விக்கிமூலம் பேச்சு:விக்கித்திட்டம் கலைக்களஞ்சியம்
கலைக்களஞ்சியத்தில் துணைப்பக்கங்களின் அமைப்பு மற்றும் சோதனை
தொகுவணக்கம் @Arularasan. G கலைக்களஞ்சியத்தின் பத்து தொகுப்புகளுக்கும் ஏற்றவாறு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒன்றுக்கு இப்பக்கத்தைப் பார்க்கலாம். இப்பக்கம் இன்னும் முழுமை பெறவில்லை. அணைத்து அ பக்கங்களும் வரவில்லை என்று தான் நினைக்கிறேன். மேலும், இப்பக்கத்தில் உள்ள அணைத்துக் கட்டுரைகளையும் நான் முடிந்த வரை சரிபார்த்துள்ளேன். கலைக்களஞ்சியம்/தொ 1:2, கலைக்களஞ்சியம்/தொ 1:3, கலைக்களஞ்சியம்/தொ 1:4 பக்கங்களில் உள்ள கட்டுரைகளில் தலைப்பு மேலடி மாற்றியுள்ளேன். ஆனால் அக்கட்டுரைகளின் மேலடிகள் சரியான விக்கிப்பீடியா பக்கத்திற்குதான் செல்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். இப்பக்கத்தில் இல்லாத மேலும் சில நூறு கட்டுரைகளையும் சரிபார்க்க வேண்டும். சரிபார்க்க வேண்டிய கட்டுரைகளை இங்கு கீழே இணைக்கிறேன். சரிபார்த்தப்பின் இக்கட்டுரைப்பட்டியலை நீக்க வேண்டுமானால் நீக்கி விடலாம்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். -- Balajijagadesh (பேச்சு) 05:07, 13 அக்டோபர் 2022 (UTC)
@Balajijagadesh கலைக்களஞ்சியத்தின் பத்து தொகுப்புகளுக்கும் ஏற்றவாறு பக்கங்கள் உருவாக்கியதற்கு பாராட்டுகள். //கட்டுரைகளில் தலைப்பு மேலடி மாற்றியுள்ளேன். ஆனால் அக்கட்டுரைகளின் மேலடிகள் சரியான விக்கிப்பீடியா பக்கத்திற்குதான் செல்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அனைத்து கட்டுரைகளும் சரியான விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்வதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் இக்கலைக்களஞ்சியத்தில் உள்ள தலைப்புக்கும் தற்போது விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் தலைப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விக்கிப்பீடியாவில் பல தலைப்புகள் கிரந்தம் தவிர்த்தனவைகளாகவும் உள்ளதால் அதில் சிக்கல் உள்ளது. எனவே விக்கிப்பீடியா பக்கத்துக்கு இணைப்பு தருவதில் இவ்வாறு மாறுபாடு உள்ள பக்கங்களுக்கு விக்கி மூலத்தில் ஆசிரியர் பக்கங்களுக்கும், விக்கிப்பீடியாவில் நபர்கள் குறித்த பக்கங்களுக்கும் உள்ளிணைப்பு தருவது போல நம் விருப்பப்படி தலைப்பை சேர்க்கும்படி செய்தால் வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 06:21, 14 அக்டோபர் 2022 (UTC)
- @Arularasan. G வணக்கம். தாங்கள் கூறிய வசதி {{கக}} வில் உள்ளது. அந்த வார்ப்புரு பக்கத்திற்கு சென்றால் எடுத்துக்காட்டுக்களைப் பார்க்கலாம். அது போல் மேலே குறிப்பிட்ட கட்டுரைகளைச் சரிபார்க்க வேண்டும். மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 11:48, 14 அக்டோபர் 2022 (UTC)
@Balajijagadesh தாங்கள் பட்டியலிட்டு குறிப்பிட்ட கட்டுரைகளைச் சரிபார்த்துவிட்டு அந்த பட்டியலை நீக்கிவிட்டேன் நன்றி.--அருளரசன் (பேச்சு) 14:40, 16 அக்டோபர் 2022 (UTC)
@Balajijagadesh கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி முழுவதும் பக்க ஒருங்கிணைவு செய்யப்பட்டுவிட்டது. மின் நூலின் முதல் பக்கத்தில் எஞ்சியுள்ள பணிகளை முடித்துத் தாருங்கள் நன்றி--அருளரசன் (பேச்சு) 19:21, 16 நவம்பர் 2022 (UTC)