பெருங்கதை/2 19 தேவிக்கு விலாவித்தது

(2 19 தேவிக்கு விலாவித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 19 தேவிக்கு விலாவித்தது

உதயணன் தீயில் விழச் செல்லல்

தொகு

ஏற்றெழுந் ததன்பி னினியோர் குழீஇ
ஆற்றல் சான்ற நூற்றுறை மருங்கிற்
பழையவும் புதியவு முழைவயிற் பிரியார்
காரண முரைப்பவு மொர்வரை நில்லான்
அந்தீங் கிளவியெ னம்பிணை மூழ்கிய 5
செந்தீ யானும் புகுவென் சென்றென
முரிந்த கந்தி னெரிந்த வேயுள்
அரிந்த யாப்பிற் சொரிந்த கடுங்காழ்
கரிந்த மாடங் காவலன் குறுக

தோழர் விலக்கல்

தொகு

ஆரளைச் செறிந்த வருஞ்சின நாகத்துப் 10
பேரழற் காணிய பேதை மாந்தர்
வாயின் மருங்கிற் றீயெரி கொளீஇயது
செயிர்படு பொழுதிற் செம்முக நின்றுதம்
உயிரொழிந் ததுபோ லுறுதி வேண்டார்
அடங்கா ரடக்கிய வண்ணன் மற்றுநின் 15
கடுஞ்சினம் பேணாக் கன்றிய மன்னர்
கறுவு வாயிற் குறுதி யாக
இகப்ப வெண்ணுத லேத முடைத்தே
ஆகிய தறியு மரும்பொருட் சூழ்ச்சி
யூகியி னல்லதை யுதயண குமரன் 20
உள்ள மிலனென வெள்ளைமை கலந்த
புறத்தோ ருரைக்கும் புன்சொன் மாற்றம்
அகத்தோர்க் கென்று மகஞ்சுட லானா
தாங்கன மந்நிலை யறிந்துமனங் கவலா
தோங்கிய பெருங்குலந் தாங்குதல் கடனாப் 25
பூண்டனை யாகுதல் பொருண்மற் றிதுவென
மாண்ட தோழர் மாற்றுவனர் விலக்கக்

உதயணன் வாசவதத்தையின் உடம்பைக் காணவிரும்பல்

தொகு

காலங் கலக்கக் கலக்கமொ டுராஅய்
ஞால முழுது நவைக்குற் றெழினும்
ஊர்திரை யுடைய வொலிகெழு முந்நீர் 30
ஆழி யிறத்தல் செல்லா தாங்குத்
தோழரை யிகவாத் தொடுகழற் குருசில்
சூழ்வளை முன்கைக் சுடர்க்குழை மாதர்
மழைக்கா லன்ன மணியிருங் கூந்தல்
அழற்புகை சூழ வஞ்சுவன ணடுங்கி 35
மணிக்கை நெடுவரை மாமலைச் சாரற்
புனத்தீப் புதைப்பப் போக்கிடங் காணா
தளைச்செறி மஞ்ஞையி னஞ்சுவனள் விம்மி
இன்னுயி ரன்ன வென்வயி னினைஇத்
தன்னுயிர் வைத்த மின்னுறழ் சாயல் 40
உடப்புச் சட்டக முண்டெனிற் காண்கம்
கடுப்பழ லவித்துக் காட்டுமின் விரைந்தெனக்
கரிப்பிணங் காணார் காவல ரென்னும்
மொழிப்பல காட்டவு மொழியா னழிய

