேண்டிய வடிவமைப்பு பற்றி அட்டவணை பேச்சு பக்கத்தில் குறிப்பிட வேண்டும். புதியவர்கள் பலர் இணைவதால் துப்பரவு பணியடர்வை இது குறைக்கும். --Fathima (பேச்சு) 14:37, 18 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

பின்னூட்டம்

தொகு

இத்திட்டத்தைக் குறித்த பின்னூட்டத்தை பேச்சுப் பக்கத்தில் வழங்கி, திட்டத்தை மெருகேற்ற உதவிடுங்கள்.