உருமண்ணுவாவின் செயல்

தொகு

முன்னைய ராதலின் முதற்பெருந் தேவி 45
இன்னுயி ரிகப்ப விடாஅ ரிவரென
மன்ன குமரன் மதித்தன னாயின்
எண்ணிய சூழ்ச்சிக்கிடையூ றாமெனத்
தவலரும் பெரும்பொரு ணிலைமையி னெண்ணி
உலைவில் பெரும்புக முருமண் ணுவாவிரைந் 50
தாய்புக ழண்ணன் மேயது விரும்பி
நீள்புடை யிகந்துழி ஞாயி லொதுங்கிக்
கோயில் வட்டத் தாய்நலங் குயின்ற
பள்ளிப் பேரறை யுள்ளகம் புக்காங்
கழிவுறு சுருங்கை வழிமுதன் மறைஇ 55
விம்முறு துயரமொடு விளிந்துயிர் வைத்த
குய்ம்மனத் தாளர் குறைப்பிணங் காட்டித்
தாயுந் தையலுந் தீயுண விளிந்தமை
மாய மன்றென மன்னனைத் தேற்றி
மணியு முத்து மணியு மிழந்துதிர்ந் 60
தாரக் கம்மஞ் சாரவீற் றிருந்து
கொள்கைக் கட்டழ லுள்ளுற மூட்டி
மாசுவினை கழித்த மாதவர் போலத்
தீயகத் திலங்கித் திறல்விடு கதிரொளி
சேடுறக் கிடந்த செம்பொற் செய்கலம் 65
பொன்னணி மார்பன் முன்னண விடுதலின்

உதயணன் வாசவதத்தையின் பொன்னரிமாலை முதலியவற்றை நோக்கிப் புலம்பல் பொன்னரிமாலை

தொகு

ஒண்செந் தாமரை யொள்ளித ழன்ன
பண்கெழு விரலிற் பன்முறை தொகுத்து
நான மண்ணி நீனிறங் கொண்டவை
விரித்துந் தொகுத்தும் வகுத்தும் வாரியும் 70
உளர்ந்து மூறியு மளந்துகூட் டமைத்த
அம்புகை கழுமிய வணிமா ராட்டம்
வெம்புகை சூழ்ந்து மேலெரி யூர
விளிந்தது நோக்கி யொழிந்தனை யாதலின்
நன்னுதன் மாதர் பின்னிருங் கூந்தற் 75
பொன்னரி மாலாய் பொருளிலை யென்றும்

நெற்றிப் பட்டம்

தொகு

கொடியு மலருங் கொழுந்துங் குலாஅய்
வடிவுபெற வகுத்த மயிர்வினைச் சிப்பத்து
வத்தவ மகடூஉச் சித்திரத் தியற்றிய
பல்வினைப் பரிசரத் தெல்லை யாகி 80
மதிப்புறங் கவைஇய வானவிற் போல
நுதற்புறங் கவவி மிகச்சுடர்ந் திலங்கும்
சிறப்புடைப் பட்டஞ் சிறியோர் போல
இறப்புக் காலத்துத் துறப்புத்தொழி றுணிந்த
வன்கண்மை பெரிதெனத் தன்கணு நோக்கான் 85
பட்டப் பேரணி விட்டெறிந் திரங்கியும்

திலகம்

தொகு

பனிநாட் புண்ணியத் தணிபெறு திங்கள்
அந்தியுண் முளைத்த வெண்பிறை போலச்
செந்தீச் சிறுநுதன் மூழ்கத் தீந்து
நிலமிசை மருங்கின் வீழ்ந்தனை யோவெனத் 90
திலக நோக்கிப் பலபா ராட்டியும்

காதணி

தொகு

வெண்மதிக் கைப்புடை வியாழம் போல
ஒண்மதி திகழ வூச லாடிச்
சீர்கெழு திருமுகத் தேரணி யாகிய
வார்நலக் காதினுள் வனப்புவீற் றிருந்த 95
நன்பொற் குழைநீ நன்னுதன் மாதரை
அன்பிற் கரந்தே யகன்றனை யோவெனப்
போதணி கூந்தற் பொற்பூம் பாவை
காதணி கலத்தொடு கவன்றனன் கலங்கியும்

கண்கள்

தொகு

பொய்கையிற் றீர்ந்து புன்கண் கூர 100
எவ்வ மாந்த ரெரிவா யுறீஇய
பொருங்கயல் போல வருந்துபு மிளிராக்
களைகண் பெறாஅக் கலக்க நோக்கமொடு
தளையவிழ்ந் தகன்ற தாமரை நெடுங்கண்
அகையற வருளா யாகிக் கலிழ்ந்து 105
செவ்வழல் புதைத்திடச் சிதைந்தனை யோவென
அவ்விழிக் கிரங்கி வெவ்வழ லுயிர்த்தும்

நகில்கள்

தொகு

செஞ்சாந்து வரித்த சின்மெல் லாகத்
தஞ்சாய் மருங்குல் வருந்த வடிபரந்து
வீங்குபு செறிந்த வெங்கண் வனமுலை 110
பூங்கொடிப் பொற்கலம் போழ்ந்துவடுப் பொறிப்ப
மகிழ்ச்சி யெய்தி மனமொன் றாகிய
புணர்ச்சிக் காலத்து மதர்த்துமுகஞ் சிவப்ப
நோய்கூர்ந் தழியு நீயே யளியை
வேக வெவ்வழல் வெம்புகை யணிந்த 115
பொங்கழற் போர்வை போர்த்ததோ வெனவும்

பலவகை ஆபரணங்கள்

தொகு

இலைப்பெரும் பூணு மிதயவா சனையும்
நலப்பெருங் களிகையு நன்முத் தாரமும்
பன்மணிப் பூணுஞ் சின்மணித் தாலியும்
முத்தணி வடமுஞ் சித்திர வுத்தியும் 120
நாணுந் தொடரு மேனைய பிறவும்
மெய்பெறப் புனைந்து கைவல் கம்மியச்
செய்கையிற் குயிற்றிய சித்திரங் கொளீஇப்
பூண்ணி யுள்ளு மாண்ணி யுடையவை
ஆகக் கேற்ப வணிகம் வாராய் 125
வேகத் தானை வேந்தன் மகளே
தனித்தா யியங்கலுந் தாங்கினை யோவெனப்
பனித்தார் மார்பன் பலபா ராட்டியும்

தோளணிகள்

தொகு

ஓங்குவரை மருங்கி னொளிபெற நிவந்த
காம்பொசிந் தன்ன கவினை யாகிய 130
நலங்கிளர் தடந்தோ ணவையறச் சேஎந்
தலங்குமலர்த் தாமரை யகவயி னமர்ந்த
திருமக ளிருக்கை யுருவுபடக் குயிலாக்
காமுறப் புனைந்த தாம முளப்படப்
பொறிவரி யொழுக்கம் போலு மற்றிம் 135
மறியிலைக் கம்மமொடு மகரங் கவ்விக்
கொடியொடு துளங்கி யடிபெற வகுத்த
அருமணிக் கடகமொ டங்குலி யழியச்
செற்றுபு சிறந்த சிறப்புமுள் ளாது
கற்றதெ னமர்ந்த கலப்பின வாகியும் 140
பற்றுவிட் டகறல் பண்போ வெனவும்

இடையணி முதலியன

தொகு

பவழக் காசொடு பன்மணி விரைஇத்
திகழக் கோத்த செம்பொற் பாண்டில்
கைவினைக் கொளுவிற் செய்துநலங் குயின்ற
எண்ணாற் காழ்நிரை கண்ணுமிழ்ந் திலங்க 145
உருவக் கோலமொ டுட்குவீற் றிருந்த
அரவுப்பை யன்ன வைதேந் தல்குல்
புகைக்கொடிப் புத்தேள் பொருக்கென வூட்டி
அழற்கொடி யரத்த மறைத்தவோ வெனவும்
மணிக்க ணன்ன மணித்தகு பெடையைப் 150
பயிலிதழ்ப் பனிநீர்ப் பக்க நீக்கி
வெயில்கெழு வெள்ளிடை விட்டிசி னாங்கு
மணியரிக் கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
……
நின்னணி காண்கஞ் சிறிது சிறிதுலாஅய்
மராஅந் துணரு மாவின் றழையும் 155
குராஅம் பாவையுங் கொங்கவிழ் முல்லையும்
பிண்டித் தளிரும் பிறவு மின்னவை
கொண்டியான் வந்தேன் கொள்குவை யாயின்
வண்டிமிர் கோதாய் வாரா யெனவும்

முன்னிகழ்ச்சிகளை நினைத்துப் புலம்பல்

தொகு

அணிவரைச் சார லருவி யாடியும் 160
பனிமலர் கொய்தும் பாவை புனைந்தும்
திருவிளை மகளிரொ டொருவழி வருவோய்
மருவின் மாதவன் மாசின் மடமகள்
விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பிற்
றாமந் தொடுத்தியான் கொடுத்தது தவறெனக் 165
காம வேகங் கடுத்த கலப்பிடை
முகத்தே வந்தோர் முசுக்கலை தோன்ற
அகத்தே நடுங்கி யழற்பட வெய்துயிர்த்
தஞ்சி யடைந்த வஞ்சி றேமொழிப்
பஞ்சி மெல்லடிப் பாவாய் பரந்த 170
கடுந்தீக் கஞ்சாது கரத்தியோ வெனவும்
அங்கண் மாநிலத் தகன்றுயிர் வாழ்வோர்
வன்க ணாள ரென்றுபண் டுரைப்போய்
நின்க ணம்மொழி நிற்ப வென்கட்
புன்க ணோக்காது போதியோ வெனவும் 175
இளைப்புறு ஞமலி நலத்தகு நாவிற்
செம்மையு மென்மையுஞ் சிறந்துவனப் பெய்தி
அம்மை முன்னு மணிபெறப் பிணங்கி
இலைபடக் குயிற்றிய வெழிலொளிக் கம்மத்துத்
தலைவிரற் சுற்றுந் தாதணி வளையமும் 180
வட்ட வாழியுங் கட்டுவட விணையும்
மகர வாயொடு நகைபெறப் புனைந்த
விரலணி கவ்வி நிரலொளி யெய்திப்
பூவடர் மிதிப்பினும் புகைந்தழ லுறூஉம்
சேவடிக் கேற்ற செம்பொற் கிண்கிணி 185
பாடகக் குரலொடு பரடுபிறழ்ந் தரற்றக்
கழனிக் கண்பின் காயெனத் திரண்ட
அழகணி சிறுதுடை யசைய வொதுங்கி
ஆயத் திறுதி யணிநடை மடப்பிடி
கானத் தசைந்து தானத்திற் றளர்ந்தபிற் 190
கரிப்புற் பதுக்கையுங் கடுநுனைப் பரலும்
எரிப்புள் ளுறீஇ யெஃகி னியலவும்
எற்கா முறலி னேத மஞ்சிக்
கற்கால் பயின்ற காலவி சில்லதர்
நடுக்க மெய்தி நடப்பது நயந்தோய் 195
இடுக்கண் யான்பட வென்னையு நினையாது
கடுப்பழ லகவயிற் கரத்தியோ வெனவும்
படிகடந் தடர்ந்த பல்களிற் றியானை
இடியுறழ் முரசி னிறைமகன் பணிப்ப
நூலமை வீணைக் கோலமை கொளீஇக் 200
கரணம் பயிற்றினுங் காந்தண் முகிழ்விரல்
அரணங் காணா வஞ்சின போலப்
பயத்தி னீங்காச் சிவப்புள் ளுறுவின
அடைதற் காகா வாரழற் செங்கொடி
தொடுதற் காற்றத் துணிந்தவோ வெனவும் 205
வடிக்கண் மாதர் முடிக்கல முதலா
அடிக்கலந் தழீஇ முடித்தார் மார்பன்
அரற்றியு மயர்ந்து முரற்றியு முயிர்த்தும்
வீழ்ந்து மெழுந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும்
செருவடு செங்கண் டெண்பனி சிதறி 210
உருவுடை யகலத் தூழூ ழுறைத்தரக்
கோல விரும்பிடி குழிப்பட் டாழ
நீல வேழ நினைந்துழன் றாங்கு
மாலை மார்பன் மாதரைக் காணா
தின்னவை பிறவும் பன்முறை யரற்றச் 215

தோழர் செயல்

தொகு

செறுநர் முன்னர்ச் சீர்மை யன்றென
உறுநர் சூழ்ந்த வொருபா லொடுங்கித்
தேரும் புரவியும் வார்கவுள் யானையும்
மறப்படை யிளையரொடு திறப்பட வகுத்துப்
போரணி கலமும் பொருளு நல்கி 220
ஆருணி யரச னடுதிற லாண்டகை
அற்ற மறியாச் செற்றச் செய்கையொடு
மேல்வர வுண்டெனின் மீளி வாட்டிச்
சென்று நெருங்காது பின்றிநும் விடாது
குன்றக மடுத்துக் கூழவ ணொடுக்கி 225
யாப்புற நிற்கெனக் காப்புறு பெரும்படை
திசைசெலப் போக்கி யசைவி லாணமை
மன்பெருங் குமரனை மரபுளிக் காட்டித்
துன்பந் தீரிய தொடங்கினர் துணிந்தென்.

2 19 தேவிக்கு விலாவித்தது முற்றிற்று.